இலங்கையில் ,கொவிட் தொற்று மரணம்:அறிக்கை 26.06.2022
இலங்கையில் ,கொவிட் தொற்று மரணம்:அறிக்கை 26.06.2022
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கையில் ,கொவிட் தொற்று மரணம்:அறிக்கை 26.06.2022
இலங்கையில் இன்று (26) கொவிட் தொற்றுக்குள்ளாளோரின் எண்ணிக்கை 15
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் அடுத்த வாரமும் விடுமுறை வழங்கப்படுகின்றது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது. ஏனைய கிராமப்புற பாடசாலைகள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண கல்வி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. செவ்வாய் முதல் நிறுத்தப்படும் சேவைகள்! வெளியானது அறிவிப்பு முந்தைய அறிவிப்பு எரிபொருள் பிரச்சினை காரணமாக, நாடுமுழுவதுமுள்ள … Read more
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மூன்று மணித்தியால மின் துண்டிப்புக்கு அனுமதி அளித்துள்ளது. நாளை தொடக்கம் ஜூலை மூன்றாம் திகதி வரை இரு கட்டங்களாக மூன்று மணித்தியால மின் துண்டிப்பு அமுலாக்கப்படும். பகல் நேரத்தில் ஒரு மணித்தியாலம் மற்றும் 40 நிமிடங்களும், இரவு நேரத்தில் ஒரு மணித்தியாலம் மற்றும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பை அமுலாக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் பிரதான நகரங்கள் உட்பட அண்மித்த பிரதேசங்களில் டெங்கு நோய் அனர்த்த நிலை காணப்படுவதாக இரத்தினபுரி மாவட்ட தொற்று தொற்று நோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் அஜித் கோணார தெரிவித்தார். பலாங்கொடை ,எம்பிலிப்பிட்டிய,குருவிட்ட,எலபாத்த சுகாதாரப் பிரிவுகளின் நகர மற்றும் சுற்று பிரதேசங்களில் இந்நிலைமை அதிகமாக காணப்படுதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைப்பதை கட்டுப்படுத்தும் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத் தலைவர்களுக்கான அறிவிப்பு இதன்படி, எவ்வித இடையூறும் இன்றி தமது கடமைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான குறைந்தபட்ச ஊழியர்களை மாத்திரம் அழைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகத்தின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னேவினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. Source link
மீண்டும் அறிவிக்கும்வரை நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ,அத்தியாவசிய மற்றும் ஆகக்கூடிய கூழியர்களை கடமைக்கு அழைப்பதற்கு அனுமதி அளித்து அரச பொது நிருவாக அமைச்சு அரச சேவைகளை முன்னெடுப்பதற்கான புதிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது. தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு இடையூறாக இருக்கக்கூடாது எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது நிருவாகம் ,உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து விவசாயிகளும், வர்த்தகர்களும் மேலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தந்த சிலர் தெரிவித்துள்ளனர். இந்த மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறியின் அளவு பெருமளவில் குறைந்துள்ளது. பழவகைகளைக் கொள்வனவு செய்வதற்காக வருகை தரும் வர்த்தகர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. சடுதியாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை உற்பத்திகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாளை (27) முதல் ஜூலை 3ஆம் திகதி வரை 3 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு(PUCSL) இதனை அறிவித்துள்ளது. நேர விபரங்கள் அறிவிப்பு A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய பிரிவுகளுக்கு நண்பகல் வேலையில் இரண்டு மணி நேரம் மற்றும் நாற்பது நிமிடங்கள் மின்வெட்டு … Read more
எரிபொருளை விநியோகம் செய்வதற்கு டோக்கன் முறையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் திங்கட்கிழமை (27) முதல் நடைமுறைக்கு வரும் எனவும், இந்தச் செயற்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை காவல்துறை மற்றும் இலங்கை இராணுவத்தினரின் உதவிகள் பெறப்படும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். தாமதமான எரிபொருள் ஏற்றுமதி குறித்த சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த அமைச்சர், பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய் மற்றும் ஜெட் எரிபொருள் இறக்குமதியில் அமைச்சகத்தின் … Read more