எரிபொருள் விநியோகம் குறித்து எரிசக்தி அமைச்சின் விசேட அறிவிப்பு

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.  நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் எரிபொருள் இல்லாமல், எரிபொருள் வரிசையில் காத்திருந்து பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.  எரிபொருள் ஏற்றிவரும் கப்பல்  இந்த நிலையில் பெட்ரோல் ஏற்றி வரும் கப்பலொன்று எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.  இந்த கப்பலில் 35,000 மெட்ரிக் டன் பெட்ரோலை ஏற்றி வரப்படுவதாக … Read more

இலங்கை வங்கி வரி முன் இலாபத்தை ஈட்டியுள்ளது…

இலங்கை வங்கி வரலாற்றில் இல்லாதவாறு 43 பில்லியன் ரூபாய் வரி முன் இலாபத்தை ஈட்டியுள்ளது. இலங்கை வங்கியின் 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை இம்மாதம் 10ஆம் திகதி கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்த இந்த அறிக்கையை ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பித்தார். கடன் திட்டங்களை விரிவுபடுத்துவதன் மூலமும், நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வாடிக்கையாளர்களுக்கு நெருங்கிய சேவையை வழங்கியதன் மூலம் குறித்த இலக்கு … Read more

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா கால வரையறை இன்றி பின்போடப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பட்டமளிப்பு விழாவை பின்போட நேர்ந்ததாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. போக்குவரத்துப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டதும், பட்டமளிப்பு விழாவிற்கான புதிய திகதி தீர்மானிக்கப்படும் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்குரிய பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 29ஆம்இ 30ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கடும் வீழ்ச்சியை பதிவு செய்யும் ரூபாவின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த இரு தினங்களை விட அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது. இதன்படி,  அமெரிக்க டொலரொன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 367.73 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேசமயம்,  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 357.28 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை,  நேற்றையதினம் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 366.83 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 356.28 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. … Read more

ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்  

ருவாண்டாவின் கிகாலியில் 2022 ஜூன் 21 முதல் 25 வரை நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கலந்துகொள்ளவுள்ளார். ருவாண்டாவில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பொதுநலவாயத்தின் ஐம்பத்து நான்கு (54) உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளும். அதி மாண்புமிகு ராணி எலிசபெத் II ஐப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளவுள்ள மாண்புமிகு வேல்ஸ் இளவரசரின் முன்னிலையில், பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு ஜூன் … Read more

கொழும்பு பயிர்ச் செய்கை புரட்சிகர திட்டம்

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடியை சமாளித்து உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,அரச மற்றும் தனியார் துறைகளும் மதஸ்தலங்களும் இந்த வேலைத்திட்டங்களில் கைகோர்த்துள்ளன. வயோதிப இல்லங்களுக்குச் சொந்தமான காணிகளும் பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்படும்.கொலன்தொட்ட பயிர்ச்செய்கை புரட்சி என்ற பெயரில் 3 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட விவசாய … Read more

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்திய யோசனைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

அமைச்சரவை அனுமதி வடக்கு – கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  ஆழமற்ற கடற்பகுதியில் கடலட்டை உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதற்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடலட்டை உயிரின வளர்ப்பு கருத்திட்டம் வெளிநாட்டு செலாவணி ஈட்டுவதை அதிகரித்தல் மற்றும் மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு, வணிக ரீதியான கடலட்டை உயிரின … Read more

யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் செயற்பட வேண்டும்

யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் தத்தம் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் செயற்படவேண்டும் என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (20) யாழ் மக்களுக்கான எரிபொருள் விநியோகம், அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலில் இவ்வாறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஊடகங்களுக்கு  தெரிவித்தார். நாளாந்த கையிருப்பு தகவல்கள் … Read more

யாழ்ப்பாணம் – இந்தியாவுக்கு இடையிலான விமான சேவை – கட்டணங்களால் அதிர்ச்சியடைந்த பயணிகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜுலை மாதம் முதலாம் திகதி மீளவும் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் அறிவிக்கப்பட்டுள்ள விமானக் கட்டணத்தை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என யாழ்ப்பாண மக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணம் – திருச்சிக்கு இடையான ஒருவழி பயணத்திற்கான விமான கட்டணம் 40,000 ரூபாயாகும், சென்னை – யாழ்ப்பாணம் இடையே 50,000 ரூபாயாகவும் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானக் கட்டணங்கள் பயணிக்க முடியாத அளவுக்கு … Read more

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு அவசர அறிவித்தல்

இலங்கையிலிருந்து வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கு அவசர அறிவித்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. பணம், கடவுச்சீட்டு அதன்படி எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு முன்னர் குறித்த நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அவசர அறிவுறுத்தலை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ளது. அவதானம்..! வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி  இந்த விடயம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ள செய்திக் குறிப்பில், உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரங்கள் … Read more