ஜாமீன் மனு., ஒரே நாளில் இரு தீர்ப்புகள்., முன்னாள் அமைச்சர் வெளியில் வருவதில் சிக்கல்.! 

திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் உத்தரவில் தெரிவித்தது. காயம்பட்ட அடைந்ததாக கூறப்பட்ட திமுக பிரமுகர் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதால், காவல்துறை தரப்பில் ஜெய்குமாருக்கு கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க சம்மதம் தெரிவித்ததையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் … Read more

அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் மண்டையை உடைப்பதாக மிரட்டல் : சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.!

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு உட்பட்ட 17 பேரூராட்சிகளில், 16 பேரூராட்சிகள் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.  திசையன்விளை பேரூராட்சியில் மட்டும் அதிமுக அதிக வார்டுகளில் கைப்பற்றியுள்ளது. திசையன்விளை பேரூராட்சியின் மொத்தமுள்ள 18 வார்டுகளில் ஒன்பது இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது. தலா இரண்டு இடங்களில் திமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். பாஜக, தேமுதிகவை சேர்ந்த வேட்பாளர்கள் தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். சுயச்சை வேட்பாளர்கள் மூன்று இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதனிடையே பேரூராட்சி … Read more

அரசியல் நாகரீகத்தை திமுக தனது கூட்டாளியான கம்யூனிஸ்ட் எம்.பி.,யிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் – பாஜக ஜி கே நாகராஜ்.!

பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் ஜி கே நாகராஜ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “ஈஷா நிகழ்வில் கலந்துகொள்வதற்கு கோவை வருகைபுரிந்த சபாநாயகர் திரு.ஓம் பிரில்லா,வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.Dr.ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோரை கோவை விமான நிலையத்தில் வரவேற்று, உடனிருந்து உணவருந்தி உபசரித்தார் எனது நீண்டகால நண்பரும் ரயில்வே போராட்டகுழுவிற்கு துணைநின்ற கோவை கம்யூனிஸ்ட் எம்.பியுமான மரியாதைக்குரிய திரு. P.R.நடராஜன். சபாநாயகர்,ஜவுளித்துறை அமைச்சர், ரயில்வேதுறை இணை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் என பலர் வருகைபுரிந்தும், கொங்குமண்டலத்தில் திமுக … Read more

ஏமாற்ற நினைக்கும் தி.மு.க அரசுக்கு கண்டனம் – டிடிவி தினகரன்.!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக பணி நியமனத்திற்கு காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி வேலை வழங்காமல் ஏமாற்ற நினைக்கும் தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.  வேலை வாய்ப்பக முன்னுரிமையையும் (Employment Seniority) பின்பற்றாமல், தகுதித்தேர்வில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றதையும் கருத்தில் கொள்ளாமல் மீண்டும் தேர்வு எழுதவேண்டுமென அரசாணை பிறப்பித்திருப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.  ஆசிரியர் வேலை … Read more

வலிமை டிக்கெட் அதிக விலைக்கு விற்றதால் ரசிகர் செய்த விபரீத செயல்..!

திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையில் கங்கா திரையரங்கில் இயங்கி வருகிறது. இந்த திரையரங்கில் கடந்த 24ம் தேதி வலிமை சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.  அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளார்.  இதனால், ஒருவர் காயமடைந்தார். இதனை அடுத்து, வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். நெல்லையை சேர்ந்த லட்சுமணன் என்பவரை கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அஜித் ரசிகர் மன்றத்தை சேர்ந்த … Read more

கோவில்களில் ஆடை கட்டுப்பாடு..?! பொதுமக்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

வழிபாட்டுத்தலங்களில் ஆடை கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதுபற்றிய விசாரணையின்போது இந்து கோவில்களுக்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்து மதத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உடையணிந்து வருகின்றனர். இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழகத்தின் ஒரு சில கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமலில் இருக்கிறது. இது குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோவில்களையும் விளம்பர பலகைகள் வைக்க … Read more

#BigBreaking || இந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் எப்படி ஒழுக்கக்கல்வி நடத்துவார்கள்? சாட்டையை சுழற்றும் நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம்.! 

ஐபிஎல் ஏலம் போன்று ஆசிரியர் பணியிட மாறுதல் ஏற்படுகிறதா? 10 லட்சம் ரூபாய் முதல் கொடுத்து பணியிடமாறுதல் பெற்றவர்கள் மாணவர்களுக்கு எந்த வகையில் ஒழுக்க கல்வியை கற்பிப்பார்கள்? என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் கேள்வி எழுப்பி உள்ளார். இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பான வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில்,  “லஞ்சம் கொடுப்பதன் அடிப்படையில் மட்டுமே அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்வு மூலமாக … Read more

தொழிலில் நஷ்டம்.. பங்குசந்தை முதலீட்டாளர் மனைவியுடன் எடுத்த விபரீத முடிவு..!

பங்குசந்தை நஷ்டத்தால் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் பழைய குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு திருமணமாகி லாவண்யா  என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். அவர் பங்கு சந்தை முதலீட்டாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், பங்கு பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், நாகராஜன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் குழந்தைகளை உறவினர்கள் வீட்டில் விட்டு மனைவியுடன் தற்கொலை செய்து … Read more

திமுக கொடி கம்பத்தின் அருகே இருந்த விசிக கொடிக்கம்பம் மாயம்., போராட்டத்தில் குதித்த விசிகவினர்.! 

நள்ளிரவில் நடப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிகம்பம் காலையில் காணாமல் போனதால், அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பாலூரில் இன்று அதிகாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிகம்பம் காலையில் காணாமல் போன சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலூர் கடைத்தெருவில் விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்களது கட்சியின் கொடி கம்பம் நடுவதற்கு முயற்சித்தனர். அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெறிக்கவே சம்பவ இடத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் … Read more

5-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்க முடிவு.!

முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெற இருக்கிறது. 18ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் தாக்கல் செய்ய உள்ளனர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அமைச்சரவை கூட்டம் கூடி அந்த பட்ஜெட்டுக்கு … Read more