போராடிய ஹர்மன்ப்ரீத்; தோல்விக்குக் காரணமான ஒற்றை நோ-பால்; வெளியேறிய இந்தியா!

பெண்களுக்கான உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி இன்று தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டிருந்தது. தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதிப்பெற்றிருந்த நிலையில், இந்தப் போட்டியை வென்றால் இந்திய அணியும் அரையிறுதிக்குத் தகுதிப்பெற முடியும் என்ற சூழல் நிலவியது. ஆனால், பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் கடைசி பந்து வரை சென்று இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அரையிறுதி வாய்ப்பையும் இழந்தது. இந்திய அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணிக்கு … Read more

2,000 ஆண்டுகள் பழைமையான சங்க கால ஊர்களின் தடயங்கள் கண்டுபிடிப்பு; அகழாய்வு செய்ய கோரிக்கை!

அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்கள், மருங்கூர்பட்டினம், ஊணூர் என்ற அருகருகே இருந்த இரு சங்ககால ஊர்களைக் குறிப்பிடுகின்றன. மருங்கூர்பட்டினம் கடற்கரையின் அருகில் கடற்கரைச்சோலை, உப்பங்கழி, நவமணிகள் விற்கும் கடைவீதிகளுடன் இருந்துள்ளது. ஊணூர் கடலின் ஓசை கேட்கும் தொலைவில், பழைமையான பலவகை நெல் விளையும் செம்மண் பூமியாக, வழுதுணைத் தழும்பன் என்பவனின் கோட்டை மதில்களுடன் இருந்துள்ளது. அழகன்குளம்தான் இவ்வூர்கள் எனச் சொல்லப்படுவது பொருத்தமானதாக இல்லை. இந்நிலையில் பெயர் ஒற்றுமை கொண்டு தொண்டி அருகே மருங்கூர் மற்றும் … Read more

`மே 9-க்குள் ரஷ்யா போரை நிறுத்திக்கொள்ள விரும்புகிறது!' – என்ன காரணம்.. `The Kyiv Independent' தகவல்

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. போரின் தொடக்கத்தில் உக்ரைனின் ராணுவ வீரர்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை மட்டுமே குறிவைத்துத் தாக்கிய ரஷ்யப் படைகள், போகப்போக அப்பாவி மக்களையும் தங்கள் குண்டுகளுக்குக் குறியாக்கிக் கொல்லத் தொடங்கின. அதனால், உக்ரைன் மக்களை உயிர் பயத்தில் அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், மே 9-ம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா விரும்புவதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்திருப்பதாகக் … Read more

வேலூர்: பாலியல் தொல்லை… 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி! – 55 வயது ஆசிரியர் சிறையிலடைப்பு

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள திருவலம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் 561 மாணவிகள் படிக்கிறார்கள். இவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 25 இருபால் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பள்ளியில், கடந்த 9 ஆண்டுகளாக ஆங்கில பாட ஆசிரியராகப் பணியாற்றிவரும் முரளி கிருஷ்ணன் என்பவருக்கு 55 வயது ஆகிறது. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். அவர்கள் திருமணமாகி தங்கள் குழந்தைகளுடன் … Read more

பிரதமர் மோடியின் பஞ்சாப் விசிட்; சிறந்த பாதுகாப்பு வழங்கியதாக 14 காவலர்களுக்கு விருது!

கடந்த ஜனவரி மாதம் ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வது, அதில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, ஹுசைனிவாலா தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்வது, பிற கட்சிசார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பல்வேறு திட்டமிடல்களுடன் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்றார். விமான நிலையத்திலிருந்து சாலை வழியாகப் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டருக்கு முன்னால், பிரதமரின் வாகன அணிவகுப்பு மேம்பாலம் … Read more

“முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றால் வாழ்த்துபவர்கள், பிரதமர் மோடியை விமர்சிக்கிறார்கள்!" – வானதி

