உக்ரேன் ரஷ்ய இராணுவ மோதல் சர்வதேச பொருளாதாரத்திற்கு பலத்த தாக்கம்

உக்ரேனின் நிலவும் யுத்த நிலைமை சர்வதேச பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நிதி நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அந்நாட்டின் எதிர்காலம் நம்பிக்கையற்ற நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. பொருளாதார பாதிப்பு தற்போது பாரியளவில் காணப்படுகின்றது. விசேடமாக ரஷ்யாவுக்கு எதிரான செயற்பாடுகள் பாரிய தடைகள் எதிர்காலத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். உக்ரேன் மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ள நாடுகளுக்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. யுத்தத்;தை முன்னெடுக்கத் தூண்டுவோரின் … Read more

நுண் நிதி தொழில் துறையை பாரிய தொழில் துறையாக மேம்படுத்தத் திட்டம்

நாட்டின் 91.7 சதவீதமான நுண் தொழில் முயற்சியாளர்கள் இருப்பதாக கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். இவர்களை பாரியளவிலான தொழில் முயற்சியாளர்களாக மேம்படுத்துவதன் தேவையை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர்  இவர்களுக்கான வசதிகளையும் வழங்கவுள்ளதாகத் தெரிவித்தார். இதன் காரணமாக இவ்வாறான நிலையங்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் 3 மடங்காக அதிகரிக்கும். இந்த துறை தொடர்பில் விசேட நிபுணர்களைத் தொடர்புபடுத்தி புதிய தொழில் முயற்சிகளை மீளக் கட்டியெழுப்புவதே அமைச்சரின் நோக்கமாகும்.

தனியார் போக்குவரத்து வாகனங்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபையில் எரிபொருள்

தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து டிப்போக்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூலம் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட 45 டிப்போக்கள் இதற்காகச் செயற்படுகின்றன. எதிர்வரும் தினங்களில் மேலும் சில டிப்போக்கள் இந்த முறையின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்று இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

தீகவாப்பி தூபியில் புனித சின்னங்கள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டன

தீகவாப்பி மஹா தூபியின் அரைக்கோளக் குவிமாடத்தில் புனித சின்னங்கள் வைக்கும் நிகழ்வு அம்பாறை தீகவாப்பிய ரஜமஹா விஹாரை வளாகத்தில் பாதுகாப்புச் செயலாளரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ‘தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவ ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் இன்று (மார்ச், 06) இடம்பெற்றது. ஶ்ரீ சம்போதி விஹாரையின் முன்னாள் விஹாரதிபதி காலஞ்சென்ற வண. தரணாகம குசலதம்ம தேரரின் 4வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூபியின் ‘சூடா மாணிக்கம்’ ஏந்திய வாகண பவனி கொழும்பு ஸ்ரீ … Read more

மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி வெற்றி

நியுசிலாந்தில் இடம்பெற்று வரும் மகளிர் உலகக் கிண்ண ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இன்று(06)  இடம்பெற்ற நான்காவது போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை வெற்றி கொண்டது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 43 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.  அதன்படி இந்தப் போட்டியில் இந்திய … Read more

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி:இந்திய அணி வெற்றி

சுற்றுலா இலங்கை அணிக்கும்இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ,இந்திய அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம்; நாள்இன்றாகும். முதலாவது இனிங்சிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 174 ஓட்டங்களைப்பெற்றிருந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இன்று (06) சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் … Read more

மனித உரிமைகள் பேரவை 49 ஆவது அமர்வு – இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் அறிக்கை

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கான இலங்கையின் நிரந்தர பணியகம் மனித உரிமைகள் கழகம் 49 ஆவது வழமையான அமர்வு இலங்கை குறித்த மனித உரிமை உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கை மீதான ஊடாடும் பேச்சுவார்த்தைகள் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ. பேரா. ஜி.எல். பீரிஸ் அவர்களின் அறிக்கை (ஜெனீவா, 04 மார்ச் 2022) தலைவர் அவர்களே, இலங்கை மீதான 46/1 தீர்மானமானது இக்கழகத்தின் பிரிக்கப்பட்ட வாக்குகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தீர்மானத்தின் ஆழமான குறைபாடுள்ள நடைமுறை மற்றும் … Read more

குருநாகல் பிரதமர் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் செயற்பாடுகளை கௌரவ பிரதமர் ஆராய்ந்தார்

இல.462, புத்தளம் வீதி, யந்தம்பலாவ, குருநாகல் எனும் விலாசத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள குருநாகல் பிரதமர் ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு நேற்று (05) முற்பகல் விஜயம் செய்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் அலுவலக செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்தார். இதன்போது கௌரவ பிரதமரின் தலைமையில் குருநாகல் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. சந்திப்பில் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து … Read more

எமது தம்மானந்த நாயக்க தேரர் பொலன்னறுவையில் மாத்திரமன்றி முழு நாட்டிலும் மதிக்கப்படும் தேரராவார் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

எமது தம்மானந்த நாயக்க தேரர் பொலன்னறுவையில் மாத்திரமன்றி முழு நாட்டிலும் மதிக்கப்படும் தேரராவார் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க இசிபத்தனாராம ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய உடகம ஸ்ரீ தம்மானந்த தேரருக்கு உடரட அமரபுர மகா நிகாயாவின் அனுநாயக்கர் பதவியை வழங்குவதற்கான சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று (04) அலரிமாளிகையில் இடம்பெற்ற போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது கௌரவ பிரதமரினால் உடகம ஸ்ரீ தம்மானந்த தேரருக்கான சன்னஸ் … Read more