“முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், சுற்றுப்பயணமா? வெற்றுப்பயணமா?'' – ஆர்.பி. உதயகுமார் கேள்வி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயண ஏற்பாடுகளை ஆய்வு செய்ய சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, “உசிலம்பட்டி பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி நிரைவேற்றியுள்ளார். மிக எழுச்சியாக, ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் உசிலம்பட்டி தொகுதியில் அவரது பேருரை நடைபெறும். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் எழுச்சிப் பயணம் வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில் அமையும். அரசியல் தலைநகரான மதுரையில் அவரது பேச்சை கேட்க … Read more

Mohammed Shami: "எனக்கு ஒரேயொரு நிறைவேறாத கனவு இருக்கு" – மனம் திறந்த முகமது ஷமி

இந்தியாவில் 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் வெறும் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த முகமது ஷமி, அந்தத் தொடருக்குப் பிறகு காயம் காரணமாக ஒன்றரை ஆண்டு கழித்துத்தான் சர்வதேச போட்டியில் ஆடினார். கடைசியாக சாம்ப்பின்ஸ் டிராபியில் ஆடிய ஷமி, இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் தேர்வாகவில்லை, தொடங்கவிருக்கும் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இப்போது தேர்வாகவில்லை. முகமது ஷமி இந்த நிலையில், தனக்கு நிறைவேறாத கனவு … Read more

Madharaasi: "கல்லூரி காலத்தில் எனக்கு கிடைத்த நண்பர்களால்தான் இங்கு இருக்கிறேன்" – சிவகார்த்திகேயன்

கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய “மதராஸி” படத்தின் புரமோஷன் நிகழ்விற்காக நேற்று வந்திருந்தார். மதியம் 3 மணிக்குத் தொடங்கிய இந்த மீட் அண்ட் க்ரீட் நிகழ்வில் மாணவர்கள் பெரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். Madharaasi – Coimbatore முதலில் மேடையேறிய பாடகர் ஆதித்யா ஆர்.கே, ‘மதராஸி’ மற்றும் அதற்கு முன் ‘டான்’ படங்களில் பாட வாய்ப்பு வழங்கியதற்காக சிவகார்த்திகேயனுக்கு நன்றியைத் தெரிவித்தார். பின்னர் மேடைக்கு வந்த நடிகை ருக்மிணி வசந்த், “இது என் … Read more

Putin – Kim: 'ஷி, புதின், கிம் சந்திப்பு' – அமெரிக்காவுக்குச் சொல்லவரும் செய்தி என்ன?

பெய்ஜிங்கில் ஒரு வரலாற்றுச் சந்திப்பு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “அமெரிக்காவுக்கு முதல் இடம்” என்ற தனது கொள்கையின் கீழ் உலக வர்த்தக அமைப்பையே உலுக்கி வருகிறார். அவரது வர்த்தகப் போர் மற்றும் பொருளாதாரத் தடைகள், பல நாடுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளன. குறிப்பாக, சீனா, இந்தியா, மெக்சிகோ, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இந்த வரிவிதிப்புகளால் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழலில்தான், அமெரிக்காவின் நீண்டகால எதிரிகளான மூன்று நாடுகள், … Read more

GVM: "என்னுடைய ஒரு வெளிவராத படத்தின் மீது அவர் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்!'' – கெளதம் மேனன்

இயக்குநர் லிங்குசாமியின் ‘பெயரிடப்படாத ஆறுகள்’ என்ற புதிய ஹைக்கூ கவிதைத் தொகுப்பை இன்று, முனைவர் கு. ஞானசம்பந்தன் தலைமையில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டார். வெளியிடப்பட்ட நூலை நடிகை அபிராமி பெற்றுக்கொண்டார். `என்னை சிரிக்க வைக்கும் ஒருவர் லிங்குசாமி’ மேடையில் பேசத் தொடங்கிய இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், “லிங்குசாமி என்னோட நெருங்கிய நண்பர். நான் அவரின் அனைத்தும் விஷயங்களையும் ரசிப்பேன் என்று அவருக்குத் தெரியும். அதற்காகதான் இந்தப் புத்தகத்தை இன்று நான் வெளியிட்டிருக்கிறேன். நாங்கள் … Read more

