நயன்தாரா குழந்தைகளின் வாடகை தாய் யார் தெரியுமா?… வெளியான தகவல்

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் விக்னேஷ் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ”நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் என அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து இரண்டு  குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டிருந்தார். ஜூன் மாதம்தான் … Read more

திமுக இனிமேல் எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாத ஓர் சூழலுக்கு தள்ளப்படும்: வி.சோமசுந்தரம்

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில்‌ அதிமுகவின் பொன்விழா ஆண்டு மற்றும் 51 ஆம் ஆண்டு துவக்க விழாவை  முன்னிட்டு காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுகும் தொண்டர்களுக்கும் வழங்கினர். இந்நிலையில் தமிழக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் … Read more

கிரிக்கெட் வீரருக்கு தொடரும் நீதிமன்ற விசாரணை! மேலும் 5 நாட்கள் காவல் நீட்டிப்பு

காட்மண்டு: நட்சத்திர கிரிக்கெட் வீரர் லாமிச்சானேவின் காவலை 5 நாட்கள் நீட்டித்து நேபாள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனேவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் அக்டோபர் 13ஆம் தேதி அனுமதி வழங்கியது. லாமிச்சனே குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் கூறி வருகிறார். முன்னதாக அக்டோபர் 6 ஆம் தேதி திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் லாமிச்சேன் கைது செய்யப்பட்டார். அவரை விசாரிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் … Read more

மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு காதலன் கொலை; பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த பயங்கரம்!

சென்னை கிண்டி அடுத்தா ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(23), அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா (20) தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இன்று இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்து உள்ளனர். அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஆகியுள்ளது. அப்போது பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சதீஷ் சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார். இதில் … Read more

இந்தியாவில் நகைக் கடன் வாங்கியவர்கள் சவுதி அரேபியாவில் தவணை செலுத்தலாம்

முத்தூட் ஃபைனான்ஸ், தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. என்ஆர்ஐகள், இந்தியாவில் வாங்கிய நகைக்கடனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தவணையை செலுத்தலாம். இதற்காக, முத்தூட் ஃபைனான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட லுலு இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த கூட்டாண்மை மூலம், முத்தூட் ஃபைனான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 4 லட்சத்திற்கும் அதிகமான NRI களுக்கு வசதி மற்றும் பணப் பரிமாற்றத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் … Read more

KFC அனுப்பிய வேகாத சிக்கன்; ஸ்விகியில் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சென்னை அம்பத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் ஸ்விகி ஆன்லைன் உணவு டெலிவரி மூலம் KFC-ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு  வந்தவுடன் அதனை வாங்கி திறந்து பார்த்துள்ளார். அதில், சிக்கன் வேகாமல்  இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து KFC அம்பத்தூர் கிளையில் புகாரளித்த நிலையில் எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடந்த சம்பவம் பற்றி பதிவிட்டு SWIGGY நிறுவனம்,KFC நிறுவனம் மற்றும் … Read more

Hijab Controversy: உலகின் 'இந்த' நாடுகளில் ஹிஜாப் அணிய தடை!

கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு அமலில் இருக்கும் என்றும், ‘தகுந்த வழிகாட்டுதலுக்காக’ தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரைக்கப்படுவதாக தெரிவித்தது. உச்ச நீதிமன்றம்  நீதிபதி ஹேமந்த் குப்தா மற்றும் நீதிபதி சுதன்ஷு துலியா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். நீதிபதி ஹேமந்த் குப்தா, ஹிஜாப் தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, ஹிஜாப் மீதான தடையை உறுதி செய்தார். மறுபுறம், ஜிஜாப் தடை … Read more

இந்தி திணிப்புக்கு எதிரான பேரணி…. விதை நாங்கள் போட்டது – மேற்கு வங்க பதாகைகளில் அண்ணா, கலைஞர்

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியை கட்டாயமாக்க அனைத்து வழிகளிலும் முயல்கிறதென்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. அதற்கேற்றார்போல்தான் ஒன்றிய அமைச்சர்களின் கருத்தும் இருக்கிறது. அதுமட்டுமின்றி மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. கடந்த மாதம், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு இதுகுறித்த அறிக்கையை … Read more

Hijab Ban: ஹிஜாப் தடை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு! கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடரும்

புதுடெல்லி:  கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு அமலில் இருக்கும் என்றும், ‘தகுந்த வழிகாட்டுதலுக்காக’ தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரைக்கப்படுவதாக தெரிவித்தது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடையை உறுதி செய்த பழைய கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று (2022 அக்டோபர் 13 வியாழக்கிழமை) தள்ளுபடி செய்தது. நீதிமன்ற அமர்வில் இடம் பெற்றிருந்த மற்றொரு நீதிபதி சுதன்ஷு துலியா இந்த … Read more

முஸ்லீமா? அப்போனா வீடு கிடையாது! பிரபல யூடியூப் ரிவியூவருக்கு நேர்ந்த கொடுமை!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மதப் பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் மதவெறி தாக்குதல்கள் அதிக அளவில் தினமும் நடைபெறுகிறது. இந்து மதத்தை வைத்து இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களை தாக்கும் சம்பவங்கள் பற்றிய செய்திகளை நாம் தினமும் பார்த்து கடந்திருப்போம்.  எங்கோ வெளி மாநிலங்களில் நடக்கும் விசயம் என நாம் பார்த்த சம்பவங்கள் தற்போது தமிழ்நாட்டில் நடக்க தொடங்கியுள்ளது.  மத அடையாளங்களுக்காக ஒருவரை நேரடியாக தாக்குவது மட்டுமின்றி மறைமுக தாக்குதல்களும் நடைபெறுகிறது.   திண்டுக்கல்லை சேர்ந்த … Read more