`பிள்ளைய கட்டுவிரியன் கடிச்சதே தெரியல; கடவுள் போல அரசு மருத்துவர்கள் மீட்டாங்க!' – நெகிழும் பெற்றோர்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள குளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவர், கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மனைவி பாப்பாத்தி. இந்த தம்பதியினரின் ஆறு வயது மகள் மதுஸ்ரீ. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த சிறுமியின் தாய் பாப்பாத்தி, தனது தாயார் வீட்டில் மது ஸ்ரீயையும், அவரது சகோதரியையும் விட்டுள்ளார். அப்போது, அங்கு தங்கியிருந்த சிறுமி மதுஸ்ரீக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பாப்பாத்திக்கு அவரது தாயார் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பாப்பாத்தி பதறியடித்தபடி சென்று … Read more