குழந்தை துஷ்பிரயோகம்: ஊடகங்களில் வெளியிட வேண்டாம்

70 வயதான முதியவர் ஒருவர் 6 வயதுடைய ஒரு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் அதனை ஊடகங்களில் செய்தியாக வெளியிட வேண்டாம் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (28) தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலூம், பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் கருத்தாக இருக்கின்றது. பாரளுமன்ற உறுப்பினர்களை இல்லாதொழிப்பதன் மூலம் நெருக்கடியை தீர்க்க முடியாது என்றும் அவர் … Read more

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவரின் பரிதாப நிலை

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் பல மணித்தியாலங்கள் வரிசையில் நின்று எரிபொருள் பெற வேண்டிய பரிதாப நிலைக்குள்ளாகியுள்ளார். இலங்கையில் பல மாதங்களாக பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பொது மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வரிசையில் காத்திருக்கும் வெளிநாட்டவர்கள் இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளும் எரிபொருள் பற்றாக்குறை மின்சார தடை போன்ற பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அண்மையில் பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற சுற்றுலா பயணி … Read more

முறிவடைந்த உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கு புத்துயிரளிப்பதற்காக ஆலோசனைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது (நாணயச் சபை) ஐந்து (5) முறிவடைந்த நிதிக் கம்பனிகளுக்காக அதாவது இக்கம்பனிகளின் உரிமங்கள் ஒன்றில் இரத்துச்செய்யப்பட்டுள்ள அன்றில் இடைநிறுத்தப்படடுள்ள சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் லிமிடெட், ஈரிஐ பினான்ஸ் லிமிடெட், ரிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட், த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மற்றும் த ஸ்ராண்டட் கிறடிற் பினான்ஸ் லிமிடெட் என்பவற்றுக்கான சாத்தியமான புத்துயிரளித்தல் தெரிவுகளைப் பரீட்சிப்பதற்கு 2021 ஒத்தோபரில் முறிவடைந்த நிதிக் கம்பனிகளை புத்துயிரளிப்பதற்கான ஆலோசனைக் குழு (குழு) ஒன்றினைத் … Read more

மேலும் மோசமடையும் நிலை! இரத்துச் செய்யப்படும் தொடருந்து சேவைகள்

இனி வரும் நாட்களில் பல தொடருந்துகள் இரத்துச் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    தொடருந்து ஊழியர்கள் தமது பணியிடங்களுக்குச் செல்வதற்கு எரிபொருள் இல்லாமல் திண்டாடி வருவதாக கூறப்படுகின்றது.  இதன்காரணமாக பாரிய ஊழியர் பற்றாக்குறை நிலவுகின்றது. இரத்துச் செய்யப்படும் தொடருந்து சேவைகள்  இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் மேலும் பல தொடருந்து சேவைகள்  இரத்துச் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடு எதிர்நோக்கும் பிரச்சினையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (29) மற்றும் நேற்று (28) பல தொடருந்து  சேவைகளை … Read more

மண்பிட்டி பாரம்பரிய மீன்பிடி இறங்கு துறைக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்

பள்ளிக்குடா, மண்பிட்டி பாரம்பரிய மீன்பிடி இறங்கு துறைக்கு இன்று (29) விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ பிரதேச கடற்றொழிலாளர்களினால் உருவாக்கப்பட்ட ‘தேவா கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். இதன்போது பிரதேச கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்து கலந்துரையாடலிலும் அமைச்சர் ஈடுபட்டார். தற்போது நாடு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில்இ கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தினையும் கடற்றொழில் அமைச்சர் இதன் போது அவர்களுக்கு … Read more

ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை! எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 3 மாவட்டங்களில் ஆரம்பமாவதாக அறிவிப்பு

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்பில் அமைச்சர் தம்மிக்க பெரேரா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை முதல் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த மாவட்டங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கல் சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகங்களிலும் … Read more

இயன் மோர்கன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானம்

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் ஒருநாள் மற்றும் ரி-20 கிரிக்கட் அணிகளின் தலைவர் இயன் மோர்கன், சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கட் அணியை சம்பியனாக வரலாற்றில் இடம்பிடிக்கச் செய்த பெருமை இவரை சாரும், இங்கிலாந்து கிரிக்கட் வரலாற்றில் வரையறுக்கப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் அணியை சிறந்த முறையில் வழிநடத்திய பெருமை இவரை சாரும். இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அலெஸ்ட்ரியா குக் 2015ஆம் ஆண்டில் … Read more

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பிரதான வீதியொன்றை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்! வீதித் தடை மீது ஏறி நின்றவர்கள் கைது

கொழும்பு – செத்தம் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் குறித்த பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  இந்த நிலையில், செத்தம் வீதியை மறித்து, வீதித் தடையின் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  நால்வர் கைது  இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  தற்போது குறித்த பகுதியில் சிறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  Source … Read more

மொடர்னா தடுப்பூசியை பெற்றவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி

கொவிட் வைரஸைக் கட்டுப்படுத்த மொடர்னா தடுப்பூசி பெற்றவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வெற்றிகரமாக அமைந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமைஇ நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சிகளின் அதிகரிப்பை தீர்மானிக்க வெவ்வேறு தடுப்பூசிகளைப் பெற்ற நபர்களிடமிருந்து தடுப்பூசி ஏற்றப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளைச் பரிசோதனை செய்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மொடர்னா தடுப்பூசியைப் பெற்றவர்களின் … Read more