ரஜினி – நெல்சன் படம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்!

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான நெல்சனிற்கு முதல் படமே மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி, பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. அதன் பிறகு விஜய் வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கினார் நெல்சன். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் படம் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக இவர் அடுத்ததாக ரஜினியை வைத்து … Read more

இது புதுசா இருக்கே..! மருந்து டப்பாவில் திருமண அழைப்பிதழ் அடித்த தம்பதி!

சென்னை அம்பத்தூர் பகுதி சேர்ந்த ஜெயக்குமாரி மகள் காயத்ரி, பார்மசிஸ்ட் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து விட்டு, கன்னிமாரா லைப்ரரியில் பணியாற்றி வருகிறார்.  இவருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பார்மசிஸ்ட் படித்துள்ள விஸ்வநாதனுக்கும் ஆகஸ்ட் 31ஆம் தேதி தர்மபுரியில் திருமணம் நடைபெற உள்ளது.  மேலும் இவர்களது திருமண வரவேற்பு சென்னை வெப்பேரியில் உள்ள ஒய் எம் சி ஏ அரங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில் மணப்பெண் காயத்ரி தனது திருமணத்தின் அழைப்பிதழ் வித்தியாசமாகவும் அனைவராலும் கவரப்பட வேண்டும் என … Read more

முன்விரோதம் காரணமாக எருமை மாடுகள் மீது ஆசிட் வீச்சு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் கால்நடை வளர்ப்போர் அதிக அளவில் எருமை மாடு மற்றும் பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் மேட்டுப்பாளையம் ரயில்வே கேட் பகுதி சேர்ந்தவர்  ராஜ்குமார் இவர் இங்கு  நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.இங்கு 40 எருமை மாடுகளை வளர்த்து, பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் எருமைகள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் போது எருமைகள்  மீது, யாரோ சிலர் ஆசிட் ஊற்றியுள்ளனர். இந்த கொடூரமான … Read more

அதிமுக பொதுக்குழு ரத்து தீர்ப்பை எதிர்த்த வழக்கு: இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு ரத்து தீர்ப்பை எதிர்த்த வழக்கு இன்று விசாரணை: கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க … Read more

பொன்னியின் செல்வன் படத்திற்கும் வாரிசு படத்திற்கும் ஏற்பட்ட திடீர் உறவு!

மணிரத்னம் இயக்கத்தில் சோழர்களின் சிறப்பான வரலாற்றை கூறும் விதமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’.  கல்கி கைவண்ணத்தில் வெளியான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது, இந்த நாவலை படித்து கற்பனையில் காட்சிகளை வடிவமைத்து பார்த்தவர்கள் தற்போது அதை கண்களால் கண்டு ரசிக்கப்போகிறார்கள்.  இந்த கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அனைவரது மனதிலும் நிலைத்து நிற்கக்கூடிய அளவில் இருக்கும்.  இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா … Read more

ATM-ல் 'ஸ்கிம்மர்' வைத்த மருத்துவ மாணவர் – காவல்துறை விசாரணை

சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் பிரபல வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் இயந்திரம் பழுதானதால் அதனை வங்கி ஊழியர்கள் சரிபார்க்க சென்றனர். அப்போது அங்கிருந்த இயந்திரத்தில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளில் உள்ள தகவல்களை திருடுவதற்காக பயன்படுத்தும் ‘ஸ்கிம்மர்’ கருவி பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  விசாரணையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மனோகர்  மற்றும் அவருடைய மகன் ஆனந்த் ஆகிய … Read more

டோல்கேட் பெண் ஊழியரை அடித்த நபர்; செருப்பை கழற்றி திருப்பி கொடுத்த பெண்

நாடு முழுவதும் டோல்கேட்டுக்கு எதிராக மக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியுள்ளனர். தமிழகத்திலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக டோல்கேட்டுகளை அகற்றக்கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மகாராஷ்டிராவில் பலமுறை டோல்கேட் நீக்கக்கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் நெடுஞ்சாலைகளில் இருக்கும் அதிக டோல்கேட் மற்றும் கட்டணங்கள். இவற்றை குறைக்கக்கோரியும், நீக்கக்கோரியும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் மத்திய அரசு டோல்கேட் கட்டணங்களை வசூலிப்பதில் மட்டுமே புதிய புதிய யுக்திகளை புகுத்தி வருகிறது. இதனால் … Read more

ஜடேஜா அடுத்ததாக எந்த டீமுக்குப் போறார்னு தெரியுமா?

ஐபிஎல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிட்டு வர்ற ரவீந்திர ஜடேஜா, அந்த டீமோட அதிருப்தியில இருக்குறதாச் சொல்லப்படுது. சென்னை டீமோட ஜடேஜாவுக்கு எந்தவிதப் பேச்சுவார்த்தையும் இப்போ இல்லைனும் அதனால அடுத்த சீசன்ல அவர் சென்னை டீமை விட்டு வெளியே போகப் போறதாகவும் சொல்றாங்க. ஒருவேளை அவர் சென்னை டீம்ல இருந்து வெளியேறுனா வேற எந்தெந்த டீமுக்கெல்லாம் அவர் போக அதிக வாய்ப்பு இருக்குனு இப்போ பாக்கலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் ஜடேஜாவைப் பொறுத்தவரை ஐபிஎல் முதல் சீசன்ல … Read more

விபத்தில் உயிரிழந்த நாய் – ஊர்முழுக்க இரங்கல் பேனர் அடித்து கண்ணீர் அஞ்சலி

மயிலாடுதுறை மகாதானபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஹரிபாஸ்கர்-கார்குழலி தம்பதியினர். இவர்கள் இருவருமே காவல் துறையில் வேலை பார்க்கின்றனர். ஊருக்கே காவல் பணியாற்றும் இவர்களின் வீட்டையும், இவர்களது இரண்டு குழந்தைகளையும் காப்பது என்னவோ இவர்கள் செல்லமாக வளர்க்கும் நாய்கள்தான். இவர்கள் தங்கள் வீட்டில் 4 நாய்களை அவற்றுக்கு செல்லப்பெயரிட்டு வளர்த்து வந்தனர். அதிலும் குறிப்பாக ‘சச்சின்” என்றழைக்கப்பட்ட நாய் இவர்களின் செல்லப்பிள்ளையாகவே மாறியிருந்தது. தினசரி காலை 5.30 மணிக்கே கதவைத் தட்டி, உரிமையாளர்களை எழுப்பிவிடும் சச்சின், வெளிக்கதவைத் திறந்து விட்டதுமே நேராக … Read more

Farmers Protest PART 2: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கும் விவசாயிகள்

புதுடெல்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்திய வேளாண் சட்டங்கள் தொடர்பாக தலைநகர்டெல்லியின் எல்லையில் ஓராண்டாக மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மேற்கொண்ட நீண்ட போராட்டம், அவர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்ட பிறகு முடிவுக்கு வந்தது. ஆனால், தற்போது, விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) மற்றும் பல பிரச்சனைகளுக்காக புதிய போராட்டத்திற்கு தயாராகிவிட்டதாக தெரிகிறது. விவசாயிகளின் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு தலைநகர் டெல்லியின் திக்ரி எல்லையில் சிமென்ட் தடுப்புகளை அமைக்கும் பணியை டெல்லி காவல்துறை மீண்டும் தொடங்கியுள்ளது. மறுபுறம், விவசாயிகள் … Read more