வெளிநாட்டு நாணயத்தில் மாத்திரம் எரிபொருள் விநியோகம் – நிமல் பியதிஸ்ஸ எம்.பி யோசனை

வெளிநாட்டு நாணயத்தில் மாத்திரம் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தை முன்பதிவு செய்வதன் மூலம் குறைந்தது முன்னூறு அல்லது நானூறு டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடு முழுவதும் பலரிடம் குறிப்பிட்ட அளவு வெளிநாட்டு நாணயம் உள்ளது. சுற்றுலாத் துறையில் ஒரு முன்னாள் வழிகாட்டியிடம் சிறிய அளவு வெளிநாட்டு … Read more

இலங்கையில் தொடரும் நெருக்கடி – ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி

மின்சாரம் வழங்கல், பெற்றோலியப் மற்றும் எரிபொருள் விநியோகம், வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம் 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம் ஜனாதிபதி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் … Read more

நாட்டை தன்னிடம் ஒப்படையுங்கள் – சஜித் கோரிக்கை

மக்களுக்கு மேலும் அசௌகரியம் ஏற்படாத வகையில் நாட்டை தன்னிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். ‘நாட்டைக் காப்பாற்றும் வாரம்’ என பெயரிடப்பட்டுள்ள போராட்ட வாரம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தன்னிடம் இருப்பதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி குறுகிய காலத்திற்குள் புதிய ஆணையை வெளியிட்டு ஐந்தாண்டுகள் … Read more

வி.எம்.எஸ். கருவிகளை பொருத்தும் செயற்பாட்டினை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வு

இலங்கையில் உள்ள பலநாள் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு அவுஸ்ரேலிய நிதியுதவியுடனும் ஐ.ஓ.எம். அமைப்பின் ஒத்துழைப்புடனும் ஆரம்பிக்கப்பட்ட வி.எம்.எஸ். எனப்படும் படகு கண்காணிப்புக் கருவிகளை பொருத்தும் செயற்பாட்டினை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பாக இலங்கைக்கான ஐ.ஓ.எம். பிரதிநிதியுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். குறித்த வேலைத் திட்டத்தின் ஊடாக சுமார் 4000 இற்கும் மேற்பட்ட பலநாள் கலன்களுக்கு வி.எம்.எஸ். கருவிகளை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், முதலாவது கட்டத்தில் 1440 பலநாள் கலன்களுக்கு மாத்திரமே குறித்த கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. … Read more

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அவுஸ்திரேலியாவில் இருந்து பணம் அனுப்புவதற்கு விதிக்கப்படும் 6 டொலர் கட்டணத்தை விடுவிக்க அவுஸ்திரேலியாவின் காமன்வெல்த் வங்கி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11ம் திகதி வரை இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நிய செலாவணி பணத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய அமைச்சர் இதேவேளை, அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளேர் ஓ நீல் (Clare O’Neil) இன்று இலங்கை வந்துள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்திற்குள் இருந்துக்கொண்டு … Read more

சுகாதார ஊழியர்கள் எரிபொரளை பெற்றுக் கொள்வதற்கு விசேட பொறிமுறை

தற்போதைய நெருக்கடி நிலைமையில் சுகாதார ஊழியர்கள் எரிபொரளை பெற்றுக் கொள்வதற்கான விசேட பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் இதற்கென ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வெள்ளிக்கிழமை தோறும் சுகாதார ஊழியர்கள் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் அடையாளத்தை … Read more

அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர், இலங்கை பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உள்துறை மற்றும் இணையப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ கிலையார் ஓ நீல் இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் இன்று (ஜூன் 20) சந்தித்தார். இதேவேளை, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலியினால் அழைத்துவரப்பட்ட  உயர்மட்ட தூதுக்குழுவை பாதுகாப்பு செயலாளர்  ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றார்.  அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற வட்டமேசை கலந்துரையாடலின் போது  இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை … Read more

எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வரிசைகளில் நின்று எரிபொருள் பெற்றுக் கொள்ளும் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையில் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் வரிசையில் நின்று எரிபொருளைப் பெற்றுக் கொள்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல மணித்தியாலங்கள் வரிசையில் நின்று எரிபொருளைப் பெற்றுக் கொண்ட மக்கள் தற்போது இரண்டு நாட்களாக காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.   … Read more

மலேசிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் உறவுகளை வலுப்படுத்தும் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம்

ஜெனரல் சேர் ஜான் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) மலேசியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் (NDUM) இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொண்டது. இதன்போது ஆசியான் பிராந்திய மன்றம் (ARF) மற்றும் பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டம் (HDUCIM) ஆகியவற்றில் கலந்துக்கொள்வது தொடர்பாக கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இரு நிறுவனங்களுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும் பல்கலைக்கழக தூதுக்குழுவினர் இந்த … Read more