FASTag Annual Pass: ரூ.3,000-க்கு கட்டணமில்லா பயணம்; விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Toll Pass

ரூ.3,000 கட்டி டோல் பாஸ் பெற்றால் போதும். ஓராண்டுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணமின்றி பயணம் செய்துகொள்ளலாம் என்கிற நடைமுறை கடந்த 15-ம் தேதி முதல் வந்துள்ளது. அந்தப் பாஸ் பெறுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளலாம்… வாங்க… தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் ராஜ்மார்க் யாத்ரா (Rajmarg Yatra) என்கிற ஆப்பை டௌன்லோடு செய்துகொள்ளவும். அடுத்ததாக, உங்களது மொபைல் எண் அல்லது வாகனப் பதிவு எண்ணை உள்ளிட்டு லாக் இன் செய்து கொள்ளவும். Fastag/ஃபாஸ்ட் டேக் நீங்கள் இந்த … Read more

Vishal: “எனக்கும், சாய் தன்ஷிகாவிற்குமான நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது" – விஷால்!

என்று இன்று தனது 48-வது பிறந்த நாளையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு ஆதரவற்ற, முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி, விருந்து கொடுத்த நடிகர் விஷால், “எப்போது திருமணம் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு இன்று பிற்பகல் இன்று மதியம் நல்லசெய்தியை அறிவிக்கிறேன்.” என்றார்.  இந்நிலையில் இன்று நடிகை சாய் தன்ஷிகாவுக்கும், விஷாலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. இருவீட்டாரின் பெற்றோர்கள் முன்னிலையில் தனிப்பட்ட குடும்ப நிகழ்வாக சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் … Read more

Personal Finance: உலகின் எட்டாவது அதிசயம் தெரியுமா? 'லாபம்' நடத்தும் இலவச ஆன்லைன் மீட்டிங்!

இந்த உலகில் ஏழு அதிசயங்கள் இருப்பது உங்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால், எட்டாவது அதிசயம் என்று இருக்கிறது. இந்த அதிசயத்தை நம்மில் பலரும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். இந்த அதிசயத்தைப் பற்றி நாம் தெரிந்துகொண்டால், நாம் மிகப் பெரிய அளவில் பணம் சேர்ப்பது உறுதி. அந்த எட்டாவது உலக அதிசயம் என்ன என்று கேட்கிறீர்களா? அதுதான் பவர் ஆஃப் காம்பவுண்டிங் என்று சொல்கிறார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். தமிழில் சொன்னால், கூட்டு வட்டி வளர்ச்சி விகிதம். நம்முடைய முதலீட்டுக்கான … Read more

Vishal Engagement: "இதனால்தான் சிம்பிளா நடத்தினோம்" – விஷால் நிச்சயதார்த்தம் குறித்து தந்தை ஜி.கே

நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 29) அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்திருக்கிறது. அவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் விஷால்- சாய் தன்ஷிகா ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். விஷாலின் தந்தை G. K ரெட்டி இந்நிலையில் சென்னையில் இன்று விஷாலின் தந்தை G. K ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். “ஒவ்வொரு முறையும் விஷால் திருமணம் குறித்து வெளியில் சொல்லியபோது அவை தடங்களில் … Read more

நவீன தகன மேடை: வேலை முடிந்தும் பயன்பாட்டிற்கு வரவில்லை; நகராட்சி அலட்சியம் காரணமா? -குமுறும் மக்கள்

விழுப்புரம் மாவட்டம் கே.கே. ரோட்டில், ரோட்டரி சங்க பங்களிப்புடன் “முக்தி” என்ற பெயரில் நவீன தகன மேடை ஒன்று கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. “முக்தி” கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், இறுதிச் சடங்கிற்கு பலர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. “முக்தி” என்ற நவீன தகன மேடை போதாமையால், கூடுதலாக இன்னொரு நவீன தகன மேடை தேவை என்ற கோரிக்கை எழுந்தது. விழுப்புரம் நகராட்சி பகுதியில் … Read more