Serial Update: `இது ஒரு அழகான புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்!' கர்ப்பமானதை அறிவித்த நடிகை தர்ஷனா

`நீதானே எந்தன் பொன்வசந்தம்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தர்ஷனா அசோகன். அந்தத் தொடர் இவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்நிலையில் தர்ஷனா ஜீ தமிழில் `கனா’ தொடரில் நடித்திருந்தார். திருமணத்திற்காக அந்தத் தொடரில் இருந்து விலகினார். தர்ஷனாவிற்கும் அபிஷேக் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தர்ஷனா தொடர்ந்து நடிப்பாரா? என அவருடைய ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் தர்ஷனா ஒரு சந்தோஷ செய்தியை அறிவித்திருக்கிறார். தர்ஷனா அபிஷேக் பல் மருத்துவர். தர்ஷனாவும் அதே துறையைச் சார்ந்தவர் தான். … Read more

Travel Contest: தென்றல் தவழும் தென்காசியில் ஒருநாள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் தெளிவான திட்டமிடலுடன் தொடங்கும் சுற்றுலா, ஒருவகை மகிழ்ச்சி என்றால், எவ்வித திட்டமிடலும் இன்றி, ஒரேநாளில் செல்லும் இடத்தை தேர்வு செய்து, பயணத்தை தொடங்குவது என்பது வேறுவகை அனுபவம். அதுவும் நம் பால்ய காலத்து நினைவுகளை கிளர்ந்தெழச் செய்யும் வகையில், நாம் வாழ்ந்த ஊரை, பல்லாண்டுகளுக்கு … Read more

Gujarat Titans : ஃபெயிலே ஆகாத டாப் ஆர்டர்; முதுகெலும்பாக தமிழக வீரர்கள்!'- குஜராத் எப்படி சாதித்தது?

‘குஜராத் தொடர் வெற்றி!’ ஈடன் கார்டனில் வைத்து கொல்கத்தாவை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது குஜராத் அணி. நடப்பு சீசனில் அந்த அணி பெறும் 6 வது வெற்றி இது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றனர். குஜராத் அணி எப்படி தொடர்ந்து வெல்கிறது? அந்த அணியின் சக்சஸ் பார்முலாதான் என்ன? Gill – Rahane ‘அண்டர்டாக்ஸ் இமேஜ்!’ சீசனின் தொடக்கத்தில் குஜராத் அணியின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. ஏனெனில், ஹர்திக் பாண்ட்யா வெளியேறிய பிறகு … Read more

Doctor Vikatan: ஆஞ்சியோ செய்தபோது இதய ரத்தக்குழாய் அடைப்பு.. மீண்டும் பரிசோதனைகள் தேவையா?

Doctor Vikatan: என் வயது 55. கடந்த வருடம் ஆஞ்சியோ செய்ததில் இதயத்தின் ரத்தக்குழாயில் 50 சதவிகித அடைப்பு இருப்பதாகவும் மாத்திரைகள் மூலமே சமாளிக்கலாம் என்றும் மருத்துவர் சொன்னார்.  இந்த அடைப்பு எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள மீண்டும் ஆஞ்சியோதான் செய்ய வேண்டுமா? இசிஜி, எக்கோ பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளலாமா… இசிஜி, எக்கோ பரிசோதனைகள் நார்மல் என்றால் என் இதயம் ஆரோக்கியமாக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்   மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் நீங்கள் கேட்டுள்ளபடி, எக்கோ அல்லது இசிஜி பரிசோதனைகளில், … Read more

GT vs KKR: “முன்னேறிச் செல்லுங்கள்!'' – சாய் சுதர்சனை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 39 -வது போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் முதலாவதாக பேட்டிங் செய்த குஜராத் அணி நன்கு விளையாடி 198 ரன்கள் குவித்தது. இதற்கு அணியின் ஓப்பனார்கள் சாய் சுதர்சனின் அரை சதமும் சுப்மன் கில்லின் 90 ரன்களும் மிக முக்கியமானது. இந்தப் போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிப்பெற்றது . சிவகார்த்திகேயன் போட்டிக்கு முன்பு பேட்டிங்கில் அதிக … Read more

