`சின்ன பாப்பா எங்கள் செல்ல பாப்பா!’ – 100வது அகவையில் 'வண்ணக்கிளி' பி.எஸ்.சரோஜா
பழம்பெரும் நடிகை பி.எஸ். சரோஜா, தன்னுடைய நூறாவது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளார். எம்.ஜி.ஆர் – சிவாஜி கணேசன் என்னும் இருபெரும் ஆளுமைகள் இணைந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக் கிளி’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு மனைவியாகவும் சிவாஜிக்கு காதலியாகவும் நடித்தவர். இவரைக் குறிப்பிட இந்த ஒரு அறிமுகமே போதுமென்றாலும், எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்துக்கு முன்பே தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் உச்ச நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்தவர், கருப்பு வெள்ளை காலத்தில் பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்தவர். … Read more