நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு விழுந்த மற்றொரு அடி! சீனாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

இலங்கைக்கு பசளை வழங்குவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது.  இதன்படி, நிராகரிக்கப்பட்ட சீன பசளை கப்பலுக்கு பதிலாக புதிய கப்பல் ஒன்றை வழங்க முடியாது என்று சீனா அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை குறித்த சீன நிறுவனம் அதிகாரிளுக்கு வழங்கியுள்ளது.  அமைச்சரின் கோரிக்கை சீன நிறுவனம் சார்பில் நாட்டின் முகவர் நிறுவனம்  விவசாய அமைச்சில் அதிகாரிகள் சிலருடன் நடத்திய சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  எனினும், சீன பசளை நிறுவனம் அவ்வாறான அறிவிப்பை … Read more

காகித நகர் சிறுவர் பூங்காவிற்கு முன்னாள் அமைச்சர் மர்ஹும் முஹைதீன் அப்துல் காதரின் பெயர்

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள காகித நகர் கிராமத்தில் காகிதநகர் சிறுவர் பூங்காவிற்கு முன்னாள் அமைச்சர் மர்ஹும் முஹைதீன் அப்துல் காதரின்  பெயர் கடந்த காலத்தில் சூட்டப்பட்ட போதிலும்; அதற்கான பெயர் பலகை அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக பிரதேச சபையின்  உறுப்பினர்களான எம்.பி.ஜௌபர், எம்.பி.ஜெஸீமா ஆகியோர் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கமைய பெயர் பலகை நேற்று (25.06.2022) அமைக்கப்பட்டது. மேலும் காகிதநகர் வட்டார  உறுப்பினர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க குறித்த பூங்காவிற்கான மின் இணைப்பு, குடிநீர் வசதி, … Read more

புகையிரத சேவைகள் குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், புகையிரத சேவைகள் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  இதன்படி, புகையிரத சேவைகள் வழமை போல முன்னெடுக்கப்படும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.   தாக்கம் இல்லை புகையிரத,  சேவைகளை முன்னெடுப்பதற்கு எரிபொருள் விநியோகம் தொடர்பான கட்டுப்பாட்டினால் எவ்வித தாக்கமும் ஏற்படாது என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்து செல்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  அமைச்சரவை பேச்சாளர்,  அமைச்சர் பந்துல  குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   Source link

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம்: மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள்

தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இன்று (27) நள்ளிரவிலிருந்து ,ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பெற்றோலியக் கூட்டுத்தாபத்திடமுள்ள எரிபொருளை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் விநியோகிப்பதற்கு இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏனைய அலுவலக மற்றும் அலுவல்கள் வீடுகளில் இருந்தே மேற்கொள்வதற்கான ஆலோசனை வழங்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று (27)  மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியராளர் சந்திப்பில் அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,துறைமுகம் … Read more

இலங்கை முழுமையாக முடங்கும் ஆபத்து – 10ஆம் திகதி வரை அனைத்தும் நிறுத்தம்

இலங்கையில் மற்றுமொரு முடக்க நிலையை அறிவிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எரிபொருளுக்கு பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 10 திகதி நாட்டை முடக்கி வைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.  இலங்கையில் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே இயங்குவதற்கு எரிபொருள் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறை இன்று நள்ளிரவு முதல் ஜுலை மாதம் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்க வேண்டும் … Read more

கொழும்பில் எரிசக்தி அமைச்சின் செயலாளரை சுற்றிவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஆர்ப்பாட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் அவரது காருக்குள்ளேயே சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.  சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் குழு  இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சு வளாகத்தில் இன்று அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.  இரகசியங்களை வெளியிட முடியாது… தேக்கு கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தனியாரிடம் கையளிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தமை தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள்  அறிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  எனினும் அமைச்சரவை இரகசியங்களை … Read more

தீவிர நெருக்கடியில் இலங்கை! கோட்டாபயவை சந்தித்த அமெரிக்க உயர்மட்ட குழு வழங்கியுள்ள உறுதி

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும் திறைசேரி திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட அதிகாரிகள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், ஆசியாவுக்கான பிரதி உதவித் திறைசேரிச் செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலாளரான கெல்லி கெய்டர்லிங் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதியைச் சந்தித்து இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடினர். உதவி வழங்குவதாக உறுதி இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் … Read more

உச்சமடையும் எரிபொருள் நெருக்கடி நிலை! அரசாங்கத்தின் தொடர் முயற்சி பலனளிக்குமா..

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை கோரத் தாண்டவமாடி வருகின்றது.  எரிபொருளுக்கும், எரிவாயுவுக்கும், அத்தியாவசி உணவுப் பொருட்களும் பொதுமக்கள் வரிசையில் நின்று போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  ஒருவேளை உணவு என்பதே தற்போது பலருக்கு எட்டாக் கணியாக இருக்கின்ற நிலையே காணப்படுகின்றது.  ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலை ஒரு நாள் பணிக்குச் செல்வதற்காக  எரிபொருள் வரிசையில் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய கடும் துயரமான நிலையை தற்போது எதிர்கொண்டு வருகின்றோம்.   அதைவிட துயர் என்னவென்றால், எரிபொருள் வரிசையில் காத்திருந்து உயிரைவிட … Read more

அஜித் சொல்லி ஜெய் நடித்து மெகா ஹிட் படம், அவரே கூறிய உண்மை

ஜெய் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வாரம் பட்டாம்பூச்சி என்ற படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஜெய்யின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெய் சமீபத்தில் ஒரு பேட்டியில், ஆரம்பத்தில் தான் எந்த படத்தை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் இருந்தேன். அப்போது அஜித் சார் தான் சுப்ரமணியபுரம் படத்தை தேர்ந்தெடுத்தார், இதில் நடி என்று அவர் தான் சொன்னார். படமும் எனக்கு நல்ல பெயரை … Read more