இலங்கை மக்களின் நேர்மையைக் கண்டு வியந்து போன வெளிநாட்டு பெண்! நெகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட சுற்றுலாப்பயணி (Video)

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் இலங்கையரின் செயலை கண்டு வியப்படைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.   தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு சுற்றுலா  வந்த பெண், கண்டி நகருக்கு பொது போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்றில் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு தனது பையை பேருந்தில் மறந்து விட்டு இறங்கி சென்றுள்ளளனர். பேருந்தும் கொஞ்ச தூரம் சென்ற போது தான் பை தவற விட்டத்தை குறித்த பெண் கண்டுபிடித்துள்ளார். வெளிநாட்டு பெண்ணுக்கு அதிர்ச்சி  தவறவிட்ட பைக்குள் 1000 டொலர், … Read more

எரிபொருள் விநியோகத்தில் புதிய முறைமை

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும் துறைகள் தவிர்ந்த ஏனைய வாகனங்களுக்கு இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் படி வாரத்திற்கு இரு முறை எரிபொருள் வழங்கும் புதிய முறைமையொன்றை உருவாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். போக்குவரத்து பேருந்துகள், பாடசாலை சேவைகள் தனியார் ஊழியர்களின் போக்குவரத்து சேவைகள் மற்றும் சுற்றுலா சேவைகள் ஆகியவற்றுக்கும் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக எரிபொருள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயலாளர் நாயகம் மற்றும் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா, கொரியக் குடியரசு, ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகளை சந்தித்தார். மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் திருமதி மிச்செல் பச்லெட் உடனான சந்திப்பின் போது, மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச அமைப்புடன் இலங்கை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் … Read more

இலங்கையில் நீண்ட நேர மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கைக்குத் தேவையான நிலக்கரி கொள்வனவு உரிய முறையில் நடைபெறாது போனால் அடுத்த ஆண்டில் நீண்ட நேர மின்வெட்டை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க ஊடக சந்திப்பொன்றில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். நிலக்கரி கையிருப்பு தற்போதைக்கு கையிருப்பில் இருக்கும் நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாத நடுப்பகுதிக்குள்ளாக தீர்ந்து விடும். எத்தனை மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்…! அமைச்சர் விளக்கம்  அதற்குப்பின்னரான பயன்பாட்டுக்கு நிலக்கரி கொள்வனவு செய்யப்பட வேண்டும். நீண்ட … Read more

இன்று முதல் அரச ஊழியர்கள் சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக இன்று (20) முதல் அரச ஊழியர்கள் சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. அலுவலக செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள குறைந்த அளவான பணிக்குழாமை சேவையில் ஈடுபடுத்துவதற்கான அதிகாரம் நிறுவனப் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என்றும் ,அத்தியாவசிய சேவைகளை வழமை போன்று முன்னெடுக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு நிறுவனங்களின் தலைவர்களுக்கு … Read more

உக்ரைன் வீரர்களை சிறைபிடித்துள்ள ரஷ்ய படைகள்

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போர் மூன்று மாதங்களை கடந்துள்ள நிலையில், ரஷ்ய படை வீரர்கள் தொடர்ச்சியாக தாக்குதலை தீவிரப்படுத்தித வருகின்றனர். இந்நிலையில், மரியுபோல் உருக்காலையை பாதுகாக்கும் போது ரஷ்ய படைகளிடம் சிக்கிய உக்ரைன் நாட்டின் முக்கிய தளபதிகள் 2 பேர் விசாரணைக்காக ரஷ்யா அழைத்து வரப்பட்டுள்ளனர். மரியுபோல் உருக்காலையில் பதுங்கி தாக்குதல் நிகழ்த்தி வந்த அசோவ் படைப்பிரிவை சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்களை ரஷ்ய படைகள் சிறை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. … Read more

தலசீமியா (Thalassemia) நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் : இரத்ததானம் வழங்கும் முகாம்

பெற்றோர்கள் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கவே விரும்பினாலும் பெற்றோர்களிடமிருந்து மட்டுமே பிள்ளைகள் பெறக்கூடிய் நோய் ஒன்று உண்டு என்றால் அது தலசீமியாதான். தலசீமியா அல்லது தலசீமியா (Thalassemia) என்பது பின்னடையும் தன்மையுள்ள மரபு சார்ந்த இரத்த நோய் ஆகும். தலசீமியாவில், மரபு குறைகள் ஹீமோகுளோபினைச் சேர்ந்த குளோபின் சங்கிலியின் குறைந்த சேர்க்கை வீதத்தால் ஏற்படுகிறது. ஒரு வகையான குளோபின் சங்கிலியின் குறைந்த சேர்கையால் இயற்கைக்கு மாறான மூலக்கூறுகள் ஏற்படுவதுக்கு வாய்ப்பு உண்டு. அதன் காரணமாக அனீமியா என்கிற … Read more

கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகள் நடைபெறும்: கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர்

சமகால பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் நாளை (20) திங்கட்கிழமை முதல் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும் வழமைபோல நடைபெறும் என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார். இன்று (19) மாலை கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் திசாநாயக்க மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் புள்ள நாயகம் ஆகியோர் கிழக்கிலுள்ள 17 வலயக்கல்விப் பணிப்பாளர்களோடும் “சூம்” முறையிலான தொழில்நுட்பத்துடன் இணைந்து கூட்டத்தை நடத்தி மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர். இணையவழி … Read more