பா.ஜ.கவின் தேசிய மகளிரணி கூட்டம் நேற்று புதுச்சேரியில் நடைப்பெற்றது. அனைத்து மாநில மற்றும் தேசிய மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தை துவக்கி வைத்த தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், “நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மூலம் பா.ஜ.க-வின் செல்வாக்கு நாடு முழுவதும் அதிகரித்திருப்பதும், நம் வேட்பாளர்களுக்கு பெண்களின் ஆதரவு இருப்பதும் தெளிவாகியிருக்கிறது. குறிப்பாக உத்தப்ரபிரதேச தேர்தல் முடிவுகள் பா.ஜ.க மீது பெண்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தை மாதிரியாகக் கொண்டு … Read more

"அந்த ஒரு விஷயம் பிரச்னையா இருந்தது; இருந்தாலும், நல்லா நடிச்சிருக்கோம்!"- விக்ரம் பிரபு

‘ டாணாக்காரன்’ கதையை டைரக்டர் சொன்னப்போ என்ன தோணுச்சு? “ஏதாவது புதுசா இருக்கணும்னு நினைச்சுதான் கதை கேட்பேன். புரொடியூசர் எஸ்.ஆர் பிரபு போன் பண்ணி கதையோட ஒன்லைன் சொன்னார். ரொம்ப நல்லாயிருந்தது. டைரக்டர் தமிழ்-ஐ மீட் பண்ணினேன். கதையை அழகாகச் சொன்னார். சொல்ற விஷயத்துலயே நிறைய இன்புட்ஸ் தெரிஞ்சது. அப்புறம்தான், போலீஸ் துறையில தமிழ் இருந்திருக்கார்னு தெரியவந்தது. படமா நல்லா எடுப்பார்னு நம்பிக்கையில படத்துல நடிச்சேன். படம் பார்த்தப்போதும் இதே பீல் கிடைச்சிருக்கு. முக்கியமான படமா இது … Read more

“ஜோ பைடனின் ஒரு வார்த்தை கூட உறுதியளிக்கும் வகையில் இல்லை..!" – உக்ரைன் எம்.பி

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று உக்ரைன் நாட்டின் முக்கிய அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் சந்தித்துப் பேசினார். ஏற்கெனவே இந்த விஷயம் தொடர்பாக ஜோ பைடன் நேட்டோ கூட்டமைப்பிலும், ஐரோப்பிய யூனியன் படைகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோ பைடன் போலந்தில் தஞ்சம் அடைந்திருக்கும் உக்ரைன் மாக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பைடன், “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.” என்று … Read more

பாலியல் வழக்கில் `விருதுநகர் மாடல்'… முதல்வர் ஸ்டாலினின் சட்டம் – ஒழுங்கு அணுகுமுறை எப்படி?

பாலியல் வன்கொடுமை: விருதுநகர் பாண்டியன் நகர்ப் பகுதியில் தன் தாயுடன் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை காட்டி ஹரிஹரன் பலமுறை தனிமையிலிருந்துள்ளார். இவர்கள் இருவரும் தனிமையிலிருந்ததை அந்த பெண்ணுக்குத் தெரியாமல் வீடியோப் பதிவு செய்திருக்கிறார் ஹரிஹரன். கைதுசெய்யப்பட்ட ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது ஹரிஹரனிடம் அந்த பெண் … Read more

600 ஏக்கர், 127 ரகங்கள்; ஆசியாவின் மிகப்பெரிய மாந்தோட்டத்தை உருவாக்கிய முகேஷ் அம்பானி; பின்னணி என்ன?

முகேஷ் அம்பானியின் இந்திய பன்னாட்டு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெறும் பெட்ரோலியம் மற்றும் தொலை தொடர்பில் மட்டும் சிறந்து விளங்கவில்லை. மாறாக அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய மாம்பழத்தோட்டத்தை சொந்தமாக வைத்து ஏற்றுமதி செய்து வருகிறது. சரி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஏன் மாம்பழ தோட்டத்தை உருவாக்க வேண்டும்? முகேஷ் அம்பானி விஞ்ஞானிகளுக்குச் சாவல் விடும் தேனீக்கள் மா விளைச்சலைக் கூட்டும் வீட்டு ஈக்கள்! இந்த கேள்விக்கான கதை 1997-ம் ஆண்டில் ஆரம்பிக்கிறது. ரிலையன்ஸ்க்கு … Read more