அரசியலமைப்பின் 21A திருத்த சட்டத்தின் முதலாவது கட்ட நடவடிக்கை ஆரம்பம் – நீதி அமைச்சர் தெரிவிப்பு

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் பொது வாக்கெடுப்புக்கு செல்லாமல் நிறைவேற்றப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். “நடைமுறையில் சாத்தியமானதை நாங்கள் செய்கிறோம். ஒரு மசோதாவை உருவாக்குவதன் மூலம் நாம் மாயங்களின் பின்னால் ஓட வேண்டியதில்லை எனவும் நாட்டின் சூழ்நிலையில் இத்தகைய அனுபவம் நடைமுறைக்கு வராது என்பதால், அது மக்கள் வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்றும் ராஜபக்க்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார். நாடு தற்போது எதிர்நோக்கும் பல சவால்களை முறியடிக்கும் நீண்ட … Read more

பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான குழுவிற்கு இலங்கையின் வேட்பாளரான பேராசிரியர் ரங்கிதா டி சில்வா டி அல்விஸ் தெரிவு

2022 ஜூன் 23ஆந் திகதி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான சாசனத்தின் அரச தரப்புக்களின் இருபத்தி இரண்டாவது கூட்டத்தின் போது இடம்பெற்ற தேர்தலில், பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான ஐ.நா. குழுவிற்கு 2023-2026 காலப்பகுதியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பேராசிரியர் ரங்கிதா டி சில்வா டி அல்விஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில், சாசனத்திற்கான அரச தரப்புக்களால் பரிந்துரைக்கப்பட்ட 23 வேட்பாளர்களில் 12 உறுப்பினர்கள் … Read more

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய திட்டங்கள்

இலங்கையில் பொருளாதார ரீதியில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து டொலரை ஈட்டுவதற்கான பல்வேறு வழிமுறைகளை இலங்கை அரசாங்கம் கையாண்டு வருகிறது. இதனடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளில் ஈடுபடும் இலங்கையர்கள் ஆகியோருக்கான விசேட புதிய திட்டங்களை இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது.  விசேட கடன் திட்டம் இந்த நிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிலுள்ள எந்தவொரு வர்த்தக வங்கிக்கும் வெளிநாட்டுப் பணத்தை அனுப்புவதன் ஊடாக பெறக்கூடிய அனுகூலம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.  அதன்படி இவர்களுக்கான விசேட கடன் … Read more

சதோச விற்பனை நிலையத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் திடீர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் 24 திகதி மட்டக்களப்பு சதோச விற்பனை நிலையத்திற்கு திடீர் விஜயமொன்றை மோற்கொண்டார். இதன்போது கையிருப்பிலுள்ள பொருட்கள், பற்றாக்குறையாக உள்ள பொருட்கள் விலைகள் என்பவற்றை கேட்டறிந்துகொண்டதுடன் இவ்விடயம் தொடர்பில் உரிய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் பற்றாக்குறையாக உள்ள பொருட்களை உடன் பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார். நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் மட்டக்களப்பு மக்களின் நன்மை கருதி உடனடி நடவடிக்கைகளை … Read more

பலத்த மழைவீழ்ச்சி, காற்றுடனான காலநிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜூன் 25ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலிய, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி ,கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான … Read more

வவுனியாவிலிருந்து கனடாவிற்கு – வளர்ந்து நிற்கும் தமிழ் இளைஞன்

“பச்சை குத்துதல்” என்றதும் நம் நினைவுக்கு வருவதென்ன? நம் வீட்டில் வாழ்ந்த பாட்டனும், பாட்டியும், பூட்டனும் பூட்டியும்தானே. தம் உடலின் ஏதாவதொரு பாகத்தில் தாம் விரும்பிய கடவுளரையோ, உறவினர் பெயரையோ, பறவைகளின் உருவத்தையோ பச்சை வர்ணத்தில் தசையின் உட்பக்கமாக வரைந்திருப்பர். இதை ஏன் குத்தினீர்கள் என்றெல்லாம் யாரும் கேட்டிருப்பதில்லை. தப்பித்தவறி கேட்டிருப்பிருனும், “அது அந்தக் காலத்தில் குத்தினது” எனச் சுருக்கமாக ஒரு பதிலைத்தான் நம் முத்தவர்கள் தருவது வழமை. ஆனால் இந்தப் பச்சை குத்துதல் எனப்படும் உடலில் … Read more

இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நன்றி தெரிவிப்பு

இந்திய – தமிழக அரசின் உதவிப்பொதிகள் தாங்கிய இரண்டாவது பாரிய கப்பல் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளது. எமது மக்களுக்காக தொடர்ச்சியாக உதவிகளை மேற்கொண்டுவரும் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கை நாணயத்தில்  3 பில்லியன்  ரூபாவிற்கும் அதிக பெறுமதி மிக்க மனிதாபிமானஉதவி பொருட்களுடனான கப்பல் தூத்துக்குடியிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 14,700 மெட்ரிக்தொன் … Read more

பொருளாதார நெருக்கடி இதுவே காரணம்! சம்பந்தன் வெளியிட்ட தகவல்

எழுபத்து நான்கு வருடங்களாக எந்த அரசாங்கமும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்காததன் விளைவாகவே இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலை ஒருமுறை அல்ல, படிப்படியான செயல் என்று கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்த நிலையிலும் அரசாங்கம் பொருளாதாரப் படுகுழியில் இருந்து மீள சில அரசியல் கட்சிகளின் … Read more

பிரிட்டனில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள்

பிரித்தானியாவில் இருந்து இரண்டு கொள்கலன்களில் நாட்டிற்கு கடத்தப்பட்ட ஐந்து சொகுசு கார்கள், ஒருதொகை வெளிநாட்டு மதுபானம் மற்றும் ஒருதொகை மசகு எண்ணெய் ஆகியவற்றை இலங்கை சுங்கப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கார்கள் உள்ளிட்ட பொருட்களின் பெறுமதி 150 மில்லியனுக்கும் அதிகமாகும் என்று இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளரும் பிரதி சுங்கப் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார். சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, ​​மற்றொரு கொள்கலனில் இரண்டு பென்ஸ் கார்கள், ஒரு BMW கார் மற்றும் … Read more