குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை! வீடியோ வைரல்!

கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டர பகுதியான அட்டுக்கல், குப்பேபாளையம், தேவராயபுரம், சிலம்பனூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்கள் ஆகும். இந்த பகுதி மக்கள் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக யானைகள் கூட்டமாகவும், ஒற்றை யானை என இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதில் சுமார்‌ 20 வயது மதிக்கத்தக்க ஒற்றை டஸ்கர் இன யானை குப்போபாளையம், அட்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் … Read more

உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை – சென்னையில் சோகம்

சென்னை அயனாவரம் நாட்டு முத்தையால் கன் தெருவை சேர்ந்தவர் கலா. இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக  தூய்மை பணியாளராக வேலை செய்கிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகனும், விஜய் என்ற மகனும் உள்ளனர். விஜய் பத்தாம் வகுப்புவரை படித்துவிட்டு தனது வீட்டின் அருகே உள்ள தனியார் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் வாட்டர் வாஷ் செய்யும் வேலை செய்துவந்தார். இந்தச் சூழலில் நேற்று காலை 9 மணிக்கு கலா வியாசர்பாடியில் உள்ள சர்ச்சுக்கு சென்றுவிட்டு மதியம் … Read more

பம்புக்கு மேல் ரோடு: அலப்பறை செய்த அதிமுக ஒப்பந்ததாரர்!

சாலைகள், மேம்பாலங்கள் என அரசின் திட்டங்கள் ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் தலைமையில் மக்களுக்கான சாலைகள் போடப்படுகிறது. அது தரமாக இருக்க வேண்டும் இல்லையா ?. ஆனால், கட்சிகளை கைக்குள் போட்டுக்கொண்டு சாலை போடுகிறோம் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே இல்லாமல் போகும் சூழல் நிலவி வருகிறது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட ராசிபுரம் அருகே உள்ள சாலையில் லட்சணத்தை பொதுமக்களே கேள்வி கேட்டுள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பன் பாளையம் … Read more

அரசு பள்ளி மாணவர்கள் விமானத்தில் பயணம் – நெகிழ வைக்கும் ஊராட்சி தலைவர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சி உள்ளது. ஊராட்சி தலைவராக ஞானசேகரன் செயல்பட்டு வருகிறார். இவர் ஊராட்சியிலுள்ள இளைஞர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கவும், விளையாட்டு திறனை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவருகிறார். இதன் ஒருகட்டமாக அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்வது என்பது கனவாக மட்டுமே இருந்துள்ளது. இதனை நிறைவேற்றும் விதமாக சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணார்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ,மாணவிகள்,ஆசிரியைகள் உள்பட மொத்தம் 110 பேரை கொரோனா பேரிடர் காலத்திற்கு … Read more

வசூல் வேட்டைக்காக செந்தில் பாலாஜி இதை செய்கிறார் – அண்ணாமலை

இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், அதன் தலைவருமான அர்ஜுன மூர்த்தி, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இன்று இணைத்துக்கொண்டார். அதன்பின்னர் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “பாஜகவின் சித்தாந்தம், கொள்கைகளை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும், இக்கட்சியில் இணைவதற்கு அனுமதி இருக்கிறது” என்று பேசினார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “ தமிழ்நாடு மின்துறை அமைச்சர் மற்றும் அவரது சகாக்கள், பெரிய … Read more

வரலாறு காணாத வறட்சியைச் சந்திக்கும் சீனா

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் செப்டம்பர் மாதம் வரை அதிக வெப்பம் நிலவும் என கணிக்கப்பட்டுள்ளதால், சீனாவில் நாடு தழுவிய வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக, தொடர்ந்து 10-வது நாளாக  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு எச்சரிக்கை என்பது அந்நாட்டில் பயன்படுத்தப்படும் 4 அடுக்கு வானிலை எச்சரிக்கை முறையில், அதிகபட்ச எச்சரிக்கை ஆகும். இந்த வரலாறு காணாத வெப்பம் காரணமாக, சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் உள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய நதியான யாங்சே நதி … Read more

பிரியாணி விருந்துடன் களைகட்டிய விஜய் மக்கள் இயக்க கூட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். அவரின் 66-வது படமான ’வாரிசு’ திரைப்படத்தை வம்ஷி பைடிப்பள்ளி இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் சரத்குமார், ஷாம், பிரபு, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சங்கீதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.   தளபதி அவர்களின் நல்லாசியுடன் இன்று அகில … Read more

அண்ணாமலைக்கு சொல்வதை புரிந்துகொள்ளும் பக்குவம் வேண்டும்: செந்தில்பாலாஜி காட்டம்!

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காட்டமாக பல விஷயங்களை எடுத்துரைத்துள்ளார். ‘பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்கிற பக்குவம் இருக்க வேண்டும். இல்லையென்றால் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் இல்லையென்றால் அவர் பல விஷயங்கள் பற்றி பேசி நேரத்தைக் வீணடிக்க வேண்டாம். நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை அவர் பதலளிக்கவில்லை. எனவே அவர் பற்றிய கேள்விகளை செய்தியாளர்கள் தவிர்த்துவிடலாம்’ என … Read more

'பாரத ரத்னா' கொடுக்கப்பட வேண்டிய மணீஷ் சிசோடியாவை கைது செய்ய துடிக்கிறது மத்திய அரசு -கேஜ்ரிவால்

அகமதாபாத்: மத்திய அரசின் மீது கடும் கோபத்தில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்திய துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் ஆனால் அரசியல் உள்நோக்கம் காரணமாக மத்திய அரசு அவரைத் துன்புறுத்துகிறது என்றும் கடுமையாக சாடியுள்ளார். டெல்லி அரசின் கல்வி மாதிரியை ‘நியூயார்க் டைம்ஸ்’ (New York Times) பாராட்டியுள்ளது. சிசோடியாவை புகழ்வதற்கு பதிலாக, அவர் குறிவைக்கப்படுகிறார். சிசோடியா விரைவில் கைது … Read more

மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் எளிமையான தோற்றத்தில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் தனுஷ். தற்போது ஹாலிவுட் வரை இவரது புகழ் பரவிவிட்டது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, நடிகர் தனுஷ் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் செய்துகொண்டார்.  இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்கிற இரு மகன்கள் உள்ளனர், சமீபத்தில் இந்த ஜோடி தாங்கள் இருவரும் பிரியப்போவதாக அறிவித்திருந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.   அவர்கள் பிரியப்போவதாக அறிவித்த பிறகு … Read more