`எங்கள் வீட்டில் அப்படி இல்லை… அது ஈகோவால் வருவதாக நினைக்கிறேன்' – மனம் திறந்த அபிஷேக் பச்சன்

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் அவரின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து அடிக்கடி வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற வதந்தி அதிக அளவில் பரவியது. ஆனால் தற்போது எந்த பொது நிகழ்ச்சிக்குச் சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்கின்றனர். இது குறித்து அபிஷேக் பச்சன் அளித்திருந்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், யார் அதிக வெற்றி பெற்றவர் என்பது குறித்தும், திருமண வாழ்வில் கடைப்பிடிக்கப்படும் பாலினப் … Read more

காளிதாஸ் 2 விமர்சனம்: காணாமல் போகும் குழந்தை; த்ரில் சேர்க்கிறதா இந்த பரபர போலீஸ் விசாரணை?

சென்னை பெருநகரின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மூன்று வயதேயான பெண் குழந்தை ஒன்று காணாமல் போகிறது. குழந்தையின் தாய் சஞ்சு (அபர்ணதி), அபார்ட்மென்ட் செகரட்டரி ரூபா சுந்தரி (சங்கீதா) என அனைவரும் தேடுதல் வேட்டையில் இறங்க, காளிதாஸ் (பரத்), ஏசி வைஷ்ணவி (பவானி ஸ்ரீ) தலைமையிலான காவல் படையும் களத்தில் குதிக்கிறது. சந்தேகப் பார்வை, அதே அபார்ட்மென்ட்டில் வசிக்கும் ஜூனியர் வக்கீலும் பேச்சுலருமான ஸ்டீபன் (அஜய் கார்த்தி) மீது விழுகிறது. உண்மையில் குழந்தைக்கு என்னாவானது, … Read more

சென்னை: வங்கியில் வேண்டுமென்றே 1,156 கிராம் நகைகளை தவறவிட்ட முன்னாள் பெண் ஊழியர் – அதிர்ச்சி பின்னணி

சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளை மேலாளராக அகமது காதிரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், 05.12.2025-ம் தேதி பணியிலிருந்தபோது மணிபர்ஸ் ஒன்று கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்தார். உடனே அதை எடுத்து பார்த்தபோது அதில் 1,34,95,000 ரூபாய் மதிப்புள்ள 1156.50 கிராம் தங்க நகைகள் இருந்தன. உடனே வங்கியிலிருந்த சக ஊழியர்களிடம் கிளை மேலாளர் அகமது விசாரித்தார். பின்னர் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமரா பதிவை அவர் ஆய்வு செய்தார். அப்போது பர்தா அணிந்த … Read more

Neelira: "போரை விரும்பாதவர்களுக்கான படம் இது.!"- நீளிரா படத்தை பாராட்டிய சூர்யா

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி இணைந்து தயாரித்திருக்கும் ‘நீளிரா’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இலங்கையின் போர் பதற்ற சூழலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சோமிதரன் இயக்கியிருக்கிறார். நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நீளிரா இந்நிலையில் இப்படத்தைப் பாராட்டி நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் பேசியிருக்கும் அவர், ” ‘நீளிரா’ என்றால் நீண்ட … Read more

என்னை தோற்கடிக்க முடியாது! – கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஆம் ஆத்மி MP ராகவ் கட்சி மாறுகிறாரா?

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சதா மாநிலங்களவையில் அக்கட்சியின் துணைத்தலைவராக இருந்தார். ஆனால் திடீரென அவரை அந்த பதவியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி விடுவித்துள்ளது. துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் நீக்கப்பட்டது குறித்து மாநிலங்களவை செயலாளரிடம் ஆம் ஆத்மி முறைப்படி தெரிவித்ததுடன், ராகவுக்கு சபையில் பேசும் நேரத்தை ஒதுக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. ராகவ் சமீப காலமான ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்ற கூட்டம் எதிரிலும் … Read more

“இந்த முறை தனிமையுடன் நான் நிஜமாகவே போராடினேன்" – நடிகை மாளவிகா மோகனன் எமோஷ்னல் பதிவு!

மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது இயக்குநர் தியாகராஜான் குமாரராஜா இயக்கத்தில் பாட்கெட் நாவல் திரைப்பத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைபடத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அதற்காக நடிகை மாளவிகா மோகனன் சென்னை வந்துதங்கி, படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அவர் சென்னையில் தங்கியிருந்த அனுபவம் குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், “மார்ச் மாதம் எனக்கு மகிழ்ச்சியும் கலக்கமும் நிறைந்த ஒரு மாதமாக அமைந்தது. இந்த … Read more

'செங்கேணி அம்மன் கோவிலில் வழிபாடு.!' – தொகுதிக்குள் சென்டிமென்டாக பிரசாரத்தை தொடங்கிய உதயநிதி!

திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று பிரசாரத்துக்கு வந்த உதயநிதி 2021 கனெக்ட்டோடு செண்டிமெண்டாக தனது பிரசாரத்தை தொகுதிக்குள் ஆரம்பித்தார். உதயநிதி துணை முதல்வரான உதயநிதி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை நடத்திவருகிறார். இதற்கிடையில் நேற்று (ஏப்ரல் 2) அவர் போட்டியிடும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தார். காலையில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், … Read more

Doctor Vikatan: காய்ச்சல் அடித்தால் உடனே பாராசிட்டமால் மாத்திரை போடுவது சரியா?

Doctor Vikatan: லேசாக காய்ச்சல் அடித்தாலே சிலர், உடனே பாராசிட்டமால் மாத்திரை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், என் பாட்டியோ, காய்ச்சலுக்கு உடனே மாத்திரை போடத் தேவையில்லை…. ஒன்றிரண்டு நாள்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என்கிறார். இரண்டில் எது சரி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் மனிதர்களின் உடலைப் பொறுத்தவரை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்பதுதான் நார்மலான வெப்பநிலை. நம் உடலின் ரத்தத்தின் சூடானது 98.6 டிகிரி என்ற அளவில் இருக்கும்போதுதான், … Read more

சுக்கிரன் – குரு பார்வையில் சந்திரன் | வெற்றி மேல் வெற்றிபெறும் ராசிகள் | இன்றைய‌ ராசிபலன் 3.4.26

இன்று சந்திரன் துலாம் ராசியில் சஞ்சாரம் செய்கிறார். துலாம் ராசியை சுக்கிரன் மற்றும் குரு பார்க்கின்றனர். இந்த யோகம் 12 ராசிகளுக்கும் எப்படிப்பட்ட பலன்களைக் கொடுக்கும் என்று கணிக்கிறார் ஜோதிடர் பாரதி ச்ரிதர். Source link