நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ

நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நீர்ப்பாசன அமைச்சராக திருமதி பவித்ரா வன்னியாராச்சியும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் நேற்று (27) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

நீரை விற்கவோ, தனியார்மயமாக்கவோ எந்த நோக்கமும் இல்லை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

நீரின் தரத்தைப் பாதுகாக்கவும், செலவைக் குறைக்கவும் அரச-தனியார் கூட்டாண்மைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் நீரை விற்கவோ அல்லது தனியார்மயமாக்கவோ எவ்விதத் திட்டமும் இல்லை என்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிலைபேற்றுத் தன்மையைப் பேணுவதற்கு நீர்க் கட்டணங்களுக்கென சூத்திரம் ஒன்று அவசியப்படுவதாகவும், அதற்கான சூத்திரத்தை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று … Read more

எதிர்காலத்தில் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதாரத் துவாய்களை வழங்குவதற்கு நடவடிக்கை – கல்வி அமைச்சர்

கல்வி அமைச்சின் தலையீட்டுடன் எதிர்காலத்தில் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதாரத் துவாய்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (27) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். கிராமப் பகுதிகளில் குறிப்பாக மூன்று இலட்சம் பாடசாலை மாணவிகளை மையப்படுத்தியதாக இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கல்வி அமைச்சின் மீதான ஒதுக்கீட்டு … Read more

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நியமனம்!!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த (21) செவ்வாய்க்கிழமை குறித்த நியமனம் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏறாவூர்ப்பற்று, மண்முனை வடக்கு, மண்முனை தென் மேற்கு, போரதீவுப்பற்று, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழு தலைவராக இருந்து மக்களுக்கு சேவை புரிந்து கொண்டிருந்த நிலையில் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவராக ஜனாதிபதியினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா – 2022/2023 சம்பிரதாயபூர்வமாக நிறைவடைந்தது

“விளையாட்டு மக்களின் தேசியம், மதம் அல்லது நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒன்றிணைக்கிறது” என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் (நவம்பர் 24) இடம்பெற்ற 12ஆவது பாதுகாப்புச் சேவை விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இந்த விளையாட்டு நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்தார். இவ்வாண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் … Read more

தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அளவுகோல்களைத் தயாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது

தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அளவுகோல்களைத் தயாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது – தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு • பாதாள உலகத்தை முடக்குவதற்கு திறமையான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் தேவை – பொலிஸார் குழுவில் தெரிவிப்பு ஒரு சில நபர்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தனியார் பாதுகாப்புக் காவலர்களின் சேவைகளைப் பெறுவது குறித்துத் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் … Read more

மலையகத்துக்கான அபிவிருத்தியில் நீயா…நானா… என்ற போட்டி வேண்டாம் – அமைச்சர் ஜீவன் வலியுறுத்தல்

மலையக மக்களுக்கான அபிவிருத்தியில் நீயா, நானா என்ற போட்டி வேண்டாம். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மலையக பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே … Read more

நாளையிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடனான வானிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 நவம்பர் 27ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர் 26ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாளையிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. … Read more

விவசாயிகளுக்கான ”உறுமய ” காணி உறுதிப்பத்திரம் வழங்கும் திட்டமானது விவசாயிகளுக்கு அளிக்கும் கௌரவமாகும்

விவசாயிகளை பலப்படுத்தி விவசாயப் பொருளாதாரம் வலுப்படுத்தப்படும். விவசாய ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மீள உருவாக்குவதற்கு முன்னுரிமை -நொச்சியாகமவில் ஜனாதிபதி தெரிவிப்பு. ஒவ்வொரு கிராமத்தையும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேவையான வசதிகளை வழங்குவதற்காக விவசாய நவீனமயமாக்கல் சேவை நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவான “உறுமய” தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சியின் முதல் கட்டத்தை அனுராதபுரம் … Read more

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் 2023 நவம்பர் 26ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர் 25ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் … Read more