தீர்ப்பு வரும் வரை, பதவியேற்க போவதில்லை என்று தம்மிக்க பெரேரா அறிவிப்பு!

உறுதி வழங்கிய தம்மிக்க தனது நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் தொடர்பில் முடிவெடுக்கும் வரையில் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ சத்தியப்பிரமாணம் செய்யப்போவதில்லை என்று தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா உயர் நீதிமன்றில் உறுதியளித்துள்ளார். தமது நாடாளுமன்ற உறுப்பினர் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ஐந்து அடிப்படை உரிமை மனுக்கள் இன்று திங்கட்கிழமை, உயர்நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோதே அவர் இந்த உறுதியை வழங்கினார். நாளை மனுக்கள் பரிசீலனை உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட … Read more

இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் , அரச வருமானத்தில் அதிக பங்களிப்பை வழங்கும் நிறுவனங்களில் தொழிநுட்பத்தை…

அரசாங்க கணக்குகள் பற்றிய (கோபா) குழு பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் (16) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ திஸ்ஸ விதாரண அவர்களாவர். நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு, இலங்கை மதுவரித் திணைக்களம், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் மற்றும் இலங்கை தகவல்  தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் (ICTA) ஆகிய … Read more

கோட்டாபயவுடனான மோதல் தீவிரம் – பணியாற்ற முடியாத நிலையில் ரணில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இடையிலா பனிப்போர் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில வாரங்களுக்கு முன்பு மத்திய வங்கியின் ஆளுநராக தினேஷ் வீரக்கொடியையும், மக்கள் வங்கியின் தலைவராக சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்காரவையும், இலங்கை வங்கியின் தலைவராக சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவையும் நியக்குமாறு பிரதமர் பரிந்துரை செய்துள்ளார். அனுமதி வழங்க மறுப்பு குறித்த பதவிகளுக்கான பரிந்துரை கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த போதிலும் இதுவரையில் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. … Read more

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலய திருப்பணிச் சபை நன்றி தெரிவிப்பு

தேவாரப் புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வில் தென்னிந்தியாவில் இருந்து அடியவர்கள் கலந்து கொள்ளும் வகையில் பலாலி – திருச்சி மற்றும் சென்னை போன்ற விமான நிலையங்களுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தினை மீண்டும் ஆரம்பிதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவித்துள்ள ஆலய திருப்பணிச் சபையினர், கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறும் கடற்றொழில் அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், ஜூலை 6 ஆம் திகதி நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள், இம்மாதம் 30 … Read more

நுவரெலியாவில் 500 உணவுப் பாதுகாப்புப் களஞ்சியங்கள்

நுவரெலியா மாவட்டத்தில் கிராம மட்டத்தில் 500 உணவு பாதுகாப்பு களஞ்சியங்களை நிறுவும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்ட நிகழ்வு விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமாரஇ நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட ஆகியோரின் தலைமையில் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கலுகல கிராம சேவையாளர் அலுவலக வளாகத்தில் 18ஆம் திகதி இடம்பெற்றது. நுவரெலியா மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உலர் உணவு பொருட்களை பாதுகாத்தல்இ நிலையான விதைகளை சேகரித்தல்இ தண்டுகளை நடவு செய்தல்இ தோட்டக்கலைஇ வாராந்த … Read more

போர் தீவிரமாக இடம்பெற்று வரும் உக்ரைனில் கோட்டாபயவுக்கு எதிர்ப்பு

உக்ரைனில் இடம்பெறும் போருக்கு மத்தியில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு வெளியிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. உக்ரைன் இராணுவத்துக்காகப் போரிடுவதாகக் கூறப்படும் இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். “கோ ஹோம் கோட்டா” என குறிப்பிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான பதாகையை ஏந்தியவாறு அவர் காணப்பட்டுள்ளார். கடந்த மாதம் எடுக்கப்பட்ட இந்தப் படம் தற்போத பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. Source link

இலங்கையில் நடந்த தமிழ் திருமணம் ஒன்றில் கொடுக்கப்பட்ட வித்தியாசமான பரிசு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, விலை உயர்வு, வரிசைகளில் காத்திருத்ததல் என பொதுமக்கள் கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.   குறிப்பாக எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகளில் பொதுமக்கள் பல மணிநேரங்களாக காத்திருந்து எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்வனவு செய்து சென்ற நிலையில் தற்போது மணித்தியாலங்கள்  நாட்களாக மாறி பல நாட்கள் பொதுமக்கள் வரிசையிலேயே காத்திருக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.   இலங்கையில் தமிழர்கள் வகுக்க வேண்டிய மாற்று வியூகம்!  … Read more

கொழும்பின் முக்கிய பகுதியில் கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு (Live)

பலத்த பாதுகாப்பு கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் பெருமளவான பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த தினத்தை கறுப்பு தினமாக அனுஸ்டித்து காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் ஏனைய இரண்டு நுழைவாயில்களையும் நேற்று நள்ளிரவில் முற்றுகையிட்டிருந்தனர். இதன்போது போராட்டக்காரர்கள் நுழைவாயில்களுக்கு முன்பாக கூடாரங்களை அமைத்து விண்ணதிரும் கோஷங்களுடன் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். பிறந்த நாளை கொண்டாடும் கோட்டாபய ராஜபக்ச! குவிக்கப்பட்டுள்ள பெருமளவான இராணுவத்தினர்  … Read more

கறுப்பு சந்தை வர்த்தகத்தினால் மூடப்படும் அபாயத்தில் வைத்தியசாலைகள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எரிபொருள் வழங்குவதில் சுகாதார சேவைப் பிரிவினருக்கு மறுக்கப்பட்டுள்ள முன்னுரிமை நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெல்லன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் வழங்குவதில் சுகாதார சேவைப் பிரிவினருக்கு முன்னுரிமை அளிப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தபோதிலும், இதுவரையிலும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவைப்பணியாளர்களின் வருகை வீழ்ச்சி இதன் காரணமாக பல மணிநேரம் வீதிகளில் எரிபொருளுக்காக காத்திருந்து வைத்தியசாலைக்கு … Read more