கர்நாடகா: அமைச்சர் மீது ஊழல் குற்றம்சாட்டிய பாஜக உறுப்பினர் தற்கொலை; போலீஸ் விசாரணை!

கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய பா.ஜ.க-வின் உறுப்பினரும், ஒப்பந்ததாரருமான சந்தோஷ் பட்டீலின் சடலம்  இன்று (ஏப்ரல் 12) உடுப்பியில் உள்ள விடுதியில் கண்டெடுக்கப்பட்டது. பெலகாவியில் உள்ள ஹிண்டலகாவைச் சேர்ந்த சந்தோஷ், கடந்த திங்கள்கிழமை முதல் காணவில்லை. அதன் பின்பு வந்த தகவலின் அடிப்படையில் உடுப்பியில் உள்ள விடுதியில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறை விசாரணையில், “நான் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு … Read more

ஒரே வாரத்தில் இலங்கைக்கு மொத்தம் 27,000 மெட்ரிக் டன் அரிசி… இந்தியாவின் புத்தாண்டு பரிசு!

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 13 மற்றும் 14-ல் இலங்கையின் புத்தாண்டு தினம் விமர்சையாகக் கொண்டாடப்படும். ஆனால் இந்த வருடம் இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. எனவே அரிசி, வெங்காயம், தக்காளி, எரிபொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு அதிகரித்து மக்கள் உணவு பற்றாக் குறையால் தவித்து வருகின்றனர். மேலும் அங்கு அந்நிய நாடுகளை உள்ளடக்கிய இறக்குமதியும் ஏற்றுமதியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க அண்டைநாடுகள் உதவ வரவேண்டும் என இலங்கை வேண்டுகோள் … Read more

கேரளாவில் திருமணத்துக்குச் சென்று திரும்பியபோது கார் விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள பாட்டவயல், கரும்பன்மூலாப் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீஸ். இவரின் உறவினர் திருமண விழாவில் பங்கேற்க கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்குக் குடும்பத்துடன் காரில் சென்றிருக்கிறார். திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு சொந்த ஊருக்கு அனைவரும் திரும்பி கொண்டிருந்திருக்கின்றனர். வாகன விபத்து கேரள மாநிலம் மீனங்காடி, காக்கவயல் பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிரில் பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று பிரவீஸ் ஓட்டி வந்த காரில் மோதியிருக்கிறது. அதில், காரில் இருந்த பிரவீஸ் … Read more

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் – துலாம்

துலாம்: இங்கிதமான பேச்சால் மற்றவர்களின் மனதில் இடம் பிடிப்பவர்களே! சந்திரன் லாப வீட்டில் நிற்கும் போது இந்த சுபகிருது வருடம் பிறப்பதால் கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புது வேலை அமையும். உறவினர்கள் மத்தியில் உங்களின் அந்தஸ்து ஒரு படி உயரும். பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த … Read more

“திராவிட இயக்கங்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தித் திணிப்பைதான் எதிர்க்கின்றன!" – துரை வைகோ

ம.தி.மு.க தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க-வின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டுப் பேசினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட 11 தீர்மானங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கமால் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். தி.மு.க அரசும், முந்தைய அ.தி.மு.க அரசும் பல்வேறு சட்டத் தீர்மானங்களை ஆளுநரிடம் வழங்கியுள்ளன. இதில், காலதாமதம் செய்வது ஜனநாயகப் படுகொலையாகும். துரை … Read more

Data Science: அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு IIT-சென்னையின் புதிய முன்னெடுப்பு!

சென்னை ஐஐடி-யின் பி.எஸ்சி (இளங்கலை அறிவியல்) பட்டப் படிப்பு கல்வித் தடைகளைக் கடந்து, தமிழகத்தில் தரமான கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்திருப்பதன் மூலம், நாட்டிலேயே இம்மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது. தரவு அறிவியல் இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்குச் சமமான வாய்ப்பை உருவாக்கும் வகையில், கல்விக்கான … Read more

பீஸ்ட்: "இயக்குநர் எத்தனை முறை சொன்னாலும் நடிப்பார், விஜய் ஒரு டெடிகேட்டட் ஆர்டிஸ்ட்!"- செல்வராகவன்

நாளை மிகப்பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம். படத்தின் டிரெய்லரில் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்திய விஷயம் இயக்குநர் செல்வராகவன்தான். மனிதர் கேசுவலாக நடித்துக்கொண்டிருந்தார். திரைக்குப் பின்னால் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த செல்வராகவனை ‘பீஸ்ட்’டும், ‘சாணிக் காயித’மும் திரைக்கு முன்னாலேயே நமக்குக் காட்டவிருக்கின்றன. ‘பீஸ்ட்’ படம் பற்றியும், விஜய் பற்றியும் செல்வாவிடம் பேசியதிலிருந்து… பீஸ்ட் | Beast முதல் படம் இயக்கிய போது ஒருவித பயத்துடன் முதல் ஷோவின் முடிவை எதிர்நோக்கி காத்திருந்து இருப்பீர்கள். இப்போது முதல் முறையாக நடித்திருக்கிறீர்கள். … Read more

குருப் பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023 | Guru Peyarchi | மேஷம் முதல் கன்னி வரை | ஜோதிட அலசல் – பகுதி 1

குருப் பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023 | Guru Peyarchi | மேஷம் முதல் கன்னி வரை | ஜோதிட அலசல் – பகுதி 1 இது குருப்பெயர்ச்சி பலன்கள் – பாகம் ஒன்று. இதில் மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி அமையப்போகிறது என்பதை விளக்குகிறார்கள், பிரபல ஜோதிடர்கள். கலந்துகொண்ட ஜோதிடர்கள் : காழியூர் நாராயணன் ஆதித்ய குருஜி ஆம்பூர் வேல்முருகன் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன் ஒருங்கிணைப்பு : இல. சைலபதி … Read more

திருமழபாடி: `நந்தி கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்' குவிந்த பக்தர்கள்!

திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் நந்தியம்பெருமான் சுயசாம்பிகை திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தைக் காணத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருக்கல்யாணம் நந்தி கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் இந்தத் திருமணத்தை நேரில் காணும் வரன்களுக்கு அடுத்த நந்தி கல்யாணத்துக்குள் திருமணம் நடைபெறும் என்பது ஐதிகம். நந்தி தேவரின் திருக்கல்யாணம் நடைபெற்ற தலம் தமிழ்நாட்டிலேயே திருமழபாடி திருத்தலம் மட்டும்தான். திருமழபாடி நந்தி திருக்கல்யாணத் தலத்தில் தேர்த் திருவிழா! சிவபெருமான் தாமே முன்னின்று நந்தியெம்பெருமானுக்குத் … Read more

“உத்தரப்பிரதேசத்தில் குற்றச்செயல்கள் புல்லட் ரயில் போல் ஓடுகிறது” – அகிலேஷ் யாதவ்

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இத்தேர்தலில் தோல்வியடைந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, சட்டமன்றத்துக்குள் எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த நிலையில் யோகியின் ஆளும் பா.ஜ.க அரசை விமர்சித்து அகிலேஷ் யாதவ் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். யோகி ஆதித்யநாத் அந்த அறிக்கையில், “உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.கவின் இரண்டாவது ஆட்சியில் குற்றவாளிகள் முன்பை விடவும் அச்சமின்றி தைரியமாக உள்ளனர். போலீஸை … Read more