அமெரிக்காவுக்காக ரஷ்யாவை தவிர்க்கும் இலங்கை
அமெரிக்காவை பகைத்துக்கொள்ளாமலிருக்க நாட்டு மக்களை பலியிடுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வரை எரிபொருள் வரிசையில் இருந்து பதிவாகும் மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாமலிருப்பது வேடிக்கையாகவுள்ளது என்றும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் புதிய அறிவிப்பு நாட்டின் பிரதான பிரச்சினை சமூக … Read more