Vijay: "விஜய் தம்பியாக நடிக்க தனுஷ் கிட்ட தான் கதை சொன்னேன்!" – பகிரும் இயக்குநர் ஏ. வெங்கடேஷ்

விஜய் நடிப்பில், ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ‘பகவதி’ திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. சினிமா விகடன் யூட்யூப் சேனலின் ‘ரீவைண்ட்’ தொடருக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். Bhagavathi Movie ‘பகவதி’ திரைப்படம் தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடையே பகிர்ந்தவர், அப்படத்தில் தம்பி கதாபாத்திரத்திற்கு தனுஷை நடிக்க வைக்க முயற்சி செய்ததாகக் கூறினார். இயக்குநர் ஏ. வெங்கடேஷ் பேசுகையில், “‘பகவதி’ திரைப்படத்திற்கு முதலில் ஜெய் நடித்திருக்கும் தம்பி கதாபாத்திரத்திற்கு தனுஷ் சாரை கேட்கலாம்னு நினைச்சிருந்தேன். … Read more

தேமுதிக: "எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம்" – கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் சூசகம்

சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஐயகாந்த் இன்று (ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், “தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. பிப்ரவரி 20க்குப் பிறகுதான் தேர்தல் தேதியை அறிவிக்கப் போகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக எங்கள் குழந்தை. ஒரு அம்மாவாக அதற்கு எப்போது நல்லது செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனால் உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய ஒரு நல்ல … Read more

Rajini: `இது ரீ-ரிலீஸ் இல்ல.!' – 37 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் ரஜினியின் பாலிவுட் படம்!

1989-இல் படமாக்கப்பட்டு, 30 வருடங்களுக்கு மேலாகியும் வெளியாகாமல் இருந்த ரஜினி நடித்த ‘ஹம் மெய்ன் ஷஹென்ஷா கவுன்’ (Hum Mein Shahenshah Kaun) என்ற இந்தி திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகிறது என அறிவித்திருக்கிறார்கள். பிரபல இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ரா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் இப்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. Hum Mein Shahenshah Kaun Film பாலிவுட் தயாரிப்பாளர் ராஜா ராய் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஷத்ருகன் சின்ஹா, ஹேமா மாலினி, அனிதா … Read more

OPS: அடுத்தடுத்து அணி மாறும் ஆதரவாளர்கள்; சட்டமன்றத்தில் சேகர் பாபு உடன் சந்திப்பு நடத்திய ஓபிஎஸ்?

சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இந்த சூழலில் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து எதுவும் அறிவிக்காமல் இருக்கிறார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இதனிடையே ஓபிஎஸ் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் … Read more

மும்பை கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? – பாலிவுட் நடிகர் கமால் கானிடம் போலீஸார் விசாரணை!

பாலிவுட் நடிகர் கமால் கான் மும்பை லோகண்ட்வாலா பகுதியில் வசித்து வருகிறார். அவர் வசித்து வந்த பங்களாவிற்கு அருகில் உள்ள நாலந்தா கட்டடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. உடனே அப்பகுதியை சேர்ந்த இரண்டு பேர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். கட்டடத்தில் இரண்டாவது மற்றும் 4வது மாடியில் துப்பாக்கியால் சுட்டு சுவர் சேதம் அடைந்திருந்தது. ஒரு … Read more

Doctor Vikatan: ஓவர் சந்தோஷம்… இதய ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை என்பது உண்மையா?

Doctor Vikatan: சந்தோஷமாக இருந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்குமா…. ஓவர் சந்தோஷம் இதயத்துக்கு நல்லதில்லை என்றும் சொல்கிறார்களே… இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதய நோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல். இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் பொதுவாகச் சந்தோஷமாக இருப்பது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. கார்டிசால், அட்ரீனலின், நார்-அட்ரீனலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் குறைகின்றன. சிம்பதெடிக் சிஸ்டம் (Sympathetic system) … Read more

"நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள்; ஒரு நோக்கத்திற்காக இணைந்துள்ளோம்" – டிடிவி தினகரன் குறித்து இபிஎஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று (ஜன.23) மதுராந்தகத்தில் நடைபெற்றது. அதிமுக பாஜகவுடன் அமமுக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொண்டன. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். NDA கூட்டணி பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக தலைவர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இச்சந்திப்பில் பேசிய … Read more

கோவை மாநகரை கரும்புகையால் மூழ்கடித்த தீ விபத்து; களமிறங்கிய ராணுவம்; தீயணைக்கப்பட்டது எப்படி?

கோவை காட்டூர் பகுதியில் வாகன உதிரி பாகங்கள் விற்பனைக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மூன்று மாடி கட்டிடமான அதன் தரைத்தளத்திலிருந்து, மொட்டை மாடி வரை அனைத்து தளங்களிலும் தீ பரவியது. கோவை தீ விபத்து சிறிது நேரத்திலேயே அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் தீ பரவத் தொடங்கியது. அந்த நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். பிறகு சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்தனர். … Read more

எடப்பாடி – டிடிவி – அண்ணாமலை; மனக்கசப்புகள் மறந்து மேடையேறி கரம்கோர்த்த NDA தலைவர்கள்! – Photo Album

NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் Source link

`என்னால் பலனடைந்த பலர் என்னுடன் நிற்கவில்லை..!' – இணைப்பு விழா ஆலோசனையில் மனம் திறந்த வைத்திலிங்கம்

டெல்டாவில் அதிமுக முகமாக அறியப்பட்ட `சோழமண்டல தளபதி’ என கட்சியினரால் அழைக்கப்பட்ட ஓ.பி.எஸ் அணியில் இருந்த வைத்திலிங்கம், அதிலிருந்து விலகி கடந்த 21ம் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார். உடன் அவரது மகன் டாக்டர் சண்முகபிரவும் இருந்தார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த உடனே கிளம்பிய அவரது கார் நேராக அறிவாலயத்தில் போய் நின்றது. இணைப்பு விழா குறித்த ஆலோசனை கூட்டத்தில் வைத்திலிங்கம் “அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இணைந்திருக்கிறேன், நல்லாட்சி செய்து வரும் … Read more