வசூலில் மாஸ் காட்டும் லவ் டுடே, இத்தனை கோடி கலெக்ஷன் ஆ?

லவ் டுடே கலெக்‌ஷன்: கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பிரதீப் தானே ஹீரோவாக நடித்து ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் லவ் டுடே படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவானா மற்றும் ரவீனா ரவி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படம் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் … Read more

குறைகிறது சுங்கச்சாவடி கட்டணம் – அமைச்சர் எ.வ.வேலு தகவல்

வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி வளாகத்தில் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற பயிற்சி பணிமனை கட்டுமானப் பணிகள் ரூ.3.73 கோடியில் நடைபெற்றுவருகிறது. இதனை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று  ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்க வசதியாக 69 ஐ.டி.ஐ.க்களை மேம்படுத்த ரூ.264.83 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பணிகள் அனைத்தையும் வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளேன். … Read more

ரஜினியுடன் நடிக்க ஆசையா?…. செம வாய்ப்பு வந்திருக்கு

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலை வெறி என்ற பாடல் உலக அளவில் ஹிட்டடித்தது. படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வை ராஜா வை படத்தை இயக்கினார். இதில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாகவும், ப்ரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். படத்தில் … Read more

நான் அவருக்கு அக்கா; சூர்யா எனக்கு தம்பி – பலே விளக்கம் கொடுத்த சூர்யா, டெய்சி

பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளரும், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவின் மகனுமான சூர்யா சிவா தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை ஆபாசமாக பேசினார். மேலும் அந்த ஆடியோவில் நீ அமித்ஷாட்ட போ, மோடிட்ட வேணாலும் போ என்னை உன்னால ஒன்னும் செய்ய முடியாது. உன்னை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்தார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட … Read more

மருத்துவமனையில் கமல்ஹாசன்! இந்தவாரம் பிக்பாஸை தொகுத்து வழங்கப்போவது யார்?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பில் கோல் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வாரம் கோர்ட் ரூம் டாஸ்க் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸூக்கு ஒரு சோகமான செய்தி வந்து சேர்ந்துள்ளது. இதுவரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த கமல்ஹாசன் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். சளி உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக இன்னும் இரண்டு நாட்கள் … Read more

அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் வெல்டிங் செக்க்ஷனில் தீ விபத்து: இருவர் காயம்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் வெல்டிங் செக்க்ஷனில் ஏற்பட்ட தீ விபத்தில்  இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரே மாதத்தில் இரண்டு முறை நடந்த சம்பவங்களால், தொழிலாளர்களிடையே பரபரப்பு அதிகரித்துள்ளது. குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கு தேவையான வெடி பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 19 ஆம் தேதி  அதிகாலையில் தொழிற்சாலையில் உள்ள சிடி செக்சனில் பலத்த … Read more

Viral Video: ஆபாச வீடியோ சர்ச்சை அஞ்சலி அரோரா நள்ளிரவில் செய்த வேலையை பாருங்கள்

Anjali Arora Video: இன்றைய காலக்கட்டத்தில் சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், ஏதாவது ஒரு விஷயம் வைரலாகிவிட்டால், மக்கள் பிரபலமாகிவிடுகிறார்கள். இதேபோன்ற பிரபலம் அஞ்சலி அரோராவுக்கு கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்பு அஞ்சலி அரோரா யார் என்று கேட்டால், பலருக்கு தெரியாது. இன்ஸ்டாகிராமில் வைரலான ‘கச்சா பாதம்’ பாடல் மூலம் அஞ்சலி அரோரா பிரபலம் ஆனாலும், ஆபாசமாக போஸ் கொடுத்து இருப்பது போன்ற எம்எம்எஸ் வீடியோ லீக் ஆனதை அடுத்து, அதிகமானோர் அவரை பின்தொடரத் தொடங்கினர். அந்த … Read more

உங்கள் முயற்சி வெற்றி பெறாது – ஆளுநர் ஆர்.என்.ரவி

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள சபா மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. மேல்கோட்டை ஸ்ரீயது கிரி யதிராஜமடம் 41-வது பட்டம் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீயதுகிரியதி ராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய ஆளுநர், “கன்னியாகுமரி ஒரு புண்ணிய பூமியாகும். … Read more

வீங்கிய விரல்கள்… நடுங்கும் கால்கள்… புடின் உடல் நிலை குறித்த பகீர் தகவல்கள்!

ரஷ்யா உக்ரைன் போர்: உக்ரைனுடனான போருக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தற்போது வெளிவந்துள்ள புடினின் படத்தில், அவரது கை விரல்கள் வீங்கியுள்ள தோற்றம் பல விதமான கவலைகளை எழுப்பியுள்ளது. உண்மையில், புடின் வீங்கிய விரல்களுடன் நாற்காலியை இறுக்கமாகப் பிடித்தபடி காணப்பட்டார். செவ்வாய்கிழமை (நவம்பர் 22) கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கேனல் உடன் நடத்திய சந்திப்பில் எடுக்கப்பட்ட புடின் புகைப்படம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர் தனது … Read more

ஆளுநரே இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் – அழகிரி எச்சரிக்கை

சென்னை சாஸ்திரி பவனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி 1962-ல் நாடு மிகப்பெரும் அவமானத்தை சந்தித்தது. நமது அணிசேரா கொள்கை, அமைதிக் கொள்கை ஆகியவற்றால் ஆக்கிரமிப்பு, ஊடுருவல் அதிகரித்து, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து நிலவியது. இதேபோல கடும் வறட்சி ஏற்பட்டு, உணவு பஞ்சத்தால் நாடு பெரும் இன்னல்களை சந்தித்தது. மக்களுக்கு உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. லால் பகதூர் சாஸ்திரி பிரதமரான பிறகு, ‘நாடும், நாட்டின் ஒருமைப்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்பதை வலியுறுத்தி … Read more