Happy Independence Day 2022: சுதந்திர தினத்தில் வாழ்த்து சொல்ல சிறந்த கவிதைகள்!

Happy Independence Day 2022 Wishes: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று கொண்டாடுகிறது. இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இந்திய அரசாங்கம் ‘Azadi ka Amrit Mohatsav’ கீழ், ‘Nation First, Always First’ என்ற கருப்பொருளில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நாளைக் … Read more

அதிமுக பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்க ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து போஸ்டர்கள்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் தனித்தனியே பிரிந்துள்ளனர். இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்நிலையில் சேலம் மாநகர் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்க ஆலோசனை கூட்டத்திற்கு கலந்து கொள்ளும்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் எம்ஜிஆர் அவர்கள் அதிமுக கட்சி தொடங்கிய 1972 ஆம் ஆண்டு கட்சியின் சட்ட விதிகளை உருவாக்கி அதில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கி … Read more

நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; போலீசார் விசாரணை

தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. வேலூர் மாவட்டம் குடியாத்தம், காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரது மகள் கார்த்திகாதேவி (22) இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் (அப்பல்லோ நர்சிங் இன்ஸ்டியூட்) பிஎஸ்சி நர்சிங் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரியில் இருந்து இரவு தனது சொந்த ஊரான குடியாத்தம் வந்துள்ளார். இதனிடையே இன்று அதிகாலை கார்த்திகாதேவி வீட்டில் … Read more

இந்தியா வல்லரசாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் சொல்லும் யோசனை

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற பாரதம் 2047 எனது பார்வை, எனது செயல் என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், “பன்முகத்தன்மை நிர்வகிக்கும் திறமைக்காக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று பார்க்கிறது.பல வரலாற்று நிகழ்வுகள் நமக்குச் சொல்லப்படாமலும் சரியான முறையில் கற்பிக்கப்படாமலும் உள்ளன. முக்கியமாக நாம் முதலில் நமது சொந்த ஞானத்தையும் அறிவையும் மறந்து விட்டோம். வடமேற்கு பகுதியில் இருந்து வந்த வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் … Read more

இது தமிழ்நாடு! உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது – பாஜகவுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது நேற்று பாஜகவினர் காலணிகளை வீசினர். இதுதொடர்பாக ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பிடிஆரிடம் மன்னிப்பு கேட்ட டாக்டர் சரவணன் பாஜகவிலிருந்து விலகுவதாகவும் நேற்று இரவு அறிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் … Read more

DART Mission: பூமியை அழிவில் இருந்து காக்க நாசா மேற்கொள்ளும் DART மிஷன்!

பூமியை நோக்கி சிறுகோள் வருவதாக அவ்வப்போது செய்திகள் வருகின்றன. சிறுகோள் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது அதன் திசையில் எந்த மாற்றமும் இல்லை என்றால் பூமிக்கு பேரழிவு நிச்சயம். எனவே சிறுகோள் பூமியை தாக்காமல் விலகி செல்லும் வகையில், அதன் திசையை மாற்ற, நாசா கடந்த ஆண்டு DART மிஷனை அறிமுகப்படுத்தியது. அடுத்த மாதம் 26ம் தேதி இந்த விண்கலம் சிறுகோளை தாக்கி அதன் திசையை மாற்ற உள்ளது. சிறுகோள் தாக்குதலில் இருந்து பூமியைப் பாதுகாக்க, … Read more

Amrit Mahotsav: இந்திய விடுதலையில் முக்கிய பங்காற்றிய 5 இடங்கள்

75th anniversary of Independence: இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியுடன் இந்தியா சுதந்திரம் பெற்று  75 வருடங்கள் முடிவடைந்துவிட்டன. சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவை கொண்டாடுகிறோம். சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, நாட்டின் அனைத்து புராதன இடங்களுக்கும் செல்ல கட்டணம் செலுத்தத் தேவையில்லை என தொல்பொருள் ஆய்வுத் துறை,அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 15 வரை, எந்த தொல்லியல் தளங்களிலும் கட்டணம் செலுத்த வேண்டாம்.நாட்டு சுதந்திரத்துடன் தொடர்புடைய 5 முக்கியமான வரலாற்று இடங்கள் இவை… … Read more

கட்சியில் இணைவதும் வேறு கட்சிக்கு செல்வதும் அவரவர் உரிமை! – அண்ணாமலை பேட்டி

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவே ராமேஸ்வரம் வந்தடைந்தார். இதனை அடுத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் பெற்ற பின்னர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் வீட்டிற்கு சென்று உறவினர்களை சந்தித்தார். அதனை அடுத்து பாம்பன் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று அங்கு நாட்டுப் படகு மீனவர்களை சந்தித்து அங்கிருந்து நாட்டுப் படகு மூலம் கடல் மார்க்கமாக குந்துகாலில் அமைந்துள்ள விவேகானந்தா … Read more

திசையெல்லாம் கஞ்சா இதுல கஞ்சா பூ கண்ணு பாட்டு வேற – வேதனைப்படும் ஜெயக்குமார்

கொம்பன் படத்துக்கு பிறகு முத்தையாவும், கார்த்தியும் இணைந்திருக்கும் படம் விருமன். இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, சரண்யா, வடிவுக்கரசி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சூர்யாவும், ஜோதிகாவும் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படம் நேற்று முன் தினம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. படத்துக்கு பலரும் கலவையான விமர்சனங்களை கொடுத்தாலும் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களுக்கு பலத்த வரவேற்பை கொடுத்துள்ளனர். மதுர … Read more

வானிலை தகவல்: எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாடு வானிலை தகவல்: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 14 ஆம் தேதி 2022 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். … Read more