சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 47 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 47 பேரை இலங்கை கடற்படையினர் நீர்கொழும்பு கடற்பரப்பில் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் நேற்று  மேற்கொள்ளப்பட்ட  விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் உட்பட 34 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் வென்னப்புவ, நாத்தாண்டி, சிலாபம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் ஒரு வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் கடற்படையினர் … Read more

எரிபொருள் இருப்பு இல்லை! நாடு முற்றாக முடங்கிவிடும் என தகவல்

இலங்கையில் தற்போது ஒரு நாளுக்குத் தேவையான அளவில் கூட எரிபொருள் இருப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில நாழிதழ் ஒன்று இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. நாட்டிலுள்ள எரிபொருள் இதற்கமைய, நாட்டில் தற்போது 1100 தொன் பெற்றோல் மற்றும் 7 ஆயிரத்து 500 தொன் டீசல் மட்டுமே உள்ளன எனக் கூறப்படுகின்றது. இலங்கை கடனைச் செலுத்தத் தவறியதன் காரணமாக சர்வதேச நிறுவனங்கள் இலங்கையை மோசமாக ஆவணப்படுத்தியுள்ளன எனவும், … Read more

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான விமான சேவைகள் எதிர்வரும் முதலாம் ஆம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் ,நாடுகளுக்கிடையிலான விமான சேவைகள் எதிர்வரும் 01 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் ,துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சரவைக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 02.          யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்தல் அடிப்படை சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான … Read more

யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானப் பயணங்கள்! வழங்கப்பட்டுள்ள அனுமதி

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகளை எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகள் அடிப்படை சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகள் 2019 நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும், கோவிட் 19 தொற்று நிலைமையால் அதன் நடவடிக்கைகள் 2020 மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை தற்காலிகமாகப் பிற்போடப்பட்டிருந்தன.  விமானப் … Read more

2022.06.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

2022.06.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.) 01.          ஜனநாயக, சுபீட்சமான மற்றும் இடர்களை எதிர்கொள்ளக் கூடிய இயலுமை கொண்ட இலங்கைக்கான வேலைத்திட்டம் ‘ஜனநாயக நல்லாட்சி மற்றும் ஓருமைப்பாட்டுக்கான ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டம்’ மற்றும் ‘காப்பீட்டுப் பொருளாதார விருத்தியை ஏற்படுத்தும் வேலைத்திட்டம்’ ஆகியவற்றுக்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் ஐக்கிய அமெரிக்க … Read more

பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் மட்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்குமிடையில் விசேட சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எரிபொருள் பிரச்சினையின் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் கடமைக்கு தடங்கல்கள் ஏற்படாதவகையில் எரிபொருளினை விநியோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பிலும் தீர்க்கமான முடிவுகள் இதன்போது எட்டப்பட்டுள்ளன. Media Unit, – Batticaloa … Read more

யாழில் தனது பணத்தை முதலீடு செய்யவுள்ள தம்மிக்க பெரேரா! கடவுச்சீட்டு தொடர்பில் தகவல்

யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றில் கருத்து வெளியிடும் போது அவர் இநத விடயத்தை தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு ஒருநாள் சேவை இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும். இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும். தம்மிக பெரேரா அமைச்சராக பதவிப்பிரமாணம்  இதன்முதல் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் … Read more

கடற்பரப்புகளில் வானிலை ,கடல் நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜூன் 28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் … Read more

இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில்

ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 2022-23 கல்வியாண்டில் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு/பட்டப்பின்படிப்பு/கலாநிதி ஆகிய கற்கை நெறிகளை தொடர விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது. 2.       இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையுடன் திறமைவாய்ந்த இலங்கை பிரஜைகளை தெரிவு செய்து இந்திய அரசாங்கம் இப்புலமைப்பரிசில்களை வழங்குகிறது. 3.       இப்புலமைப்பரிசில் திட்டங்கள் முழுமையான கற்கைநெறி கட்டணம் மற்றும் கற்கைநெறிக் காலம் முழுவதற்குமான மாதாந்த செலவின … Read more