"அந்த ஒரு சீன்ல நான் வர்றதுக்காக வடிவேலுண்ணே அவ்வளவு போராடினார்!"- நெகிழும் அமிர்தலிங்கம்

வடிவேலுவின் காமெடி டீம்… இயக்குநர் ஹரியின் படங்களில் சின்ன ரோலாக இருந்தாலும் செம ஸ்கோர் செய்பவர் அமிர்தலிங்கம். அடிக்கடி படங்களில் பார்த்திருக்கலாம். சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக 500 படங்களில் நடித்திருப்பவரான அமிர்தலிங்கத்திடம் பேசினேன். “எதாவது ஒரு துறையில சாதிக்கணும்னு விரும்பினேன். சினிமா என் லட்சிய பயணம். அதுல இத்தனை வருஷங்களாக இருக்கறது சந்தோஷமா இருக்கு. நாம மறைந்தாலும் ‘இப்படி ஒருத்தர் இருக்கார்’னு மத்தவங்க சொல்லணும்னு விரும்பினேன். ஆரம்ப காலங்கள்ல மேடை நாடகங்கள்ல இருந்தாலும், 1980க்கு பிறகுதான் … Read more

Mr.IPL: சேப்பாக்கம் முதல் சென்சூரியன் வரை… ரெய்னாவின் வெறியான 5 இன்னிங்ஸ்கள்!

Mr.IPL, சின்ன தல என ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவின் கிரிக்கெட் கரியர் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. ஐ.பி.எல் மெகா ஏலத்தில் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை. சென்னை அணியுமே கூட கைவிரித்துவிட்டது. ஒரு மாபெரும் சகாப்தமே கண்முன் சரிந்ததை போல இருக்கிறது. ஆனாலும் இத்தனை ஆண்டுகளாக சென்னை அணிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது. அதை கொண்டாடும் வகையில் சென்னை அணிக்காக ரெய்னா ஆடிய டாப் 5 இன்னிங்ஸ்கள் இங்கே… 87(25) … Read more

`என் சகோதரர் ராகுல் காந்திக்காக உயிரையும் தியாகம் செய்வேன்!" -யோகிக்கு பிரியங்கா காந்தி பதில்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் இடையே மோதல் உள்ளதாகவும், அந்த மோதல் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையும் பிளவுபடுத்தி வருவதாகவும் கருத்து தெரிவித்தார். இந்த நிலையில் யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்குப் பிரியங்கா காந்தி பதிலடி கொடுக்கும் விதமாகத் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி – யோகி ஆதித்யநாத் பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 20-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய … Read more

`மனசெல்லாம் பட்டாம்பூச்சி பறக்க!' – தமிழ் சினிமாவின் Cute Love Proposal Scenes!

பாம்பே “உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்துருவேன். நீ எனக்காக வருவியா” என அரவிந்த்சாமி, மனிஷாவிடம் படகில் கேட்கும் கேள்வி 90’ஸ் கிட்ஸின் விருப்பமான லவ் ப்ரோபோசல் சீன். அலைபாயுதே “நான் உன்ன விரும்பல. உன் மேல ஆசைப்படல. நீ அழகா இருக்கனு நினைக்கல. ஆனால் இதுலா நடந்துடுமோனு பயமா இருக்கு” என மாதவன், ஷாலினியிடம் நகரும் ட்ரைனில் ப்ரபோஸ் செய்வது எவர்கிரீன் காட்சி. மின்னலே “இனிமேல் என்னால பொறுத்துக்க முடியாது ப்ளீஸ். உனக்கு என்ன பிடிச்சுருக்கானு சொல்லு” … Read more

IPL Auction 2022: எல்லைச்சாமி சிஎஸ்கேவுக்கு இல்லை சாமி… டு ப்ளெஸ்ஸி இல்லாத சென்னை, இனி எப்படி?!

