பிறப்பு, இறப்பு சான்றிதழ் பிரதி வழங்கும் சேவை 2 நாட்கள் மாத்திரம்

பதிவாளர் நாயக திணைக்களம் எதிர்வரும் 10 தினங்களில் பிறப்புஇ இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை திங்கள் மற்றும் புதன்கிழமை ஆகிய இருதினங்கள் மாத்திரம் விநியோகிக்கும். இதுதொடர்பாக பதிவாளர் நாயக திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,எதிர்வரும் 10 தினங்களில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை திங்கள் மற்றும் புதன்கிழமை ஆகிய இருதினங்கள் மாத்திரம் விநியோகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த இரண்டு தினங்களில் மாத்திரம் காலை 8.30லிருந்து மாலை 4.00மணி வரை இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். … Read more

ரயில் சேவை கட்டணங்களில் திருத்தம்: அமைச்சரவை அனுமதி

    ரயில் சேவை கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.   ரயில் பயணிகள் போக்குவரத்துக் கட்டணம், சரக்குகள் போக்குவரத்து மற்றும் தபால் போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சரக்குகள் போக்குவரத்துக்காக அறவிடப்படும் ரயில் கட்டணங்களில் திருத்தம் செய்வதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இது தொடர்பாக 27.06.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 03. புகையிரதப் போக்குவரத்துக் கட்டணங்களைத் திருத்தம் செய்தல் அரச கொள்கைகளுக்கு அமைய … Read more

இலங்கையில் தொடரும் நெருக்கடி – ஐநா சபை கடும் எச்சரிக்கை

இலங்கையைப் பொறுத்தமட்டில் பொதுமக்கள் ஏன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள் என்ற காரணத்தை அறிந்துகொள்வதற்கும் தீர்வை வழங்குவதற்குமான கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், அதனை அரசாங்கத்தின் நிறைவேற்றுத்தீர்மானங்கள் மூலம் அடக்கப்படுவதாக அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நியாலெற்சொஸி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது சட்டரீதியான உரிமையைப் பயன்படுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்புச்சட்டங்களைப் பயன்படுத்துவதை அரசாங்கம் தவிர்க்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கிளெமென்ட் நியாலெற்சொஸி … Read more

போராளிகளை விசாரிக்காமல் மாபியாக்களை கண்டுபிடியுங்கள்! புலனாய்வு பிரிவினருக்கு செல்வம் எம்.பி அறிவுரை (VIDEO)

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தொந்தரவு செய்யாமல் எரிபொருளை பதுக்கும் மாபியாக்களை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவினர் முன்வர வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (28) ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிப்பது என்ற அரசின் அறிவிப்பானது குழந்தை பிள்ளைத்தனமானது. இதனால் கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட பல தரப்பினர் மிகவும் கடுமையாக … Read more

புடினை தொடர்புகொண்ட கோட்டாபய ராஜபக்ச – எரிபொருள் இறக்குமதி தொடர்பில் பேச்சு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதன்போது ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கத்தாரில் எரிபொருளைப் பெறுவதற்கு எரிசக்தி அமைச்சர் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறிய அவர், இந்தியாவும் மிகவும் நம்பிக்கையான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். இதன்படி, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் எனவும் … Read more

எரிபொருள் நெருக்கடியை தீர்க்க நிதி

எரிபொருள் விநியோகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சம்மதம் தெரிவித்துள்ளார். கையிருப்பில் உள்ள நிதியில் எரிபொருளை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகத்தை மீள ஆரம்பிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி … Read more

ஹிருணிகாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்(Video)

குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவு தலைவி ஹிருணிகா பிரேமச்சந்திரவை பொலிஸார் செல்லவிடாது தடுத்து நிறுத்தியுள்ளனர். ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான தரிந்து உடுவரகெதரவை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பாணையை கண்டித்து இன்று கொழும்பு கோட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹிருணிகா சென்றிருந்தார். குற்றவியல் விசாரணை திணைக்களம் அமைந்துள்ள இடத்தில் இருந்து பல மீற்றர் தூரத்தில் பொலிஸார் வீதித்தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், கோட்டை பகுதியில் சிறிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. … Read more

அடுத்த வாரம் முதல் வாரத்திற்கு 250 பேர் கொரியாவுக்கு ….

கொரியா மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் இலங்கையின் வதிவிடப் பணிப்பாளர் லீ மற்றும் கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று கடந்த 27ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் உள்ள கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்றது. தற்போது கொரிய மொழிப் பரீட்சையில் சித்தியடைந்து கொரியவில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இலங்கைத் தொழிலாளர்களை விரைவாக கொரியாவுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த வாரம் முதல் வாரத்திற்கு 250 … Read more

இந்தியாவில் சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு 

இந்தியாவில் நேற்றுடன் ஒப்பிடும்போது இன்றைய கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விபரத்தை இந்திய சுகாதாரத்துறை அமைச்சு இன்று  காலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது நேற்றைய பாதிப்பான 17 ஆயிரத்து 73-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 இலட்சத்து 18 ஆயிரத்து … Read more

முற்றாக முடக்கப்பட்டது இலங்கை! இறுதி முயற்சியில் தொக்கி நிற்கும் இலங்கையர்களின் வாழ்க்கை

மிகக் கடுமையான ஒரு பொருளாதார நெருக்கடியை இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய அழிவை இலங்கை சந்தித்திருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது. பொருளாதார நெருக்கடியின் கோரத்தை சாதாரண நிலையில் இருக்கும் மக்கள் முதற்கொண்டு, வசதிப்படைத்தவர்கள் வரை உணர்ந்துள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை. அதிகரிக்கும் சுமை அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, பொருட்கள் பற்றாக்குறை, எரிவாயு விலை அதிகரிப்பு, எரிவாயு வரிசை, பற்றாக்குறை, எரிபொருள் இன்மை, எரிபொருள் விலை அதிகரிப்பு, எரிபொருள் பற்றாக்குறை, சேவைக் … Read more