அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் 2024 புது வருடத்தில் தமது பணிகளை(01) ஆரம்பித்தனர்
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் திணித் சிந்தாக கருணாரத்னவின் தலைமையில் அனைத்து திணைக்களத்தின் சகல உத்தியோகத்தர்களும் ஒன்றுகூடியதுடன் அங்கு பணிப்பாளர் நாயகத்தினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டு, அரச சேவை சாத்தியப்பிரமாணத்தையும் வாசித்தனர். இதன்போது உரையாற்றிய அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் திணித் சிந்தாக கருணாரத்ன புது வருடம் அரசங்கத் தகவல் திணைக்களத்திற்கு விசேட பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படும் வருடம் எனக் குறிப்பிட்டார். சவால்களை வெற்றி கொள்வதற்கும், சந்தோசமாகவும், ஒத்துழைப்புடனும், வினைத்திறனாக செயற்பட உதவும் புதுவருடமாகட்டும் … Read more