டிஜிட்டல் மயமாக்கல் இந்தியாவில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது: IMF

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமைப் பொருளாதார நிபுணர் பியர் ஆலிவர் கோரிஞ்சஸ், டிஜிட்டல் மயமாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார். இந்த நடவடிக்கை நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்றார்.  இதனால், பல திட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள சவால்களை  சமாளிப்பதிலும், எளிதாக திட்டங்களின் பயன்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்கவும், இந்திய அரசாங்கத்திற்கு சாத்தியமாக்கியுள்ளது என்று அவர் கூறினார். இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் பற்றிப் பேசிய கோரிஞ்சஸ், “டிஜிட்டல்மயமாக்கல் பல அம்சங்களில் உதவியாக உள்ளது. … Read more

ராஜராஜ சோழன் இந்துவா இல்லையா?… கவிஞர் சினேகன் சொல்லும் பதில்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பியுமான திருமாவளவனுக்கு எடுக்கப்பட்ட விழா ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், “சினிமா என்னும் கலையை சரியாக நாம் கையாள வேண்டும். அப்படி கையாள தவறும்போதுதான்  நம்முடைய அடையாளம் நம்மிடம் இருந்து பறிக்கப்படுகிறது.  வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது,ராஜராஜ சோழனை இந்து அரசனாக குறிப்பிடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். அவரின் இந்தக் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக பொன்னியின் செல்வன் படம் வெளியான … Read more

டிடிவி தினகரனுடன் கூட்டணியா?… ஜெயக்குமார் விளக்கம்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர் கல்வி மன்றம் வளாகத்தில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 17ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதற்கு அனுமதி கேட்டு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்ம் “ தீய சக்தி என்ற கருணாநிதி குடும்பத்திலிருந்து தமிழகம் விடுபட … Read more

மூட நம்பிக்கைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் : நாடு முழுவதும் வலுக்கும் குரல்கள்

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தின் இலந்தூரைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர், பணக்காரர்கள் ஆக வேண்டும் என்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்களை நரபலி கொடுத்தனர். மந்திரவாதி என அறிமுகமாகிய ரஷீத் என்கிற முகமது ஷபியின் பேச்சை பகவல் சிங்கும், அவரது மனைவியும் முழுமையாக நம்பி இதனை செய்துள்ளனர்.  இந்த நரபலி குறித்து காவல்துறை வெளியிட்ட தகவல்கள், அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளன. பலியான இருவரின் உடல்களும் … Read more

நயன்தாரா குழந்தைகளின் வாடகை தாய் யார் தெரியுமா?… வெளியான தகவல்

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் விக்னேஷ் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ”நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் என அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து இரண்டு  குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டிருந்தார். ஜூன் மாதம்தான் … Read more

திமுக இனிமேல் எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாத ஓர் சூழலுக்கு தள்ளப்படும்: வி.சோமசுந்தரம்

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில்‌ அதிமுகவின் பொன்விழா ஆண்டு மற்றும் 51 ஆம் ஆண்டு துவக்க விழாவை  முன்னிட்டு காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுகும் தொண்டர்களுக்கும் வழங்கினர். இந்நிலையில் தமிழக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் … Read more

கிரிக்கெட் வீரருக்கு தொடரும் நீதிமன்ற விசாரணை! மேலும் 5 நாட்கள் காவல் நீட்டிப்பு

காட்மண்டு: நட்சத்திர கிரிக்கெட் வீரர் லாமிச்சானேவின் காவலை 5 நாட்கள் நீட்டித்து நேபாள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனேவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் அக்டோபர் 13ஆம் தேதி அனுமதி வழங்கியது. லாமிச்சனே குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் கூறி வருகிறார். முன்னதாக அக்டோபர் 6 ஆம் தேதி திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் லாமிச்சேன் கைது செய்யப்பட்டார். அவரை விசாரிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் … Read more

மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு காதலன் கொலை; பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த பயங்கரம்!

சென்னை கிண்டி அடுத்தா ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(23), அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா (20) தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இன்று இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்து உள்ளனர். அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஆகியுள்ளது. அப்போது பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சதீஷ் சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார். இதில் … Read more

இந்தியாவில் நகைக் கடன் வாங்கியவர்கள் சவுதி அரேபியாவில் தவணை செலுத்தலாம்

முத்தூட் ஃபைனான்ஸ், தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. என்ஆர்ஐகள், இந்தியாவில் வாங்கிய நகைக்கடனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தவணையை செலுத்தலாம். இதற்காக, முத்தூட் ஃபைனான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட லுலு இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த கூட்டாண்மை மூலம், முத்தூட் ஃபைனான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 4 லட்சத்திற்கும் அதிகமான NRI களுக்கு வசதி மற்றும் பணப் பரிமாற்றத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் … Read more

KFC அனுப்பிய வேகாத சிக்கன்; ஸ்விகியில் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சென்னை அம்பத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் ஸ்விகி ஆன்லைன் உணவு டெலிவரி மூலம் KFC-ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு  வந்தவுடன் அதனை வாங்கி திறந்து பார்த்துள்ளார். அதில், சிக்கன் வேகாமல்  இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து KFC அம்பத்தூர் கிளையில் புகாரளித்த நிலையில் எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடந்த சம்பவம் பற்றி பதிவிட்டு SWIGGY நிறுவனம்,KFC நிறுவனம் மற்றும் … Read more