பொதுவாக, தன்னுடைய அணியைச் சேர்ந்த வீரர் என்பதை ஒட்டி ஏற்படும் வீரர்களுடனான ரசிகர்களின் மனநெருக்கம், சமயத்தில் எல்லைகளைத் தாண்டிப் பயணிக்கும். தங்களது அணியில் அவர்களுடைய எழுச்சியினை, சாதனையை, அணிக்கு அவர்கள் ஈட்டித் தந்த பெருமையினை, புல்லரிக்க, கண்கள் வேர்க்கக் கொண்டாடி, அணுஅணுவாய் ஆராதித்தவர்களுக்கு, அவர்களை வேறு அணிக்குள் பொருத்திப் பார்க்க வேண்டிய சூழல் வரும் போது, அது ஆறாத வலியினை நெஞ்சினில் ஏற்படுத்தும். ஏறக்குறைய இருபது ஆண்டுகள், இணைந்து பயணித்த பார்சிலோனைவை விட்டு மெஸ்ஸி வெளியேறிய போது, … Read more

“முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தா, என் ஆட்டமே வேற..!" – ஹேம மாலினி ஷேரிங்ஸ்

`பாலிவுட்டில் கால் பதித்துவிட வேண்டும்…’ – இந்திய சினிமா கலைஞர்கள் பெரும்பாலானோருக்கும் இந்த ஆசை இருந்தாலும், அந்தக் கனவு, திரையுலகில் முத்திரை பதிக்கும் சிலருக்கே நனவாகும். அந்தப் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்திலுள்ள ஹேம மாலினி, தென்னிந்திய சினிமாவிலிருந்து சென்று பாலிவுட்டில் கோலோச்சியவர். ஹேம மாலினி பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் பலருடனும் ஜோடியாக நடித்தும், நடனத்திறமையாலும் ரசிக்க வைத்ததுடன், அடிதடி, சண்டைக்காட்சிகளிலும் நடித்து ஆச்சர்யப்படுத்தியவர். தமிழில் ஹிட் அடித்த `அன்னை ஓர் ஆலயம்’, `வாணி ராணி’, ‘குரு’ … Read more

“இனி வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டதால்…" – வறுமையால் அண்ணன், தங்கை தற்கொலை?

விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சுசீந்தரன்(54). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் இவருக்கு, திருமணம் ஆகவில்லை. இவரின் தங்கை பெயர் ரேவதி(50) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிரபல தமிழ் நடிகை ஒருவரின் தம்பியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் ரேவதி, கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் அவரின் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தன் அண்ணன் வீட்டிலேயே வசித்து வந்தாராம். அண்ணன், தங்கை இருவரும் வசித்து வந்த வீட்டில் நேற்று(13.02.2022) … Read more

இன்றைய ராசி பலன் | 14/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

“நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி நடக்கிறது, பாஜக ஹிஜாபோடு நிற்காது…" – மெகபூபா முப்தி

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்குச் செல்வதற்கு எதிர்ப்பு கிளம்பிய விவகாரம், இந்திய அளவில் பெரும் சர்ச்சையானது. ஹிஜாப் விவகாரம் கர்நாடக உயர் நீதிமன்றம் தொடங்கி இப்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், `ஹிஜாப் விவகாரத்தைத் தேசியப் பிரச்னையாக மாற்ற வேண்டாம்’ எனக் கூறி, இதை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை … Read more

தேனி: பெண் வனக்காப்பாளர் கொலை; சரணடைந்த ஆயுதப்படை காவலர் – நடந்தது என்ன?!

மதுரை சதாசிவம் நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பொன்பாண்டி மனைவி ரம்யா (27) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் தேனி வனச்சரக அலுவலகத்தில் வனக்காவலராகப் பணிபுரிந்து வருகிறார். போடியில் வனத்துறை அலுவலகம் அருகே ரமேஷ் என்பவரின் வீட்டில் வசித்து வந்தார். ரம்யாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அதனால், இவருடைய 2 பெண் குழந்தைகளும் அவரின் பெற்றோர் வீட்டில் உள்ளனர். இந்நிலையில், தனியாக வசித்து வந்த … Read more