தெருநாய்கள் விவகாரம்: "மனிதர்களுக்குச் செய்வதைப் போல நாய்களுக்குச் செய்யாமல் போனதால்" – மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் வேலூரில் இன்று (செப்டம்பர் 4) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம், ‘சினிமா துறையிலிருந்தே தவெக தலைவர் விஜய்க்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றனவே இதை எப்படிப் பார்க்கிறீர்கள். 2026-ல் அவருடைய அரசியல் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும்?’ என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த மிஷ்கின், “நான் ஒரு சுத்தமான சினிமாக்காரன். அரசியலைப் பற்றி நான் எதுவும் கூறியதில்லை. தவெக தலைவர் விஜய் தம்பி விஜய் தற்போது அரசியல் கட்சித் தலைவராகிவிட்டார். என்னைப் பொறுத்தவரை அவர் கடுமையான … Read more

`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்… 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரியர்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு பேராசிரியராக பணியாற்றியவர் ஆனந்த் விஸ்வநாதன். இவர் பொருளாதாரத்துறை துறைத்தலைவராகவும் இருந்துவந்தார். இதற்கிடையே பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2014-ம் ஆண்டு 5 மாணவிகள் மூணாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன் மீது போலீஸார் 4 வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் தேவிகுளம் கோர்ட்டில் நடந்துவந்தன. அதில், 2 வழக்குகளில்  பேராசிரியரை கோர்ட் விடுவித்திருந்தது. … Read more

ஜிஎஸ்டி வரி குறைப்பு செப்.22 முதல் அமல் – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். இந்த கூட்டத்தில் 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வரம்பை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதன்படி இனி 5% மற்றும் 18% என மட்டுமே ஜிஎஸ்டி வரி அடுக்குகள் இருக்கும் என அவர் தெரிவித்தார். அதேநேரத்தில் … Read more

Vetrimaaran: "நானே ஸ்கிரிப்ட் எழுதாமல் இருக்கும்போது எப்படி அதை கொடுக்க முடியும்? " – வெற்றிமாறன்

வெற்றி மாறன் தயாரித்திருக்கும் ‘பேட் கேர்ள்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தோடு தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக சமீபத்தில் அவர் அறிவித்திருந்ததும் பலருக்கும் நினைவிருக்கலாம். இந்தப் படத்தின் வெளியீட்டை ஒட்டி வெற்றி மாறனும் சில நேர்காணல்கள் கொடுத்து வருகிறார். `BAD GIRL’ படம் அந்த வரிசையில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அளித்த பேட்டியில் அவருடைய ஸ்கிரிப்ட் எழுதும் முறை குறித்து பேசியிருக்கிறார். வெற்றி மாறன் பேசும்போது, “நான் என் நடிகர்களுக்கு ஸ்கிரிப்ட் … Read more

Fahadh Faasil: நடிகர் பஹத் பாசில் வாங்கியிருக்கும் `Ferrari Purosangue' – மதிப்பு என்ன தெரியுமா?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருப்பது போல சிலருக்கு கார் கலெக்‌ஷன் பழக்கம் இருக்கும். இந்தியாவில் கார் கலெக்‌ஷன் செய்பவர்களின் பட்டியலை எடுத்தால் அதில் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை தவிர்க்கவே முடியாது. விலையுயர்ந்த கார்களை வாங்கி அழகுபார்ப்பதில் அவருக்கு அலாதி பிரியம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அவரிடம் லம்போர்கினி, போர்ஷே, மெர்சிடிஸ்-பென்ஸ் G63 AMG, ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி, எல்டபிள்யூபி, உருஸ், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 V8, போர்ஷே 911 கரேரா எஸ் உள்ளிட்டப் பல … Read more

Idly Kadai: 'இன்பன் உதயநிதி' – சினிமாவில் விநியோகஸ்தராக களமிறங்கும் இன்பநிதி!

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் உருவான ‘என்ன சுகம்’, ‘எஞ்சாமி தந்தானே’ என்ற இரண்டு பாடல்களும் சமீபத்தில் வெளிவந்திருந்தன. Idly Kadai – Dhanush அந்த இரண்டு பாடல்களையும் தனுஷே எழுதிப் பாடியிருக்கிறார். படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வர, படக்குழுவும் அடுத்தடுத்து ப்ரோமோஷன் பணிகளுக்கான … Read more

அனாதையாக சுற்றி திரியும் விலங்கு தெருநாய்! – எல்லையும் தீர்வும் | #Straydogissue

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் தெரு நாய்கள் பற்றி தமிழகத்தில் கடுமையான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் என்னுடைய பார்வை… இந்த உலகத்தில் பிறந்த அத்தனை உயிரினங்களும் வாழ்வதற்கு உரிமை உண்டு.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதியில் வாழ்கிறது. மனிதன் உள்பட அனைத்து உயிர்களுமே “இது எங்களுடைய ஏரியா” என்று தீர்மானம் … Read more

"நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டாலும்…" – இந்திய அணியில் இடம்பிடிக்கப் போராடும் புவனேஷ்வர்

இந்திய அணியில் ரெட் பால், ஒயிட் பால் என இரண்டிலும் சிறந்த ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க இரண்டாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறார். கடைசியாக 2022 நவம்பரில் நியூசிலாந்துக்கெதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் ஆடியிருந்தார். கடந்த ஐ.பி.எல் சீசனில் ஆர்.சி.பி அணியில் 17 விக்கெட்டுகள் வீழ்த்திய புவனேஷ்வர் குமார், 18 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக ஆர்.சி.பி கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றினார். புவனேஷ்வர் குமார் தற்போது, உத்தரப்பிரதேச டி20 … Read more

Madharaasi: "என் முகத்தை எடிட் செய்து நான் ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டதாக…" – சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘மதராஸி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ருக்மினி வசந்த், பிஜூ மேனன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் – முருகதாஸ் – Madharaasi படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பகுதிகளுக்கும் படக்குழுவினர் பம்பரமாக சுற்றி வருகிறார்கள். ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்வைத் தொடர்ந்து அங்கு சிவகார்த்திகேயனும், ருக்மினி வசந்தும் பேட்டிகள் கொடுத்திருக்கிறார்கள். அதில் தன்னைப் பற்றி பேசப்பட்ட … Read more