மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி!

தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மது, தனது மனைவி கமலாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.  கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்த மது, மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த மனைவி கமலா, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.  உறவினர்கள் சமசரம் செய்து  … Read more

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை மையம் தகவல்

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, … Read more

கமலால் கடனாளி ஆனேனா?… முற்றுப்புள்ளி வைத்த லிங்குசாமி

கமல் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் உத்தம வில்லன். படத்தின் கதை,திரைக்கதையை கமலும் கிரேஸி மோகனும் இணைந்து எழுத ரமேஷ் அரவிந்த் இயக்கினார். பெரும் எதிர்பார்ப்புடன் இந்தப் படம் வெளியானது. படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் கமலுடன் சேர்ந்து பூஜா குமார், ஊர்வசி, கே பாலச்சந்தர், நாசர், ஆண்ட்ரியா, ஜெயராம், பார்வதி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். வழக்கம் போல் கமலின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் வசூல் ரீதியாக படம் படுதோல்வியடைந்தது. … Read more

தோனி தயாரிக்கும் தமிழ் படத்தில் விஜய் ஹீரோ இல்லையாம்; பிக்பாஸ் பிரபலத்துக்கு ஜாக்பாட்

கிரிக்கெட் உலகில் கோலோச்சிய தோனி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பிஸ்னஸில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்த அவர், இப்போது புதிதாக சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். தோனி எண்டர்டெயின்மென்ட் என பெயரிடப்பட்டிருக்கும் அந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் விஜய் அல்லது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நடிக்கக்கூடும் என தகவல் பரவியது. இதற்கு முக்கிய காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு … Read more

ஏரி குளங்களை மீண்டும் தூர்வார வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பிரச்சார நடைப்பயணம்

அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் ஏரிகள் மீட்சி சோழர் கால ஆட்சி என்ற முழக்கத்துடன் சோழர் கால பாசன திட்ட ஏரி குளங்களை மீண்டும் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது பிரச்சார நடைப்பயணத்தை தொடங்கினர். சோழ மாமன்னர் ராஜராஜ சோழன் மற்றும் தெற்காசியாவை தனது கொடையின் கீழ் கொண்டு வந்து கங்கை வரை படையெடுத்து கங்கை நீரை கொண்டு வந்து சோழ கங்கம் என்ற மிகப்பெரிய ஏரியை … Read more

விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் இவ்வளவு பிரமாண்டமா?

இயக்குநர் விஜய் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்து வரக்கூடிய ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், லண்டனில் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி இருக்கிறது. சென்னையின் பின்னி மில்ஸ் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 3.5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக லண்டன் சிறையின் பிரதியை செட் அமைத்துள்ளனர். ராமலிங்க மேஸ்திரி உதவியுடன் கலை இயக்குநர் சரவணன் நூற்றுக்கணக்கான வேலைப்பாடுகள் மற்றும் … Read more

ரஜினியை சந்தித்த லாரன்ஸ்… பிறந்தநாளுக்கு அன்னதானம்

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக பிரபலமானவர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குநர் மட்டுமின்றி நடிகர், இயக்குநர் என பல அவதாரங்களை எடுத்திருப்பவர். இவர் இயக்கிய காஞ்சனா வரிசை படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளன. பாலிவுட்டிலும் அதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். தற்போது அவர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2வில் நடித்துவருகிறார். சினிமாவில் நடிப்பதோடு தன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்காமல் பலருக்கும் பல உதவிகளை செய்துவருகிறார். அவரது செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. அவர் இன்று தனது 46ஆவது … Read more

பிரமாண்டமாக உருவாகும் 'டபுள் எக்ஸ்எல்' : பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் மஹத்

தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் மஹத் ராகவேந்திரா, பாலிவுட்டில் சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி நடிப்பில், இயக்குநர் சத்ரம் ரமணி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் ‘டபுள் எக்ஸ்எல்’ படம் மூலமாக இந்தியில் நாயகனாக அறிமுகமாகிறார்.  அஜித்குமார் நடிப்பில் ‘மங்காத்தா’ படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான மஹத், பின் ‘பிக்பாஸ்’ மூலம் தமிழகமெங்கும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அவரது நடிப்பில் வெளியான ‘ஈமோஜி’ வலைத்தொடர் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை குவித்தது. ஒவ்வொரு படத்திலும் … Read more

குடித்துவிட்டு பேருந்து ஓட்டினால்…. போக்குவரத்து கழகத்தின் எச்சரிக்கை

சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மது குடித்துவிட்டு வந்து பணி செய்வதாக பல இடங்களில் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து இனியும் அவ்வாறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து அனைத்து கிளைகளின் மேலாளர்களுக்கும் மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், “குடித்துவிட்டு பணிக்கு வரும் ஊழியர்களால் பயணிகளிடையே கெட்ட பெயரை ஏற்படுத்துவதுடன், அரசு பேருந்துகளை மக்கள் தவிர்க்கும் வாய்ப்பு உள்ளது. பணியின் போது குடித்திருப்பது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் … Read more

தேவர் குரு பூஜையில் முதலமைச்சர் ஆப்செண்ட்… காரணம் இதுதான்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் ஆண்டுதோறும் ஜெயந்தி விழா, குருபூஜை விழா கொண்டாடப்பட்டுவருகிறது. குருபூஜையின் போது ஆயிரக்கணக்கானோர் பால்குடம், காவடி,  அக்னிசட்டி எடுத்து வருதல், மொட்டையடிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான் ஜெய்ந்தி மற்றும் குருபூஜை நேற்று தொடங்கியது. நேற்று காலை நான்காம் கால வேள்வி பூஜை மற்றும் வேத பாராயணம், தீபாராதனை, யாத்ராதானம் நடத்தப்பட்டு காலை 10 மணிக்கு நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டது. கருடன் … Read more