பணம் அச்சிடுவது தொடர்பில் பிரதமர் ரணிலின் புதிய அறிவிப்பு

பணம் அச்சிடும் நடைமுறை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.   பணம் அச்சிடும் நடைமுறை நிறுத்தப்படும என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். பணம் அச்சிடுவது நிறுத்தப்படும் அடுத்த வருடத்தின் முற்பகுதி முதல் இவ்வாறு பணம் அச்சிடும் நடவடிக்கைகளை நிறுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதிகரித்துவரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   நாட்டுக்கு வரவுள்ள எரிபொருள் தாங்கிய கப்பல்  எதிர்வரும் 24 நாட்களின் பின்னரே பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று … Read more

அமைச்சர் பீரிஸ் ருவாண்டாவின் கிகாலியில், நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பு

2022 ஜூன் 24 முதல் 25 வரை ருவாண்டாவின் கிகாலியில் நடைபெற்ற 2022 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கலந்து கொண்டார். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னதாக ஜூன் 23ஆந் திகதி பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. ருவாண்டாவின் ஜனாதிபதி பால் ககாமே தலைமையில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில், அரச தலைவர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் … Read more

முன்னாள் பெண் போராளியின் துயர நிலை (VIDEO)

வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும். அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் உண்டு. இப்படி வறுமையில் வாழும் இவரின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில், முத்தையன்கட்டு,ஐந்து வீட்டுத்திட்டம் எனும் கிராம பகுதியில் கணவனை … Read more

தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக அதிகரித்ததுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து உள்ளது. கடந்த 21 ஆம் திகதி தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 366 ஆக இருந்தது. நேற்று கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்து 970 ஆக இருந்தது. இதன் மூலம் ஒரே வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை … Read more

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோட்டாபய அனுப்பிய செய்தி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்தார். நேற்று இடம்பெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமெரிக்கா ஜனாதிபதி இந்த அறிவித்தலை வெளியிட்டிருந்தார். 800,000 இற்கு மேற்பட்ட இலங்கை சிறார்களுக்கும், 27,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவளிப்பதறம்காக இலங்கைக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அறிவித்திருந்தார். … Read more

திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கான கொன்சியூலர் சேவைகள்

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு, 2022 ஜூன் 30 முதல் 2022 ஜூலை 10 வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும். இதே வேலை ஏற்பாடுகள் யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்பதுடன், அந்த அலுவலகங்களும் இந்த நாட்களிலேயே சேவைகளை வழங்கும். அவசர விசாரணைகளுக்காக பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளினூடாக தொடர்பு … Read more

புதிய அதிபர் என்.சஹாப்தீனுக்கு மகத்தான வரவேற்பு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக என். சஹாப்தீன் நியமிக்கப்பட்டுள்ளார். பாடசாலையில் நிலவிய அதிபர் வெற்றிடத்திற்கே இவர் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் அதிபராக சேவையாற்றி வந்த என்.சஹாப்தீனுக்கு வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன், இந்நிகழ்வின்போது பாடசாலை வளாகத்தில் நிழல் தரும் மரக்கன்றும் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில், அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி … Read more

தென்னிலங்கையில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றம் – திரைமறைவில் பசிலின் சூழ்ச்சி அம்பலம்

தென்னிலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பான பல விடயங்கள் அரங்கேறவுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மக்களின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில், ராஜபக்ஷகள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட போதும், திரைமறைவில் அவர்கள் அரசாங்கத்தை முன்னெடுத்து வருகின்றனர். அரசியல்சார்ந்த பல்வேறு நடவடிக்கையை முன்னெடுப்பதில் இன்னும் பசில் ராஜபக்ஷவின் தலையீடு அதிகரித்து காணப்படுகிறது. ஏற்படவுள்ள அரசியல் மாற்றம் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை கொண்டு, தமக்கு எதிரான எதிர்ப்பின் வீரியத்தை குறைத்துக் கொண்ட ராஜபக்ஷர்கள், தற்போது ரணிலை அப்புறப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான … Read more

அமெரிக்க திறைசேரி , இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிநிதிகளுடன் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன சந்திப்பு

ஆசியாவிற்கான திறைசேரி துணைச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை இராஜாங்கச் செயலாளர் கெல்லி கெய்டர்லிங் தலைமையிலான அமெரிக்காவின் திறைசேரித் திணைக்களம் மற்றும் இராஜாங்கத் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பிரதிநிதிகளை, வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன 2022 ஜூன் 28 செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். பரஸ்பரம் நன்மை பயக்கும் மற்றும் இலங்கை மக்களின் நல்வாழ்வை நோக்கி பங்களிக்கின்ற இரு நாடுகளுக்குமிடையிலான வலுவான மற்றும் பன்முகத்தன்மை … Read more