இலங்கையில் முற்றாக நிறுத்தப்படும் தனியார் பேருந்து சேவைகள்

இலங்கை முழுவதும் தனியார் பேருந்து பயணங்கள் இன்று முதல் முழுமையாக முடக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. எரிபொருள் இல்லாமையனாலேயே இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை பேருந்து சேவைகள் தடைப்படும் எனவும் அகில இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. Source link

இலங்கையில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் வளம் – அகழ்வாய்வு செய்ய நடவடிக்கை

நாட்டில் தேவையான அகழ்வாராய்ச்சிகள் மேற்கொண்டு எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் பெறுவதற்கான விரிவான வரைபடத்தை தயாரிக்குமாறு மின் மற்றும் எரிசக்தி அமைச்சக அதிகாரிகளுக்கு கோபா குழு அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் திட்டமிடப்பட்டுள்ள இயற்கை எரிவாயு அகழ்வுத் திட்டங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்த அமைச்சின் அதிகாரிகள், இந்த அகழ்வு நடவடிக்கைகளுக்கு பல்வேறு தடைகள் இருப்பதாக சுட்டிக்காட்டினர். இலங்கையில் கனியவளம் இந்த அகழ்வுப் பணிகளுக்கு வெளிநாட்டு ஆலோசனைகள் தேவையா என்பது குறித்தும், சம்பந்தப்பட்ட தரப்பினர் குறித்தும் இந்த … Read more

கொழும்பில் நீதிமன்ற வழக்குகளுக்காக தேடப்பட்டு வந்த நபர் நாட்டை விட்டு தப்பியோட முற்படுகையில் கைது

கொழும்பில் இரண்டு நீதிமன்ற வழக்குகளுக்காக தேடப்பட்டு வந்த நைஜீரிய பிரஜை ஒருவர் போலியான சீஷெல்ஸ் கடவுச்சீட்டுடன் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஊடாக நாட்டை விட்டு கம்போடியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து குறித்த நபர் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் கோலாலம்பூருக்குச் செல்லும் MH 178 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் … Read more

முடங்கும் நிலையில் இலங்கை – ஜனாதிபதி பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு

எரிபொருள் விநியோகத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை திட்டத்துடன் செலுத்துவதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் இணங்கியுள்ளார். அதுவரை தற்போதுள்ள நிதியைப் பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கைக்கு நீண்டகாலமாக எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகித்து வரும் பிரதான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (27) கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். எரிபொருள் விநியோகத்தை மீள வழங்குவதற்கு … Read more

அதிகாரப்பூர்வமற்ற முடக்கத்தை நாடு செயல்படுத்தியுள்ளது – அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்து வீட்டிலிருந்து பணிப்புரியும் காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அது நாடு முடக்கப்பட்டதாக அர்த்தமல்ல என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதும், அவர்கள் அந்தந்தப் பகுதிக்குள் இருப்பதை உறுதி செய்வதுமே இதன் நோக்கமாகும் என்றார். கடைகள், மருந்தகங்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் திறந்திருக்கும் என்று அமைச்சர் கூறினார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். … Read more

தென்னிந்திய திரைப்பட நடிகரின் கடிதத்திற்கு கடற்றொழில் அமைச்சர் பதில்

இடர்களை எதிர்கொள்ளும் இலங்கை வாழ் எமது மக்களுக்கு’உதவும் மனிதம்’ என்ற உணர்வெழுச்சியுடன் நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதை எண்ணி அகம் மகிழ்ந்து வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை வழங்குவதற்கு இலங்கை அரசின் அனுமதியை பெற்றுத்தருமாறு தமிழக திரை நடிகர் சே. லிங்கேஸ்வரன் (பிளாக் பாண்டி) கடற்றொழில் அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தமிழ் மக்களின் சார்பாகவும், இலங்கை அரசு சார்பாகவும் நெஞ்சம் … Read more

பட்டிப்பளையில் குடும்ப அட்டைக்கு எரிபொருள்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கின்ற அத்தியாவசிய பொருட்களை சகலருக்கும் கிடைக்கும் வகையில் பங்கிடுசெய்வதற்கு வசதியாக ஒரு குடுப்பத்தில் யாராவது ஒருவர்மட்டும் அட்டையினை பயன்படுத்தவும், எரிவாய்வு என்றால் ஒருமாதத்திற்கு ஒன்று என்ற வகையிலும் எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் மண்ணெண்ணெய் குறித்த அளவிலும் வழங்குவதற்கு என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு அமைவாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழ் பங்கீட்டு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டோக்கன்கள் வழங்கப்படும் நடவடிக்கைகள் ரத்து – எரிபொருள் தேடி வெளிநாடுகளுக்கு சென்ற அமைச்சர்கள்

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது எதிர்வரும் 10ஆம் திகதி வரை பொதுமக்களுக்கு எரிபொருளை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரண்டு மூன்று நாட்களுக்குள் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என நேற்று பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் வழங்கப்பட்டது. அந்த டோக்கன்களை பெற நேற்று மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவ்வாறான நிலையில், எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அமைச்சர்கள் … Read more

ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கான விலையில் ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி, எரிபொருள், எரிவாயு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல்

எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கான விலையில் ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி போன்றவற்றினால் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு இடையில் நடைபெற்றது. இன்று (27) மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில்  இன்று (27) இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது இப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தெடர்பாகவும், அதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இக்கலந்துரையாடலில், … Read more

உணவு தட்டுப்பாடு ஏற்படுமாயின் சுதாகரிக்கும் பக்குவமும் அனுபவமும் யாழ் மக்களிடம் உண்டு

ஒப்பீட்டளவில் தென்னிலங்கையை விட மாற்றீடுகளுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் நேற்றைய தினம் (26) குறிப்பிட்டுள்ளார். உணவு தட்டுப்பாடு ஏற்படுமாயின் அதனை முன்னே உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயற்படும் பக்குவமும் அனுபவமும் யாழ் மக்களிடம் உண்டு. பல இளைஞர்கள் விவசாயத்தில் நாட்டம் காட்ட ஆரம்பித்துள்ளார்கள். இவர்கள் வீட்டுத்தோட்டங்களை ஆரம்பித்து, தென்னைசார் கைத்தொழில்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். IT தொழில்துறையில் … Read more