“சித்தாந்தத்தின் அடிப்படையில் வெற்றி பெற விரும்புகிறோம்; வன்முறையால் அல்ல!” – அமித் ஷா
டெல்லியின் மூன்று மாநகராட்சிகளை ஒருங்கிணைக்கும் மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பாக மக்களவையில் பேசுகையில், “அரசியல் கட்சிகள் அனைத்தும், தங்கள் கொள்கை அடிப்படையில் வெற்றி பெற வேண்டும். நாங்கள் தேர்தலில் எங்களுடைய திட்டங்கள், சித்தாந்தம், தலைமைத்துவத்தின் புகழ் மற்றும் அரசாங்கத்தின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எல்லா இடங்களிலும் போராடி வெற்றிபெற விரும்புகிறோம். இதற்குப் பதிலாக , நாங்கள் எதிர்க்கட்சிகள் மீது வன்முறையை ஏவவில்லை. அது எங்கள் கலாசாரம் அல்ல” … Read more