நடிகை மனோரமாவின் மகன் பூபதி காலமானார்

நடிகை மனோரமாவின் மகன் பூபதி மூச்சு திணறல் காரணமாக இன்று (அக்.23) காலை காலமானார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தவர் மனோரமா. குணச்சித்திர கதாபாத்திரங்கள், நகைச்சுவை கதாபாத்திரங்கள் என பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு காலமானார். பூபதி இவரது ஒரே மகன் பூபதி (70). மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை உயிரிழந்திருக்கிறார். அவரது … Read more

"பாஜக 'Compose' செய்த பாட்டுக்கு டான்ஸ் ஆட ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார்" – விஜய்யை சாடிய கருணாஸ்

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப் பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்தக் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்தான் தமிழக அரசியலில் பெரும் பேசிபொருளாகி வருகிறது. இது குறித்து பலரும் பல்வேறு கருத்துகள் தெரிவித்த வண்ணமிருக்கின்றனர். கரூர் விஜய் பிரசாரம் கரூர் மரணங்கள்: “ஆனந்த் பேசிய ஆதராம் என்னிடம் இருக்கிறது; விஜய்தான் முழுப்பொறுப்பு” – வேல்முருகன் இது குறித்து … Read more

Bison: "மெய்சிலிர்த்து கண்ணீரை வரவழைத்தது"- 'பைசன்'படத்தைப் பாராட்டிய சேரன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் ‘பைசன்’. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி இருக்கின்றனர். அந்தவகையில் இயக்குநர் சேரன் ‘பைசன்’ படத்தைப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார். பைசன் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” பரியேறும் பெருமாளுக்கு பிறகு மாரி செல்வராஜ் தம்பியின் ஆகச்சிறந்த படைப்பு ‘பைசன்’. நேர்த்தியான கதையமைப்பும் கதாபாத்திரங்களும் ஆச்சர்யப்படவும் கைதட்டவும் மெய்சிலிர்த்து கண்ணீரையும் … Read more

Aaryan: “ என்னை அவங்க அடையாளப்படுத்தலனு சின்ன வருத்தம் இருந்தது!" – பட விழாவில் விஷ்ணு விஷால்!

விஷ்ணு விஷால் நடித்திருக்கும் `ஆர்யன்’ திரைப்படம் இம்மாதம் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. ஷ்ரதா ஶ்ரீநாத், செல்வராகவன் எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. Aaryan Movie Press Meet “சமீபத்தில், நடிகர்கள் எவரும் எனக்கு உதவி செய்யவில்லை என வருத்தமாக பேசியிருந்தீர்களே!” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் தந்த விஷ்ணு விஷால், “நடிகர்கள் எவரும் எனக்கும் உதவி பண்ணலனு நான் சொல்லல. என்னை அவங்க அடையாளப்படுத்தலனு சின்ன வருத்தம் இருந்தது. என்னுடைய … Read more

"காட்சிகளுக்கு உயிர் சேர்த்தவர்; மறைவுச்செய்தி நெஞ்சை உலுக்குகிறது"- சேரன் இரங்கல்

பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் உடல்நலக் குறைவால் இன்று (அக்டோபர் 23) காலமானார். இசையமைப்பாளரான இவர் தன் சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் – முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். சபேஷ், தேவா இவர்கள் இருவரும் இணைந்து ‘சமுத்திரம்’, ‘தவமாய் தவமிருந்து’, ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘பொக்கிஷம்’ ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ மற்றும் ‘கோரிப்பாளையம்’ போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கின்றனர். இவை தவிர ஜோடி, ஆட்டோகிராஃப் உட்பட 20 படங்களுக்கு மேல் பின்னணி … Read more

“சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு'' – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

