" 'டபுள் இன்ஜின்' எனும் 'டப்பா இன்ஜின்' தமிழ்நாட்டில் ஓடாது!"- மோடிக்கு ஸ்டாலின் பதிலடி

மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ்நாட்டுக்கு ‘டபுள் இன்ஜின்’ சர்க்கார் தேவை. மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்” என்றார். பிரதமர் மோடி இந்நிலையில் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “பிரதமர் … Read more

ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; கனெக்ட் ஆகிறதா இந்த 'ஆந்தாலஜி' படம்?

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வரும் இந்தப் பாகத்தில் ‘ஹாட்ஸ்பாட் 2’ படத்திற்காக கதை கேட்டுக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர். இயக்குநராக நினைக்கும் பெண் (ப்ரியா பவானி ஷங்கர்) அத்தயாரிப்பாளரைச் சந்தித்து கதை சொல்கிறார். தயாரிப்பாளரிடம் இயக்குநர் சொல்லும் 3 குறும்படங்களின் தொகுப்பே இந்த இரண்டாம் பாகம். டியர் ஃபேன்: இரண்டு சமகால இளைஞர்களான ரக்ஷனும், ஆதித்யா பாஸ்கரும் தாதா, ராசா என இரு உச்ச நடிகர்களின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். நட்சத்திரங்களைக் கொண்டாடுவது, போட்டியாக நினைக்கும் நட்சத்திரங்களின் போஸ்டர்களைக் … Read more

மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்?

2005ம் ஆண்டு கடலூர் சிறையிலிருக்கும் மருத்துவக் கல்லூரி மாணவன் ஜீவா ( ஆகாஷ் நாகராஜன்) ஜெயிலில் செய்கிற ஒரு சம்பவத்தால் உயர் அதிகாரிகளால் கவனிக்கப்படுகிறான். அதன் பின் அவன் ஏன் சிறையில் இருக்கிறான் என்று விரிகிறது படம். பள்ளிப் பருவத்திலிருந்து நண்பர்களாக இருக்கும் கேங். அதில் நாயகன் ஜீவா மருத்துவக் கல்லூரி மாணவர். மற்ற நண்பர்கள் வெவ்வேறு வேலைகளில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அட்டிப் போட்டாலே, இவர்களின் பேசுபொருள் பெண்கள்தான். மாயபிம்பம் விமர்சனம் | Maayabimbam review … Read more

சென்னை: திமுக முன்னாள் எம்.பி-யின் காரை சேதபடுத்திய வழக்கு – தலைமறைவான அதிமுக நிர்வாகி!

சென்னை வேளச்சேரி செக் போஸ்ட் நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவர் தி.நகர் ஹபிபுல்லா சாலையில் தி.மு.க-வின் முன்னாள் எம்.பி ஜெயதுரைக்குச் சொந்தமான ஆயுர்வேத மருத்துவமனையில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், 13.1.2026-ம் தேதி சௌந்திரபாண்டியார் அங்காடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். கடந்த 13-ம் தேதி மாலையில் மருத்துவமனைக்கு 30 பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், மருத்துவமனை ஊழியர்களுடன் … Read more

'கூட்டணிக்கு அவர் வேண்டாம் முதல்வரே!' – தூதுவிட்ட விசிக… குழப்பத்தில் திமுக!

தி.மு.க கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு முண்டியடிக்கும் சூழலில், ‘ராமதாஸ் நம் கூட்டணிக்கு வேண்டாம்’ என முதல்வருக்கு வி.சி.க தூது அனுப்பியதாகச் சொல்கிறார்கள் அறிவாலயப் புள்ளிகள். தந்தை – மகன் மோதலால் பா.ம.க பிளவடைந்து இரு அணிகளாக தேர்தல் களத்தில் நிற்கிறது. சர்வேக்களின் முடிவுகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் என அனைத்தும் `அன்புமணி பா.ம.க’-விடம் இருப்பதால் அன்புமணி தரப்பை முதலில் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும் ‘ராமதாஸ் வருவதாக இருந்தாலும் வரட்டும்’ என கதவை திறந்தும் … Read more

மும்பை: உத்தவ் கட்சி கவுன்சிலர் மேயராவதை தடுத்த பாஜக… மகாராஷ்டிராவில் 15 மாநகரில் பெண் மேயர்கள்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மேயர் பதவிக்கான லாட்டரி குலுக்கல் மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் எந்த மாநகராட்சிக்கு பெண் மேயர், எந்த மாநகராட்சிக்கு பொது பிரிவை சேர்ந்தவர் மேயர் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. மேயர் பதவிக்கான லாட்டரி குலுக்கலில் எஸ்.சி பிரிவும் சேர்க்கப்படுவது வழக்கம். ஆனால் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான நகர்ப்புற மேம்பாட்டுத்துறை லாட்டரி குலுக்கலில் இந்த பிரிவை சேர்க்கவில்லை. இதற்கு காரணம் மும்பையில் சிவசேனா(ஷிண்டே) மற்றும் பா.ஜ.கவை … Read more

மங்காத்தா: 'தல ரசிகர்’களுக்காக 'தல ரசிகர்’களால் 'தல’ சினிமா! – 15 ஆண்டுகளுக்குமுன் விகடன் விமர்சனம்

அஜித், அர்ஜுன், த்ரிஷா, பிரேம்ஜி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா திரைப்படம், இன்று 15 ஆண்டுகளுக்கு பின்னர் ரீரிலீஸ் ஆகியுள்ளது. அஜித் ரசிகர்கள் இதனால் உற்சாகமாக உள்ளனர். மங்காத்தா படம் 2011 -ம் ஆண்டில் வெளியானது. அப்போது அப்படத்துக்கு ஆனந்த விகடன் வழங்கிய விமர்சனம் இங்கு மீண்டும்…. பார்க்கலாமா..! மங்காத்தா கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங் பணம் 500 கோடியை, யார் அலேக் செய்வது என்ற தப்பாட்டமே ‘மங்காத்தா’! ‘தல ரசிகர்’களுக்காக … Read more

குடிபோதையில் விழுந்த கணவன்; காய்கறி வெட்டிய கத்தியுடன் பிடித்த மனைவி – டெல்லியில் சோகம்

டெல்லி அருகில் உள்ள குருகிராம் என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுனில் குமார். கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்று தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். சுனில் குமார் மனைவி மம்தா. சுனில் குமார் வழக்கமாக மது அருந்துவது உண்டு. அவர் வெளியில் மது அருந்திவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவர் தனது படுக்கை அறையில் இருந்து பாத்ரூம் செல்வதற்கு தள்ளாடியபடி வந்தார். வழியில் அவரது மனைவி காய்கறி வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது சுனில் குமார் எதிர்பாராத விதமாக … Read more

Mankatha: "க்ளைமாக்ஸை சொல்லிடாதீங்க"- மங்காத்தா ரீ-ரிலீஸ் குறித்து வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித், த்ரிஷா, அர்ஜுன் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மங்காத்தா’. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது. அஜித்தின் 50-வது படமான ‘மங்காத்தா’ 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் உற்சாகமானக் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர். ‘மங்காத்தா’வில்… இந்நிலையில் இயக்குநர் வெங்கட்பிரபு விஜய், அஜித்துடன் எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘மங்காத்தா’ குறித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். ” ‘மங்காத்தா’வில் மீண்டும் இன்று வாழும் … Read more