உணவில் புழு; புகார் கொடுத்தவர்கள் மீது வழக்கு – உணவக உரிமையாளரை எச்சரித்த உணவுப் பாதுகாப்புத்துறை!
சேலம் மாநகரில் உள்ள பிரியாணிக்கடை ஒன்றில் தால்ச்சாவில் புழு இருந்ததாக உணவுப்பாதுகாப்புத்துறைக்கு புகார் அனுப்ப, உணவுப்பாதுகாப்புத்துறையினர் அந்த ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், புகார் சொன்னவர்களை அள்ளிக்கொண்டு போய் சிறையிலடைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு மருத்துவர்களும், ஒரு மருத்துவ மாணவரும் அடக்கம். சேலம் திருவாக்கவுண்டனூரை சேர்ந்தவர் ஆதம் பாக்ஷா. இவர் ஏ.எம்.பிரியாணி எனும் பெயரில் பல்வேறு இடங்களில் உணவகங்கள் வைத்துள்ளார். இவரது கடையில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினரிடம் விசாரித்தபோது, … Read more