கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடும் மோதல்! ஒருவர் பலி : 600இற்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம்

பொலன்னறுவை –  கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.  இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  பலர் தப்பியோட்டம்   அத்துடன், அங்கிருந்து 600க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  மர்மமான முறையில் ஒருவர் மரணம்  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றிரவு தடுப்பு முகாமில் இருந்த கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அதன் பின்னர் முகாமுக்குள் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் … Read more

புகையிரத என்ஜினில் இருந்து டீசல் திருடிய நபர்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தில் இருந்து நபரொருவர் டீசலை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.   சிலாபம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத  இன்ஜினில் இருந்து அந்த நபர்  டீசலை திருடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தள்ளனர். புகையிரத நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் கைது  குறித்த நபர் சிலாபம் புகையிரத நிலையத்தில் கடமையாற்றும் உதவி புகையிரத தொழில்நுட்ப உத்தியோகத்தர் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  சந்தேகநபரிடம் இருந்து 15 லீட்டர் டீசலையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இன்று காலை கொழும்பு … Read more

சில வாரங்களுக்கு நாடு முடங்கும் நிலை

இலங்கையில் எரிபொருள் கையிருப்பு தீர்ந்து வருவதால் ஏற்படக்கூடிய நெருக்கடி காரணமாக நாடு சில வாரங்களுக்கு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தால் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகின்றது. இதன்படி பயணக்கட்டுப்பாட்டை விதித்து நாட்டை முடக்க தீர்மானம் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன் எரிபொருள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மேலும் மோசமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல இடமளிக்கும் வகையில் சில வாரங்களுக்கு நாட்டை முடக்க அரசாங்கம் தீர்மானம் … Read more

2022 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் பக்க அம்சமாக, பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்களுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் இருதரப்பு கலந்துரையாடல்

2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை ஒட்டி ருவாண்டாவின் கிகாலியில் 2022 ஜூன் 24 – 25 வரை நடைபெற்ற இருதரப்பு கூட்டத் தொடரில், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பொதுநலவாய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் குழுத் தலைவர்களைச் சந்தித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளித்தல், அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சினைகள் மற்றும் பொதுநலவாயம் உட்பட பலதரப்பு மன்றங்கள் மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் … Read more

இலங்கையில் 15 மணிநேர மின்வெட்டு..! வரப்போகும் நடைமுறை தொடர்பில் எச்சரிக்கை

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த நேரிடலாம் என மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.  எரிபொருள் தட்டுப்பாடு இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நீர் மின் உற்பத்தி நிலையங்களில் உரிய முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படாவிட்டால் இந்த நிலை உருவாகும். நுரைச்சோலை அனல் … Read more

வாரத்தில் தபால் சேவை 3 நாட்கள்

நாட்டில் அனைத்து தபால் அலுவலகங்களும் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் மாத்திரம் திறந்திருக்கும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிக்கல்களை கருத்திற் கொண்டு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக மாத்திரம் அரச அலுவலகங்களை திறப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. தற்போது நிலவும் காகித தட்டுப்பாடு காரணமாக தபால் சேவைக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கிடைக்கும் கடிதங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. தபால் சேவைக்கான முத்திரைகள் மற்றும் கடித உறைகளுக்கும் தட்டுப்பாடு … Read more

இலங்கை – அவுஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கட் தொடர்! – இந்திய பிரஜை ஒருவரின் சர்ச்சைக்குரிய செயற்பாடு

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சுற்றுலா வழிகாட்டி ஒருவரின் செயற்பாடு சற்று நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலா வழிகாட்டி ஒருவர் காலி மைதானத்தின் முகாமையாளரிடம் ஆடுகளம் குறித்த தகவல்களை கோரியதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலா வழிகாட்டி காலி மைதான முகாமையாளரிடம் பிட்ச் அறிக்கையை கோரியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலா வழிகாட்டியைப் பயன்படுத்தி அறிக்கைகளை பெற முயற்சி எவ்வாறாயினும், விளையாட்டில் இடம்பெறும் குற்றங்களைத் தடுப்பதற்கான … Read more