கரூர் மரணங்கள்: ”விஜய்கோ, தவெக கட்சியினருக்கோ போதிய அரசியல் அனுபவம் இல்லை” – வைகோ
நண்பரின் மனைவி மறைவுக்குத் துக்கம் விசாரிப்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திண்டுக்கல் வந்திருந்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததை நாங்கள் வரவேற்கிறோம். விஜய் கரூர் பிரசாரத்திற்கு 8 மணி நேரம் தாமதமாக வந்த காரணத்தினால் மக்கள் தண்ணீர் இன்றி சோர்வடைந்து 41 பேர் உயிரிழந்துள்ளனர். தவெகவினர்தான் மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என யோசித்து இருக்க வேண்டும். கட்சியினருக்கு அரசியல் அனுபவம் இல்லை. கட்சி கட்டமைப்பை முதலில் ஒழுங்குபடுத்த வேண்டும். … Read more