13 இலட்சம் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தயார்! சாணக்கியனின் அறிவிப்பு (Video)

ஜனாதிபதி உட்பட பிரதமர் பதவி விலக வேண்டும், இல்லாவிடின் தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அத்துடன் பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வையே கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கையர்களை சந்தித்து பேசிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கூறுகையில், பல்வேறு காலக்கட்டங்களில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த அல்லது வெளியேற்றப்பட்ட புலம்பெயர் இலங்கையர்களை நோர்வேயில் சந்திக்கிறேன். கடந்த இருவாரங்களில் சுவிட்சர்லாந்தில் … Read more

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இம்முறை வழமைபோன்று மிகச் சிறப்பாக  நடைபெறும்

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இம்முறை மிகச் சிறப்பாக  இடம்பெறுமென யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன்  தெரிவித்துள்ளார்.. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (29) யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு … Read more

நாட்டில் விபத்துகளால் வருடாந்தம் 12,000 பேர் உயிரிழக்கின்றனர்

நாட்டில் இடம்பெறுகின்ற  விபத்துக்களால் வருடாந்தம் 12,000 பேர் உயிரிழப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் சுமார் ,3இ000 பேர் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பதாக போக்குவரத்து, கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார். மேலும், பெரும்பாலான வயோதிபர்கள் கீழே விழுவதனூடாக விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர் என்று சுகாதார அமைச்சின் இளைஞர், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் பிரிவின் பிரதான விசேட வைத்திய நிபுணர் ஷிரோமி மதுவகே கூறியுள்ளார்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 656,936 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 185,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,000  ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் 162,300 … Read more

வெளிநாடுகளில் தொழில்புரிவோரின் வருமானம் குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டுக்காக பணம் அனுப்பி நாட்டை மீட்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வைத்து நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். பிரபலமாகியுள்ள இலங்கை மேலும் தெரிவிக்கையில், எமது நாடு கடன் செலுத்த முடியாத நாடு என முழு உலகுக்கும் பிரபலமாகி இருக்கின்றது. அப்படியானால் எமக்கு யாரும் கடன் வழங்குவதில்லை. நாட்டில் … Read more

இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி – சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்படும் அபாயம்

இலங்கைக்கு வரும் விமானங்களை அடுத்த பயணங்களுக்கு எரிபொருள் நிரப்பி வருமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையின் எரிபொருள் இருப்பு குறைந்துள்ளதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமைது. இதனால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு விமான பயணங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விமான சேவை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச விமானங்கள் தடைப்படும் அபாயம் விமானங்கள் திரும்பி செல்வதற்காக எரிபொருள் நிரம்பி வருவதனால் விமானங்களில் ஏற்றப்படும் சரக்குகளின் அளவு குறைவடைகின்றன. … Read more

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் பேருந்து கட்டணம்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.  அதன்படி ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 32 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய கட்டணங்கள் 22 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  பேருந்து கட்டண அதிகரிப்பு எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை முழுவதும் தனியார் பேருந்து பயணங்கள் நேற்று முன் தினம் முதல் முழுமையாக முடக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்திருந்தது. இதனையடுத்து … Read more

கடற்றொழில் அமைச்சர் – ஜப்பான் தூதுவருக்கிடையில் சந்திப்பு

வடக்கு மாகாணத்திற்கு 3 நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (29) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. கடலட்டை உற்பத்தி உட்பட நீர்வேளாண்மை  பண்ணை முறையில் ஏற்றுமதித் தரத்திலான கடலுணவுகளை உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஜப்பானிய துாதுவருக்கு கடற்றொழில் அமைச்சர் தெளிவுபடுத்தினார். ஜப்பானின் உயரிய தொழில்நுட்ப அனுபவங்களும் … Read more

இலங்கைக்கு அவசர நிதியாக IMF வழங்கும் ஒரு பில்லியன் டொலர்

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.  சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கேற்ப இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர் 01 பில்லியன் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன. கடனாக அன்றி கையிருப்பாக அந்த … Read more