தனுஷ் பாராட்டிய கந்தாரா… கேஜிஎஃப் 2-வை மிஞ்சியது – நாளை தமிழில்!

தமிழ் திரை ரசிகர்கள் தமிழ் படங்கள் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிப்படங்களிலும் அதிகம் நாட்டம் கொண்டவர்கள். சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் பல மொழிகள் படங்கள், திரையரங்களுகளில் வெளியாகி ஹிட் அடித்த சம்பவங்கள் இருக்கின்றன.  தற்போது, ஓடிடி பயன்பாட்டின் பெருக்கத்தால் பரவலாக பிற மொழித் திரைப்படங்களும் கவனம் பெறுகின்றன. இந்தி படங்கள் 70, 80 காலக்கட்டங்களில் இருந்து இங்கு ஓடிவரும் நிலையில், ‘பிரேமம்’, ‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’ போன்ற … Read more

கோவை ஈஷா யோகா மையத்துக்கு வருகை தந்த மத்திய வேளாண்துறை அமைச்சர்

கோவை ஈஷா யோகா மையத்துக்கு வருகை தந்த மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்களை வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குனர்கள் சந்தித்து பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் கோவை ஈஷா யோகா மையத்திற்கு இன்று (அக்.14) வருகை தந்தார். அவர் தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகி ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம் செய்தார். முன்னதாக, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் … Read more

அரசு ஊழியர்ளுக்கு சந்தோஷ செய்தி – போனஸ் போட்ட தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளையொட்டி தமிழ்நாடு அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான அரசு … Read more

மலைக்குறவர் சமூக மக்களை பழங்குடிகளாக அறிவியுங்கள் – சீமான் வலியுறுத்தல்

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ காஞ்சிபுரம் படப்பை பகுதியில் வசித்துவந்த மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் வேல்முருகன் தன்னுடைய இருபிள்ளைகளின் கல்விக்காகச் சாதி சான்றிதழ் கேட்டுப் போராடி வந்த நிலையில், சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டதால் மனமுடைந்து உயர்நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். ஈடுசெய்ய முடியாத இழப்பைச் சந்தித்துத் தவிக்கும் அவரது இரு குழந்தைகளுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன். … Read more

பரங்கிமலை கொலை… அப்சல் குருவையும், சதீஷையும் கம்பேர் செய்தாரா விஜய் ஆண்டனி?

சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(23). இவர் மீது ஏற்கனவே ஆர்1 மாம்பலம் காவல் நிலையத்திலும், பரங்கிமலை காவல் நிலையத்திலும் வழக்குகள் இருக்கின்றன. இந்தச் சூழலில் சதீஷ் அதே பகுதியைச் சேர்ந்த பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்துவந்திருக்கிறார். ஆனால் சதீஷின் காதலை மாணவி ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் தொடர்ந்து அந்த மாணவியை பின் தொடர்ந்து தன் காதலை ஏற்கும்படி நச்சரித்துள்ளார். அப்படி நேற்றும் அவர் மாணவியை நச்சரித்துள்ளார். வழக்கம்போல் காதலை ஏற்க மறுத்த … Read more

பழங்குடியினத்தவர் தற்கொலை – திருமாவளவன் சொல்வது என்ன?

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ அவரை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உட்பட அவரது குடும்பத்தினர் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மலைக்குறவர் எனும் சாதியைக் குறிப்பிட்டு பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவரென சாதி  சான்றிதழ் கேட்டு  விண்ணப்பித்துள்ளார்.  வருவாய் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் சாதிச் சான்றிதழ் பெறவியலாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.  ஆதலால், அவர் இரண்டு … Read more

Video: பெண்ணின் கண்ணில் 23 லென்ஸ் – வரிசையாக வெளியே எடுத்த மருத்துவர்கள் – அது எப்படி…?

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி, இன்ஸ்டாகிராமில் கேடரினா குர்தீவா என்ற அமெரிக்க கண் மருத்துவர், வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். ஒரு மாதத்திற்கு முன் போட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அந்த வீடியோவில், தன்னிடம் சிகிச்சை பெற வந்த பெண்ணின் கண்ணில் இருந்து, வரிசையாக 23 காண்டாக்ட் லென்ஸ்களை கேடரீனா வெளியே எடுப்பது பதிவாகியுள்ளது.  மேலும் படிக்க | உல்லாசத்தால் உச்சம் தொட்ட மோசடி ராணி… பொறியில் சிக்கிய அரசியல் எலிகள் – யார் … Read more

நாமக்கல்: ஆய்வு செய்ய வந்த கலெக்டரிடம் குடி மகன் செய்த அலப்பறை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான சின்னப்ப நாயக்கன்பாளையம், குப்பாண்டாபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் குமாரபாளையம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உழவர் சந்தை ஆகிய பகுதிகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் மற்றும் மாணவிகள் அவதியடைந்தனர். இதனால் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி விடுமுறை விடப்பட்டது.  இதையடுத்து பள்ளியின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி … Read more

தன்னுடைய மறு முகத்தை தானே காட்டிய ரௌடி பாபி ஆயிஷா

பிக்பாஸ் தமிழ் 6 சீசன்: பிக்பாஸ் தமிழ் 5 சீசன்களைக் கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. கடந்த சீசன்களைவிட இந்தமுறை அதிக போட்டியாளர்களை களமிறக்கும் பிக்பாஸ், ஒவ்வொரு துறையில் இருந்தும் ஸ்டாராக இருப்பவர்களை அலசி ஆராய்ந்து தூக்கியுள்ளது. குறிப்பாக, சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் களமிறக்கப்பட இருப்பதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. … Read more

தரம் மற்றும் பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி: வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்த KFC

இரு நாட்களாக வேகாத சிக்கன் விவகாரம் புகழ்பெற்ற KFC நிறுவனத்துக்கு சிக்கலை உருவாக்கி வந்தது. சென்னை அம்பத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் ஸ்விக்கி ஆன்லைன் உணவு டெலிவரி தளம் மூலம் KFC-ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வந்தவுடன் அதனை வாங்கி திறந்து பார்த்துள்ளார். அதில், சிக்கன் வேகாமல்  இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆன நிலையில், தற்போது … Read more