எரிபொருள் விநியோகம் தொடர்பில் உறுதியாக தெரியவில்லை! காத்திருப்பதில் அர்த்தமில்லை – முக்கிய அறிவித்தல்
எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் எரிபொருள் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் அந்த சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார். வரையறுக்கப்பட்டமுன்பதிவே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிய அசௌகரியம் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு காரணமாக எரிபொருள் தாங்கி ஊழியர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கான … Read more