தூய்மைப் பணியாளர்கள் சென்னையில் கடந்த ஆகஸ்ட்டில் தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரி ரிப்பன் மாளிகைக்கு வெளியே இரண்டு வாரம் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 நாள்களாகப் போராட்டக்காரர்களை அலட்சியப்படுத்தி வேடிக்கை பார்த்த அரசு, ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவில் காவல்துறையை வைத்து தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக இரவோடு இரவாகக் கைதுசெய்து, சுதந்திர தினத்துக்காக அவசர அவசரமாக அன்றிரவே வேறு தூய்மைப் பணியாளர்களை வைத்து ரிப்பன் மாளிகை முன்பிருந்த குப்பைகளை அகற்றியது. CM Stalin – தூய்மைப் … Read more

Vishnu Vishal: “ 40 மணி நேரம் ஆமீர் கான் எங்களுக்காக கதைக் கேட்டாரு!" – விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடித்திருக்கும் `ஆர்யன்’ திரைப்படம் இம்மாதம் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. ஷ்ரதா ஶ்ரீநாத், செல்வராகவன் எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. விஷ்ணு விஷால் பேசுகையில், “ `ராட்சசன்’ படத்தோட இந்தப் படத்தை ஒப்பிடுவாங்க. ஆனா, இது ராட்சசன் மாதிரியான திரைப்படம் கிடையாது. `ராட்சசன்’ ஒரு கல்ட் திரைப்படம். அந்தப் படம் வெளிவந்ததுக்குப் பிறகு அது பல த்ரில்லர் படங்களுக்கு ரெபரென்ஸாக இருந்துச்சு. அந்தப் படம் கொடுத்த அனுபவத்தை எங்களாலும் … Read more

“மகனுக்காக நாடக மன்றமே ஆரம்பித்த மனோரமா ஆனால்" – நினைவுகள் பகிரும் மனோரமாவின் மேனேஜர்

தமிழ் சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்ததுடன், நகைச்சுவை, குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து சகாப்தமாய் திகழ்ந்தவர் ‘ஆச்சி’ மனோரமா. அவரின் மகன் பூபதி (வயது 70), உடல் நலக்குறைவால் இன்று காலமானார். மறைந்த பூபதி ‘குடும்பம் ஒரு கதம்பம்’, ‘தூரத்து பச்சை’ உள்பட சில படங்களில் நடித்தவர். இதில் மகனுக்காக ‘தூரத்து பச்சை’ படத்தை தயாரித்தார் மனோரா. சின்னத்திரையிலும் சில தொடர்களில் நடித்திருக்கிறார் பூபதி. பூபதி மறைந்த பூபதியின் நினைவுகள் குறித்து 35 ஆண்டுகள் மனோரமாவிடம் மேனேஜராக … Read more

Bison: “பல காட்சிகளில் என்னைப் பொருத்திப் பார்த்தேன்" – மாரி செல்வராஜை பாராட்டிய அண்ணாமலை

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ், பசுபதி, அமீர், லால், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், `அருவி’ மதன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான `பைசன் காளமாடன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியான நாள்முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர்கள் சேரன், இரா.சரவணன், லிங்குசாமி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலரும் பைசன் படத்தைப் பாராட்டி வருகின்றனர். மேலும், வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் … Read more

இந்திய-ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் இழுபறி; பியூஷ் கோயல் பயணம் வெற்றியைத் தருமா?

இந்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது… பதினான்காவது கட்ட பேச்சுவார்த்தை முடிந்தும், இன்னும் அதில் இழுபறி நீடித்து வருகிறது. என்ன பேச்சுவார்த்தை? இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது ஒப்பந்தமானால், இருதரப்பும் ஏற்றுமதி, இறக்குமதிகள் செய்வதில் பெரிய வரிச்சலுகைகள் கிடைக்கும். மேலும், இருதரப்பிற்குமே வர்த்தக ரீதியிலான உறவு நன்கு அமையும். ஆனால், பதினான்காவது கட்ட பேச்சுவார்த்தை முடிந்தும் இருதரப்பினருக்கும் இடையே சில வித்தியாசங்கள் … Read more