தஞ்சை: ஒன்றரை லட்சம் மகளிர்… நேரு தலைமையில் பரபரக்கும் மாநாடு ஏற்பாடுகள்!
தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நாளை மாலை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 200 ஏக்கரில் விழா பந்தல் உள்ளிட்டவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. கனிமொழி தலைமை தாங்கும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதில் 15 மாவட்டங்களை சேர்ந்த, 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொள்ள இருப்பதாக சொல்கிறார்கள். … Read more