வைகை ஆற்றில் தரைப் பாலத்தில் போதையில் கிடந்த ஆசாமியால் பரபரப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்று தரைப்பாளத்தில் தண்ணீர் செல்வது தெரியாமல் போதையில் கிடந்த ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. 

குடித்தவர்களுடன் பயணித்தாலும் அபராதம்… போக்குவரத்து விதிகளில் பல மாற்றங்கள் – புது ரூல்ஸ்

மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என பாட்டிலில் எழுதி விற்கப்பட்டாலும் பலரும் அதனைத் தேடியே போகின்றனர். குடிப்பது முன்னொரு காலதில் பொழுதுபோக்காக இருந்த சூழல் மாறி தற்போது குடிப்பதே பொழுது முழுவதும் வேலை என்ற சூழலை சிலர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். டாஸ்மாக் திறந்ததும் முதல் ஆளாக சென்று டாஸ்மாக் மூடியதும் கடைசி ஆளாக வருபவர்கள் தமிழகத்தில் பலர் இருக்கின்றனர். அதேபோல் மது குடித்து அதனால் உயிரிழப்பவர்கள் ஒருபக்கம் என்றால் மதுவை குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டி அதன் … Read more

மாடுகள் விடும் ஏப்பத்திற்கு வரி.. போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்!

நியூசிலாந்து பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன், 2050 ஆம் ஆண்டுக்குள், நாட்டில் கார்பன் உமிழ்வு  பூஜ்ஜியமாக ஆகிவிடும் என்று உறுதியளித்துள்ளார். அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 2030 ஆம் ஆண்டுக்குள் பண்ணை விலங்குகள் காரணமாக வெளியாகும்  மீத்தேன் உமிழ்வை 10 சதவிகிதம்  குறைக்கவும், 2050 க்குள் 47 சதவிகிதம் வரை குறைக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்நிலையில், மாடுகள், ஆடுகள் போன்ர பண்ணை விலங்குகள் விடும் ஏப்பத்திற்கு, வரி விதிக்கும் திட்டம் ஒன்ரை முன் வைத்துள்ளார். நியூசிலாந்தில் மக்கள் … Read more

உடல் எடையை குறைத்து ரூ. 32 ஆயிரம் கோடிகளை பெற்ற எம்பி!

உடல் எடையை குறைத்தால் கோடிக்கணக்கில் பணம் தருகிறேன் என்று யாரவது நம்மிடம் சொன்னால் அந்த சவாலை நம்மால் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியுமா? உடனே அந்த சவாலை ஏற்றுக்கொண்டு அதை செய்துமுடித்துவிட மாட்டோமா, அப்படித்தான் உஜ்ஜைன் எம்பி அனில் ஃப்ரோஜியா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சவாலை ஏற்றுக்கொண்டு 32 கிலோ உடல் எடையை குறைத்து கோடிக்கணக்கிலான தொகையை பரிசாக பெற்றிருக்கிறார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019ம் ஆண்டு ‘ஃபிட் இந்தியா’ … Read more

மீண்டும் இணையும் அட்லீ – விஜய்! வெளியானது முக்கிய அப்டேட்!

தென்னிந்திய திரையுலகில் நடிகர் விஜய்க்கு இருக்கும் புகழ் குறித்து சொல்ல வேண்டிய தேவையில்லை, ஏனெனில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இவரை கொண்டாடுகின்றனர்.  இவரது படம் பற்றிய அறிவிப்பு வெளியானாலே ரசிகர்கள் உற்சாகமாகி விடுவார்கள், அந்த படம் வெளியாகி பல நாட்கள் ஆனாலுமே ரசிகர்கள் அந்த படத்தின் வைபிலேயே சுற்றிக்கொண்டிருப்பார்கள்.  கதைக்காக படம் பார்ப்பவர்களை விட நடிகர் விஜய்க்காக படம் பார்ப்பவர்களே அதிகம் என்றுகூட சொல்லலாம், அந்தளவிற்கு விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு இருந்து வருகிறது.  … Read more

ஹெல்மெட் போட்டு இருந்தாலும் பின் சீட்டில் இருப்பவர்களுக்கு இனி அபராதம்!

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன்  பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய போக்குவரத்து விதியை சென்னை போக்குவரத்து காவல் துறை இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்துகிறது.  இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து மரணங்கள் தமிழகத்தில் தான் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. குறிப்பாக கடந்தாண்டு மட்டும் தமிழகத்தில் 11,419 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 1026 பேர் சாலை விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர்.  சாலை … Read more

Rupee Vs Dollar: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

Rupee Vs Dollar: இந்திய சந்தையில் இருந்து அன்னிய மூலதனம் தொடர்ந்து வெளியேறி வருவதாலும், டாலரின் மதிப்பு வலுப்பெறுவதாலும், புதன்கிழமை ரூபாயின் மதிப்பு மேலும் 61 காசுகள் சரிந்து ரூ.83 என்ற நிலையை எட்டியது. இது ரூபாயின் மிகப்பெரிய சரிவு என்று சொல்லலாம். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று 83.01 ஆக உள்ளது. முன்னதாக செவ்வாயன்று ரூபாய் மதிப்பு சரிந்து, 10 பைசா சரிவுடன் 82.40 ஆக இருந்தது.  அண்மையில் நாட்டின் நிதியமைச்சர், டாலருக்கு நிகரான … Read more

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !

நேபாளத் தலைநகர் காத்மாண்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (அக்டோபர் 19) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பலர் பாதுகாப்புக்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிந்துபால்சௌக் மாவட்டத்தில் நேபாள-சீனா எல்லைக்கு அருகில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அண்டை மாவட்டங்களில் மாலை 3:07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது எனினும், இதனால் சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டதாக தகவல் … Read more

பத்து தல – பிரேக் எடுக்கும் சிம்பு…

சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சிம்புவுக்கு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படம் கம்பேக் கொடுத்தது. அந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்து 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. அடுத்ததாக அவர் கௌதம் இயக்கத்தில் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். கடந்த மாதம் வெளியான இந்தப் படமும் வெற்றி பெற்றிருக்கிறது. அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை சிம்பு கொடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இதே ஃபார்மில் அவர் செல்லவேண்டுமெனவும் விரும்புகின்றனர். அதன்படி, சிம்பு அடுத்ததாக, … Read more

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை தகவல் இதோ

தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது … Read more