நான் திருடவில்லை! முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  தற்போது நண்பர்களிடமிருந்து இயன்றளவு பணம் வசூலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,  100 மில்லியன் ‘எனது ஆட்சிக் காலத்தில், நான் உலகின் நம்பிக்கையை வென்று ஜனநாயகத்தை நிலைநாட்டி, இதை ஒரு நல்ல நாடாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, … Read more

ரஷ்யா மீது இஸ்ரேல் மேற்கொண்ட அதிரடித் தாக்குதல் (Video)

இஸ்ரேலுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே யுத்தமா, அப்படி நடப்பதற்கு வாய்ப்பேயில்லையென எண்ணுபவர்கள் நம்மில் பலர் இருக்கவே செய்கின்றனர்.  ஆனால், இஸ்ரேலுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் சூழல் விரைவில் இடம்பெற்றே ஆகும் என்று இன்றைக்கும் உறுதியாக நம்புகின்றார்கள் பல இராணுவ ஆய்வாளர்கள். காரணம் ரஷ்யா இஸ்ரேலின் வடகிழக்கு எல்லையில் உள்ள சிரியாவில் தமது 63000 படைவீரர்களை நிலைநிறுத்தி வைத்துள்ளது. இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்ற சிரிய அரசுக்கு ஆதரவாக தமது படைவீரர்களை நிலைநிறுத்தி வைத்துள்ளது ரஷ்யா.  இந்நிலையில், ரஷ்யாவின் யுத்த … Read more

இலங்கையில் ஜேர்மன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

காலி – ஹபராதுவ பிரதேசத்தில் உடற்பிடிப்பு நிலையமொன்றுக்கு சென்ற ஜேர்மனிய பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 65  வயதுடைய ஜேர்மனிய சுற்றுலாப் பயணிக்கே பாலியல் தொந்தரவேற்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் காலி – இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கைது இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (26.03.2023) காலி நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை … Read more

எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் இந்திய உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துரையாடல்

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பதற்காக கூட்டாக அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைப் பகுதிகளின் முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்திய உயர்மட்டக் குழு ஒன்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.  இக் கலந்துரைாயடல் நேற்று (25.03.2023) நடைபெற்றுள்ளது.  இதனையடுத்து இது தொடர்பில் முன்முயற்சிகளை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்து ரணில் விக்ரமசிங்க ஆலோசனைகளை வழங்கியதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் 500 உட்புற சமையல் அமைப்புகள்  இதேவேளை சூரிய சக்தியில் இயங்கும் 500 உட்புற சமையல் … Read more

தேர்தல் ஆணைக்குழு பிரதமருக்கு எழுதியுள்ள எழுத்து மூல கோரிக்கை

 தேசிய தேர்தல் ஆணைக்குழு, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் எழுத்து மூல கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது குறித்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கை இந்த தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த நேரத்தை ஒதுக்கித் தருமாறு தேர்தல் ஆணைக்குழு, பிரதமரிடம் கோரியுள்ளது. எழுத்து மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த அரசாங்க ஊழியர்களுக்கான … Read more

அரச ஊழியர்களின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாத சம்பளம்! வெளியான மற்றுமொரு அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பெறப்படும் பணத்தின் ஒரு பகுதி அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   அதன்படி, அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வழங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் வருமானம் போதாது அந்தக் கொடுப்பனவுகளுக்கு அரசாங்கத்தின் வருமானம் போதாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், … Read more

அரச ஊழியர்களின் சம்பளத்தில் பெருந்தொகை முப்படையினருக்காக செலவு

இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகங்களின் ஆய்வின் முடிவில் அரச ஊழியர்களின் சம்பள மொத்தத் தொகையில் (48.8 சதவீதம்) முப்படையினருக்கு செலவிடப்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட ஆய்வானது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தலைமையில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரசன்ன பெரேரா மற்றும் கலாநிதி நந்தசிறி கிஹிம்பியஹெட்டி ஆகியோரால் நடத்தப்பட்டுள்ளது. நான்கில் ஒரு பங்கு  பொலிஸ் மற்றும் முப்படையைச் சேர்ந்தவர்கள் நாட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஆண்டுக்கு 69,491 கோடி ரூபாய் … Read more

திருமணம் முடிந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்: உறைந்து போய் நின்ற மணமகள்: வீடியோ

திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகனின் வெறித்தனமான ஆட்டத்தை கண்டு மணமகள் உறைந்து போய் நிற்கும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வருகிறது. மணமகனின் குத்தாட்டம் பொதுவாகவே சமூக ஊடகத்தில் வித்தியாசமான  திருமண நிகழ்ச்சிகள் குறித்த வீடியோக்கள் அதிகமான பயனர்களால் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் திருமணம் ஒன்றில் மணமகனும், மணமகளும் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் மாலை மாற்றும் சடங்கு முடிந்து மணமக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை … Read more

நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்று அதனை செலுத்த முடியாத சுமார் ஆயிரம் பேரிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கடன் நிவாரண சபை திணைக்களம் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டளவில் 55 வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் நாட்டில் இயங்கி வந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டளவில் அதனை 35 குறைக்க … Read more

டெலிகொம் நிறுவனத்தை பெற கடும் போட்டிபோடும் வெளிநாட்டு நிறுவனங்கள்

இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொழும்பு பங்குச் சந்தையின் ஊடாக கொள்வனவு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் பலர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள சட்ட நிலைமைக்கமைய, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை மலேசியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஜி.ஆனந்த கிருஷ்ணனுக்கு சொந்தமான மேக்சிஸ் நிறுவனத்திடம் உள்ளமையினால் மீதமுள்ள பங்குகளை வாங்க அந்நிறுவனத்தை அழைக்க வேண்டும். அந்த நிறுவனத்தினர் விரும்பினால் புதிய முதலீட்டாளர்களையும் அழைக்கலாம். டெலிகாம் நிறுவனத்தை வாங்குவதில் இந்திய வர்த்தகக் குடும்பமான மிட்டல் … Read more