“இன்பநிதி அரசியலுக்கு வருவது திமுக-வின் உட்கட்சி விவகாரம்!" – சொல்கிறார் ஆர்.எஸ் பாரதி

“தி.மு.க ஆட்சியில் தனியார்மயம் தலைவிரித்தாடுகிறதே!” “அரசியலமைப்பின் வழிநின்று ஆட்சி நடத்த வேண்டிய ஒன்றிய பா.ஜ.க அரசு, அரசியல் எதிரிகளை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை ஒன்றிய அரசு தருவதில்லை என்பது எல்லோருக்குமே தெரியும். நிதி நெருக்கடியால், ஆள் பற்றாக்குறையும் மாநில அரசில் நிலவுகிறது. இப்படியான நிர்வாகச் சிக்கல்களும், நிதி நெருக்கடியும் இருப்பதால்தான் ஆங்காங்கே தனியாரிடம் வழங்க வேண்டியிருக்கிறது. அரசு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் கோரிக்கைகளையும் அரசு பரிசீலித்துவருகிறோம்” உதயநிதி – இன்பநிதி “சரி, முன்னாள் … Read more

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் இணையும் புதிய படம்: பூஜை க்ளிக்ஸ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகும் இந்த படம் பெண்-மைய கதையாக உருவாகிறது என்றும், இதில் மிஷ்கின் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் போஸ்டர் செஸ் விளையாட்டின் குறியீட்டுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதை பிரவீன் எஸ் விஜய் இயக்கவுள்ளார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். பூஜை கீர்த்தி சுரேஷ் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ், பிரவீன், மிஷ்கின் … Read more

KPY Bala: "படத்தில் கடைசி 5 நிமிடத்தைப் பார்த்து அழுதேன்" – காந்தி கண்ணாடி படம் குறித்து மா கா பா

`கலக்கப் போவது யாரு’, `குக்கு வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா. தவிர பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது, பல குழந்தைகளைப் படிக்க வைப்பது எனத் தொடர்ந்து சமூக சேவை செய்து வருகிறார். Gandhi Kannadi – KPY Bala தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் ‘காந்தி கண்ணாடி’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் நாளை (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகிறது. … Read more

காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங்க" – KPY பாலா

`கலக்கப் போவது யாரு’, `குக்கு வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா. தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் ‘காந்தி கண்ணாடி’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் நாளை ( செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பிரஸ் ஷோ நேற்று(செப்டம்பர் 3) திரையிடப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சி பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தைப் பார்த்திருக்கின்றனர். Gandhi Kannadi – KPY Bala இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய … Read more

Stalin: "இங்கு கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே ஸ்டாலின் வெளிநாடு போயிருக்கிறார்" – இபிஎஸ் தாக்கு

“டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் வருடத்துக்கு ரூ. 5400 கோடி என்று, இந்த நான்காண்டுகளில் ரூ. 22,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டி பேசியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி பாலியல் வன்கொடுமைகள் மதுரை மாவட்டத்தில் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, பழங்காநத்தத்தில் பேசும்போது, ‘’மேற்கு தொகுதி அதிமுகவின் கோட்டை. இந்தத் தொகுதியில் வந்திருக்கும் உங்களின் எழுச்சியே அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெல்லும் என்பதற்கான சாட்சி. … Read more

குமார சம்பவம்: "நீ சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என அப்பா சொன்னார்" – ஹீரோவாக அறிமுகமாகும் குமரன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நடிகர் குமரன் தங்கராஜன். தற்போது ‘குமார சம்பவம்’ படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் குமரன் தங்கராஜனுடன் பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம். குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா, தாரிணி, கவிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ‘குமார சம்பவம்’ படம் வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. வரும் 12ஆம் … Read more

தெருநாய்கள் விவகாரம்: "மனிதர்களுக்குச் செய்வதைப் போல நாய்களுக்குச் செய்யாமல் போனதால்" – மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் வேலூரில் இன்று (செப்டம்பர் 4) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம், ‘சினிமா துறையிலிருந்தே தவெக தலைவர் விஜய்க்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றனவே இதை எப்படிப் பார்க்கிறீர்கள். 2026-ல் அவருடைய அரசியல் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும்?’ என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த மிஷ்கின், “நான் ஒரு சுத்தமான சினிமாக்காரன். அரசியலைப் பற்றி நான் எதுவும் கூறியதில்லை. தவெக தலைவர் விஜய் தம்பி விஜய் தற்போது அரசியல் கட்சித் தலைவராகிவிட்டார். என்னைப் பொறுத்தவரை அவர் கடுமையான … Read more

`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்… 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரியர்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு பேராசிரியராக பணியாற்றியவர் ஆனந்த் விஸ்வநாதன். இவர் பொருளாதாரத்துறை துறைத்தலைவராகவும் இருந்துவந்தார். இதற்கிடையே பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2014-ம் ஆண்டு 5 மாணவிகள் மூணாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன் மீது போலீஸார் 4 வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் தேவிகுளம் கோர்ட்டில் நடந்துவந்தன. அதில், 2 வழக்குகளில்  பேராசிரியரை கோர்ட் விடுவித்திருந்தது. … Read more

ஜிஎஸ்டி வரி குறைப்பு செப்.22 முதல் அமல் – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். இந்த கூட்டத்தில் 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வரம்பை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதன்படி இனி 5% மற்றும் 18% என மட்டுமே ஜிஎஸ்டி வரி அடுக்குகள் இருக்கும் என அவர் தெரிவித்தார். அதேநேரத்தில் … Read more