Dhanush: “தனுஷ் – மாரி செல்வராஜ் படத்துக்கு முன் இன்னொரு தனுஷ் படம் இருக்கு.." – ஐசரி.கே.கணேஷ்

தனுஷ் தற்போது பெரிய லிஸ்ட் கொண்ட படங்களின் லைன்-அப்பை தனது கையில் வைத்திருக்கிறார். இந்த லிஸ்டில் முதலாவதாக சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குபேரா’ திரைப்படம் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கடுத்து, அக்டோபர் 1-ம் தேதி தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படமும் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களைத் தாண்டி, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் பாலிவுட் திரைப்படமான ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படமும் இந்த ஆண்டிற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

ஆணாதிக்கம், ஆபாசம், கொச்சைப் பேச்சு… ஒரு பொன்முடி சிக்கிவிட்டார். ஆனால், அவர்… இவர்?

பெண்களை மட்டம்தட்டிப் பேசுவது, வீடுகளில் காமெடி ஆக்கப்பட்டிருக்கிறது. பெண்களை ஆபாசமாகப் பேசுவது, மேடைகளில் காமெடி ஆக்கப்பட்டிருக்கிறது. அப்படித்தான், சமீபத்தில் தனது `நகைச்சுவை உணர்வை’ மேடையில் அள்ளி வீசியிருக்கிறார், ‘மாண்புமிகு’ தமிழ்நாட்டு அமைச்சர், `பேராசிரியர்’ க.பொன்முடி. பாலியல் தொழிலாளிக்கும் அவரிடம் சென்றவருக்கும் நடந்ததாக அவர் பகிர்ந்த கற்பனை உரையாடல், ஆபாசத்தின் உச்சம். முன்னதாக, `கூட்டத்தில் இருக்கும் பெண்கள் தவறாக நினைக்க வேண்டாம்’ என்று பீடிகை வேறு போட்டுக்கொண்டார். அரசியல் மேடைதான் என்றில்லை… திரைப்பட, இலக்கிய, பட்டிமன்ற, தெருவீதி என … Read more

இந்தி திணிப்பு: "மகாராஷ்டிராவில் அஞ்சும் பட்னாவிஸ்; மோடி பதிலளிக்க வேண்டும்" – ஸ்டாலின் ட்வீட்!

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி திணிக்கப்பட்டதாக, கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர், “மும்மொழிக் கொள்கையின்படி மாணவர்கள் கற்றுக்கொள்ளும் மூன்றில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். அவை தமிழ், குஜராத்தி என எந்த மொழியாகவும் இருக்கலாம். இந்தி திணிக்கப்படவில்லை” என விளக்கம் அளித்தார். பட்னாவிஸ் இந்த நிலையில், மராட்டியத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு எழுந்த எதிர்ப்பைச் சுட்டிக்காட்டி, மத்திய கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியிடம் கேள்விகளை எழுப்பியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இது … Read more

''படி ஏற முடியாதுன்னு யாரும் வேலை கொடுக்கல'' – மாற்றுத்திறனாளி தம்பதியரின் வாழ்க்கைப் போராட்டம்!

ஜெயலட்சுமி-முருகதாஸ் தம்பதியின் கதையைக் கேட்டால், இமைகள் கண்ணீருக்குள் மூழ்கி விடும். தன்னம்பிக்கையின் பிறப்பிடமாக திகழும் இவர்களின் இருப்பிடமும் இருள் சூழ்ந்த இவர்களின் வாழ்க்கையும் இரும்பு மனதையும் உருக வைத்து விடும். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த பாப்பனப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் இவர்களை சந்தித்தோம். முதலில் ஜெயலட்சுமி பேசினார். ஜெயலட்சுமி-முருகதாஸ் தம்பதி மகள் வெண்மதியுடன் ஆசிரியராகணும்னு நோக்கத்தோட படிச்சேன் “நாலு வயசு இருக்கிறப்போ எனக்கு போலியோ அட்டாக் வந்துச்சு. எல்லார் மாதிரியும் நடக்க முடியாதுன்னு ஆன பிறகும், … Read more