என்னுடன் சேர்ந்து நடிக்க பயப்படுகிறார்கள் – பிரகாஷ் ராஜ்

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துவருபவர் பிரகாஷ் ராஜ். மிகச்சிறந்த நடிகரான பிரகாஷ் ராஜுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றன. வில்லன் கதாபாத்திரத்திலேயே வித்தியாசம் காட்டி நடிக்கும் பிரகாஷ் ராஜ் குணச்சித்திர வேடங்களிலும் அசத்தல் நடிப்பை கொடுப்பவர். சமீபத்தில் தமிழில் இவர் நடித்த திருச்சிற்றம்பலம் பெரும் ஹிட்டடித்தது. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்த பிரகாஷ் ராஜ் தனது தோழியும், பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் கொலைக்கு பிறகு அரசியல் கருத்துக்களையும் கூறிவருகிறார். குறிப்பாக பாஜகவையும், இந்துத்துவா … Read more

அரசின் அலட்சியப்போக்கு கண்டனத்திற்குரியது! உடனடியாக ஊதிய உயர்வினை வழங்க வேண்டும் -சீமான்

சென்னை: அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்குக் கடந்த 6 ஆண்டுகளாக உரிய ஊதிய உயர்வினை வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. ஊதிய உயர்வு வழங்குவதாகப் பல முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, உறுதியளித்துப் பின் மீண்டும் மீண்டும் ஏமாற்றி, ரப்பர் தோட்டத் தொழிலாளர்களை வீதியில் இறங்கிப் போராட வைத்திருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. கடந்த 1964 ஆம் ஆண்டு, பெருந்தலைவர் காமராசர் அவர்களது ஆட்சிக் காலத்தில், தொழிற்வாய்ப்புகள் குறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் … Read more

மாணவியின் குடும்பத்திற்கு முதல்வர் நேரில் ஆறுதல்! பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என ட்வீட்

சென்னை: அரசு மருத்துவர்களின் தவறான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெற்றோருக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அப்போது, வீடு வழங்கும் ஆணை, அரசு வேலைக்கான பணி ஆணை மற்றும் நிவாரணத் தொகை உள்ளிட்டவை வழங்கினார். சென்னை வியாசா்பாடியை சோ்ந்த 17 வயதான கால்பந்து வீராங்கனை மாணவி பிரியாவின் காலில் தசைநார் கிழிந்தததை அடுத்து கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் அவருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டு … Read more

மக்களவைத் தேர்தல் – திமுகவுடன் கூட்டணி அமைக்க கமல் முடிவு?

மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்திவரும் கமல் ஹாசன் 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல், 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் தனித்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இதனையடுத்து மீண்டும் திரைப்படங்களில் பிஸியாகி உள்ளார். இப்படிப்பட்ட சூழலில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை சந்திக்க தயாராகிவருகிறார். இது தொடர்பாக சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் 85 மாவட்ட செயலாளர்கள், மாநில செயலாளர்கள், … Read more

கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்! மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவியது வட கொரியா

சியோல்: வடகொரியா ‘அடையாளம் தெரியாத ஏவுகணையை’ ஏவியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. அண்மையில் சில மாதங்களாக தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளை வட கொரியா மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் ஐந்துக்கும் அதிகமான ஏவுகணை பரிசோதனைகள் நடத்திய வடகொரியா, இன்று மீண்டும் ஒரு ஏவுகணையை  பரிசோதித்துள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.  வடகொரியா கிழக்கு கடலை நோக்கி “அடையாளம் தெரியாத ஏவுகணையை” ஏவியது என்று தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இன்று (நவம்பர் 17, வியாழக்கிழமை) ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப் … Read more

LPG கேஸ் சிலிண்டர் இனி QR குறியீடுடன்… மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!

LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியைக் கொடுக்கும். QR குறியீடு கொண்ட சிலிண்டரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நீங்கள் சிலிண்டரைக் கண்காணிக்கவும் டிரேஸ் செய்யவும் முடியும். எல்பிஜி சிலிண்டரைக் கண்காணிக்கலாம் இந்தியன் ஆயில் (IOCL) தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, அடுத்த மூன்று மாதங்களில் அனைத்து வீட்டு எரிவாயு சிலிண்டர்களிலும் QR குறியீடு இருக்கும் என்று கூறினார். 2022 ஆம் ஆண்டின் உலக எல்பிஜி வாரத்தையொட்டி, வாடிக்கையாளர்கள் … Read more

படத்தில் ’அந்த’ விஷயம் இல்லவே இல்லை… குஷியில் சசிகுமார் சொன்ன தகவல்

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி  திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்காக பட குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர். படத்திலிருந்து பிரத்யேகமாக, ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சி திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் உரையாடத் தொடங்கினர். இவ்விழாவினில் சசிகுமார் பேசுகையில், தான் படம் நடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதனை தெரிவித்தார். காமன் மேன் என்று … Read more

வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் லிப்லாக் புகைப்படம்! அதுவும் யார்கூட தெரியுமா?

பாலிவுட் திரைப்பட உலகில் கோலோச்சிய ஐஸ்வர்யா ராய், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிஸியாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், மகள் பிறந்ததற்கு பிறகு நடிப்பை நிறுத்திக் கொண்டார். சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கிய ஐஸ்வர்யா ராய், லேட்டஸ்டாக தமிழில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்து அசத்தியிருந்தார். இந்தப் படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் அவர், தன்னுடைய மகள் ஆராத்யாவின் … Read more

7th Pay Commission: ஊழியர்களுக்கு குட் நியூஸ், ஜனவரியில் மாபெரும் டிஏ ஹைக்

7வது ஊதியக்கமிஷன் சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது. விரைவில் அகவிலைப்படியில் மீண்டும் ஒரு பெரிய அதிகரிப்பு இருக்கக்கூடும். பணவீக்க புள்ளிவிவரங்களிலிருந்து இந்த அறிகுறி கிடைத்துள்ளது. ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்களில் மிகப்பெரிய வளர்ச்சி காணப்படுகிறது. இதன் மூலம், 2023 ஆம் ஆண்டில் பணியாளர்கள் புதிய பரிசைப் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகவிலைப்படியின் அடுத்த அதிகரிப்பு ஜனவரி 2023 இல் இருக்கும். தொழில்துறை தொழிலாளர்களுக்கான பணவீக்க புள்ளிவிவரங்கள், அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கலாம் … Read more

HBDRoja: நடிகை டு அமைச்சர்: ரோஜா அரசியலில் பெண் ஆளுமையாக உருவானது எப்படி?

நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாதாரணமான ஒன்று. ஆனால் நடிகைகளுக்கு அப்படி அல்ல. ஒரு நடிகை அரசியலில் சாதித்து அமைச்சர் ஆவதெல்லாம் அவ்வளவு எளிதல்ல. பொது வாழ்க்கைக்கு வரும் நடிகைகளை அவதூறாக பேசி அவர்களின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் இழிவு படுத்திவிடுவார்கள். அப்படி பல தடைகளை தாண்டி இன்று இந்திய அரசியலில் ஆளுமை மிக்க பெண்ணாக உயர்ந்து நிற்கிறார் ரோஜா. ரோஜா பிறந்தநாளான இன்று அவர் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.  செம்பருத்தி படம் மூலம் தமிழ் … Read more