மீண்டும் இலங்கையில் நெருக்கடி; வீதிகளில் திரளும் மக்கள்; ஒடுக்க நினைக்கும் அரசு!

அண்டை நாடான இலங்கை, 1948 ஆம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால், கடனில் மூழ்கியிருந்த இலங்கையின் ஆதிக்கம் செலுத்தி வந்த ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அதனை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்ற பின்பும் நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இலங்கை கடந்த சில வருடங்களாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பில் … Read more

தமிழக ஆளுநரை திரும்பப் பெற கோரும் முடிவும் ஆர்.என்.ரவியின் திடீர் டெல்லி பயணமும்….

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்து, ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திர்நுதது. இந்த நிலையில், ஆளுநரை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவெடுத்திருக்கும் நிலையில் அவசரப் பயணமாக தமிழக ஆளுநர் ரவி டெல்லி செல்கிறார். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில முதல்வர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவி … Read more

பெண்களுக்காக போராட பாஜகவுக்கு தகுதியே இல்லை – அமைச்சர் மனோ தங்கராஜ்

திமுக பேச்சாளர் பாஜகவில் இருக்கும் பெண் உறுப்பினர்களை அவதூறாக பேசினார். இதனையடுத்து அவரது பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இதுதொடர்பாக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. அதில் அண்ணாமலை கைதும் செய்யப்பட்டார். இந்த சூழலில், நாகர்கோவிலில் நேற்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு மாநில அரசுக்கு களங்கம் … Read more

Bad Debts: வங்கிகளின் வாராக்கடன் 60000 கோடி ரூபாயா? செபியின் அதிர்ச்சி அறிக்கை

புதுடெல்லி: இந்திய மூலதனச் சந்தை கட்டுப்பாட்டாளர் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. செபி வெளியிட்டுள்ள தகவலின்படி, 60 ஆயிரம் கோடி ரூபாய், வாராக்கடன் தொகை அதிகபட்ச அளவு அதிகரித்துள்ளது. இந்திய மூலதனச் சந்தைக் கட்டுப்பாட்டாளர் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) மார்ச் 2022 இறுதியில் ‘திரும்ப வசூலிக்க முடியாத கடன்’ பிரிவில் ரூ.67,228 கோடி நிலுவைத் தொகை இருப்பு இருக்கிறது.  பல்வேறு நிறுவனங்களிடமிருந்து 96,609 கோடி ரூபாய் கடன் தொகை … Read more

இது சகோதர, சகோதரி உறவு – மம்தா பானர்ஜி குறித்து ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னையில் நடைபெறும் மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் கலந்துகொள்வதற்காக வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி பலமுறை சென்னை வந்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் திருவுருவச்சிலையை முரசொலி அலுவலகத்தில் அவர் வந்து … Read more

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி

அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறும் வகையில் அனுமதி மறுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நவம்பர் 6ம் தேதி அணிவகுப்புக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நீதிபதி இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில், … Read more

’எனக்கு அவரு வேணும் ப்ளீஸ்’ பிக்பாஸிடம் டீல் பேசும் நிவாஷினி

பிக்பாஸ் சீசன் 6 தற்போது 3 வாரங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் விஜே மகேஷ்வரி, அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டோருடன் பாடகர் அசல் கோலாரும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். முதல் வாரத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த இவர், பின்னர் படிப்படியாக விளையாட தொடங்கினார். இவர் ஜாலியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில்மிஷமாக விளையாட தொடங்கினார். குயின்சியிடம் அவர் காட்டிய சீண்டல் விளையாட்டுகள் எடுபடாத நிலையில், நிவாஷினியுடன் ஜோடி சேர்ந்தார். தினமும் அவருடைய ஏதாவதொரு சில்மிஷ … Read more

டிஜிட்டல் நாணயம்: அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, முதல் முறையாக பதவி ஏற்றதில் இருந்தே, கருப்பு பணம் ஓழிக்கவும், கள்ள நோட்டுகளை அகற்றவும் டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவித்து வருகின்றது. அந்த வகையில், இந்த டிஜிட்டல் கரன்சியானது நிச்சயம் முக்கிய பங்கு வகிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தினை வலுப்படுத்த உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் பண பரிவர்த்தனையை அடுத்த இடத்திற்கு எடுத்து செல்லும் என்றும் கூறப்படுகிறது. டிஜிட்டல் கரன்சி என்பது மின்னணு வடிவில் இருக்கும் … Read more

ஹன்சிகாவின் வருங்கால கணவர் சோஹேல் கதுரியா யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சின்ன குஷ்பூ என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் தான் ஹன்சிகா மோத்வானி, இவரது க்யூட்டான நடிப்பும், செயலும் ரசிகர்களை கவர்ந்தது.  தமிழில் விஜய், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ் மற்றும் சிம்பு போன்ற பல நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர்.  நடிப்பால் பலரை கவர்ந்தது மட்டுமின்றி, செயலாலும் பலரை கவர்ந்தவர் இவர், சில குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு வேண்டியதை செய்து வளர்த்தும் வருகிறார்.  எல்லா நடிகைகளையும் போல இவரை பற்றியும் அடிக்கடி சில கிசுகிசுக்கள் எழுந்தது, … Read more

எலான் மஸ்கின் வலது கரமாக செயல்படும் 'ஸ்ரீராம் கிருஷ்ணன்'… யார் இவர்!

சமீபத்தில் ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், அதில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இதற்காக அவர் ஏற்படுத்தியுள்ள ஆலோகர்கள் குழுவில் ஸ்ரீராம் கிருஷ்ணன் என்பவர் முக்கிய பங்கு வகிக்கிறார். முதலில், குறிப்பாக ட்விட்டரின் தலமை நிர்வாக அதிகாரியாக இருந்த வெளிநாடு வாழ் இந்தியரான பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார். மேலும் ட்விட்டரின் தலைமைப் பொறுப்புக்கு புதிய அதிகாரிகளையும் அவர் நியமித்து வருகிறார். தற்போது, டிவிட்டரின் சரி பார்ப்பு சேவையான ப்ளூ டிக் சேவை பெற … Read more