மாணவர்களை பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப் போவதில்லை – ரணில்

நம்நாட்டு பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்கள் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மாணவர்களின் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். Source link

பால்மா விலைக்குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில், இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறைக்கப்படவுள்ள விலை அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவால் குறைக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், 400 கிராம் பால்மா பொதியின் விலையை 80 ரூபாவில் குறைக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், இந்த விலைக்குறைப்பானது எதிர்வரும் வாரம் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Source link

ஆயுதம் தாங்கிய அனைத்து படையினருக்கும் ரணிலின் உத்தரவு

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.  Source link

இலங்கைக்கு நிதியை வழங்கமுன் விதிக்கப்பட்டிருக்க வேண்டிய நிபந்தனை! கரி ஆனந்தசங்கரி

சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு நிதியை வழங்குவதற்கு முன் தமிழ் சிறுபான்மையினருக்கு கூடுதல் சுயாட்சி என்ற விடயத்தை நிபந்தனையாக விதித்திருக்க வேண்டும் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கை தோல்வியுற்ற நாடு அவர் மேலும் தெரிவிக்கையில், எவ்விதமான அளவீட்டின் படியும், இலங்கை தோல்வியுற்ற மற்றும் வங்குரோத்து நாடாகும். அத்துடன் நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி … Read more

உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து: ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை

காலநிலை மாற்றத்தாலும், அதிகரித்து வரும் சுற்றுச் சூழல் மாசுபாட்டினாலும் உலக அளவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்படுமென ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளன. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்>  உலக நாடுகள் ஓர் ஆபத்தான பாதையில் பயணிக்கின்றன. நுகர்வு கலாச்சாரம், காலநிலை மாற்றம் மற்றும் அதி தீவிர வளர்ச்சியினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளது.   அளவுக்கு அதிகமான மாசுபாடு தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் புகை, மனிதர்களின் பயன்பாட்டிலுள்ள … Read more

ரமழான் மாதத்திற்கான பிறை தோன்றவில்லை!கொழும்பு பெரிய பள்ளிவாசல் வெளியிட்டுள்ள அறிவிப்பு(Video)

ரமழான் மாதத்திற்கான பிறை நாட்டில் எந்த பகுதியில் தென்படாத காரணத்தினால், நாளை மறுதினம்(24.03.2023) ரமழான் மாதம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. Source link

ஊழல் மோசடி குற்றச்சாட்டில் மட்டக்களப்பு முன்னாள் காணி ஆணையாளர் பணி நீக்கம்! (photos)

மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின்  முன்னாள் பணிப்பாளர் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க அறிவித்துள்ளார்.  முன்னாள்  ஆணைக்குழு பணிப்பாளர்  மீது சுமத்தப்பட்ட ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் உண்மை எனவும் அவரை குற்றவாளியாக கருதி காணி சீர்திருத்த ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் முன்னாள் ஆணைக்குழு பணிப்பாளர்  அவர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

முல்லைத்தீவில் காணி அபகரிப்புக்கு எதிராக ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

முல்லைத்தீவு – கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயம் செய்கின்ற 229 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கைக்கு அமைவாகவே ஜனாதிபதி வுத்தரவை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காணி சுவீகரிப்பு   முல்லைத்தீவு – கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயம் செய்கின்ற 229 ஏக்கர் காணியை தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் … Read more

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் குடும்பம் – வருமானத்தை அதிகரிக்கும் போலி செயற்பாடா..!

ஒவ்வொரு நாளும் உலகத்தின் ஏதாவதொரு மூளையில் வித்தியாசமான பல சம்பவங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கின்றன. அவை மனித வாழ்க்கையில் இதுவரை பதிவாகாத வித்தியாசமான பட்டியலில் இடம்பிடிக்கின்றன. இப்படியொரு சூழலில் தற்போது திருமணங்கள் மற்றும் குடும்பங்களிலும் வித்தியாசமான சில விடயங்கள் பதிவாகி வருகின்றன. இந்த பட்டியலில் விலங்குகள் முதல் உயிரற்ற பொருட்கள் வரை பலவற்றைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர் சில நபர்கள். பூனை, சுவர், ஈபிள் டவர், கற்பனை கதாபாத்திரம் என்பவற்றுடன் நடத்திக் கொள்ளப்பட்ட திருமணங்கள் தொடர்பான செய்திகள் … Read more

ஞானக்கா மகளின் வீட்டில் கொள்ளை

அநுராதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றை நடத்தும் ஞானக்கா என்ற பெண்ணின் மகளின் வீட்டில் 80 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் தங்கப் பொருட்கள் திருடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஞானக்காவின் மகளின் கணவர் அனுராதபுரம் பொலிஸில் தலைமையகத்தில் இந்தத் திருட்டு குறித்து முறைப்பாடு செய்துள்ளார். வடமத்திய மாகாணத்தில் திட்ட முகாமையாளரான இவர், வீட்டில் உள்ள அறையொன்றின் அலமாரியில் இருந்த 650,000 ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்கப் பொருட்கள் … Read more